பார்த்த,படித்த செய்திகள்

ஆதார் அட்டையை பதிவிறக்கம் செய்ய வாய்ப்பு :

Sunday, February 02, 2014

 "ஆதார் அடையாள அட்டை, தபால் மூலமாக வழங்கப்பட்டு வருகின்றன. தேவைப்பட்டால், இணைய தளம் வாயிலாக, ஆதார் அட்டைகளை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
ஆதார் பதிவு செய்தவர்களுக்கு, இரண்டு மாதத்துக்குள் டில்லியில் உள்ள தலைமை அலுவலகத்தில் இருந்து, அவரவர் வீடுகளுக்கு தபால் மூலம் ஆதார் அட்டை அனுப்பி வைக்கப்படுகிறது. மொபைல் எண் குறிப்பிட்டிருந்தால், அட்டை தயாரானதும், எஸ்.எம்.எஸ்., அனுப்ப வழிவகை செய்யப்பட்டுள்ளது. சிலருக்கு ஆதார் அட்டைகள் கிடைத்திருந்தாலும், பெரும்பாலானவர்களுக்கு இதுவரை அட்டை குறித்த விவரம் இன்னும் கிடைக்கவில்லை. அதனால், ஆதார் பதிவு செய்துவிட்டு, அடையாள அட்டைக்காக காத்திருப்பவர்கள், இணைய தளம் மூலமாக அட்டையை பதிவிறக்கம் செய்து கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.


மொபைல் போன் மூலமாக, எஸ்.எம்.எஸ்., அனுப்பினால், ஆதார் அட்டை குறித்த தகவல் அனுப்பப்படுகிறது. resident.uidai.net.in/web/resident/chekaadhaarstatus என்ற இணைய தள முகவரியில் சென்று தங்களது கார்டு விவரங்களை கண்டறியலாம். 
ஆதார் அட்டை பதிவை உறுதி செய்த பிறகு,eaadhaar.uidai.gov.in என்ற முகவரி மூலமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சரியான விவரங்களை கொடுத்திருந்தும், அட்டை தவறாக இருந்தால், resident.net.in/updatedata என்ற இணைய தள முகவரியில் சென்று, விவரங்களை சரிசெய்து, பிறகு பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
நாடு முழுவதும், ஒவ்வொரு தனிநபருக்கும் தனித்தனியாக ஆதார் எண் வழங்கப்படுவதால், தபால் மூலமாக அட்டை கிடைக்க தாமதம் ஏற்பட்டாலும் கூட, இணைய தளத்தின் மூலமாக பதிவிறக்கம் செய்தும் பயன்படுத்தலாம். மேலும் விவரங்களுக்கு, 1800 300 9147 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம். இருப்பினும், பதிவு முகாம்களில் வழங்கப்பட்ட ஒப்புகை சான்றுகளை பத்திரமாக வைத்திருக்க வேண்டும், என்றனர்.

எஸ்.எம்.எஸ்., எப்படி? மொபைலில், uid (இடைவெளி) status (இடைவெளி) என்று டைப் செய்தபின், பதிவு முகாமின்போது வழங்கிய ஒப்புகை சீட்டில் உள்ள 14 இலக்க எண்ணை டைப் செய்து,51969 என்ற எண்களுக்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். சிறிது நேரத்தில், ஆதார் அட்டை தொடர்பான தகவல் அனுப்பப்படுகிறது.
நன்றி - தினமலர்
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP