பார்த்த,படித்த செய்திகள்

பென் டிரைவ் வைரஸ்கள்… அழிப்பது எப்படி?.

Sunday, June 02, 2013



பென் டிரைவ் வைரஸ்கள்… அழிப்பது எளிது
வைரஸ்கள்  பென்ட்ரைவ் மூலமாக அதிகம் பரவுகின்றன.பென்ட்ரைவ் மூலம் பரவும் வைரஸ்களில் Ravmon.exe,New Folder.exe, svchost.exe,Autorun.inf என்பன குறிப்பிடதக்கவை.இவற்றை எந்த Antivirus மென்பொருளும் எளிதில் அடையாளம் கண்டு இந்த வைரஸ்களை அழிக்க முடிவதில்லை. பென்ட்ரைவ் மூலம் பரவும் இந்த வைரஸ்களை அழிப்பதற்கு பின் வரும் முறையை முயன்று பார்க்கலாம்.
Start – Run – Cmd  என டைப் செய்து command prompt-ஐ திறந்து கொள்ளுங்கள். பென் டிரைவுக்குரிய ட்ரைவ் எழுத்தை டைப் செய்து Enter செய்யவும் [உதாரணமாக H:] இந்த ட்ரைவ் லெட்டர் கணினிக்கு கணினி வேறுபடலாம்.
அடுத்து dir/w/h என டைப் செய்து Enter key-ஐ அழுத்தவும். பென் டிரைவிலுள்ள அனைத்து பைல்களையும் காண்பிக்கும்.அதில் Ravmon.exe,New Folder.exe, svchost.exe,Autorun.inf என்ற எதேனும் ஒரு பைல் இருந்தால் பென் டிரைவ் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளது என உறுதி செய்து கொள்ளலாம்.
அடுத்து command prompt-ல் attrib &r &a &s &h *.* என டைப் செய்து Enter செய்யுங்கள்.இதன் மூலம் பென்டிரைவிலுள்ள  அனைத்து பைல்களினதும் Read Only, Archive, System, Hidden பண்புகள் அகற்றப்படும். அடுத்து command prompt-ல் del filename [உதாரணம்:Del autorun.inf ] என type செய்து சந்தேகத்திற்கிடமான ஒவ்வொரு File-களையும் அழித்துவிடுங்கள்.
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP