பார்த்த,படித்த செய்திகள்

குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பயனாளர்களுக்கு எச்சரிக்கை

Monday, February 24, 2014

தங்களுடைய கம்ப்யூட்டர்களில், கூகுள் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களைப் பயன்படுத்துவோர், உடனே அவற்றினை தற்போதைய பதிப்புடன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என, இந்தியாவில், இணையத் தாக்குதல்களுக்கு எதிரான அமைப்பாக இயங்கி வரும்-Computer Emergency Response Team of India (CERTIn) மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
 இந்திய இணைய வெளியில், ஹேக்கிங் என அழைக்கப்படும் கம்ப்யூட்டரை வைரஸ் அல்லது மால்வேர் மூலம் கைப்பற்றும் தொழில் நுட்பத்திற்கு எதிரான எச்சரிக்கைகளை இந்த அமைப்பு வழங்கி வருகிறது.
இந்த இரண்டு பிரவுசர்களையும் மையமாகக் கொண்டு பல வைரஸ்கள் முடுக்கி விட்டிருப்பதாக இந்த மையம் அறிவித்துள்ளது. இவற்றிலிருந்து தப்பிக்க, இந்த பிரவுசர்களின் இன்றைய பதிப்பிற்கு அனைவரும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
குறிப்பிடப்படும் வைரஸ்கள், இந்த பிரவுசர்கள் வழியாகக் கம்ப்யூட்டரை அடைந்து தங்கள் வேலையைக் காட்டும் போது, தேவையற்ற பைல்கள், இணையத்திலிருந்து டவுண்லோட் செய்யப்படும். கம்ப்யூட்டரின் மெமரி கரப்ட் ஆகும். தனிநபர் தகவல்கள், நிதி சார்ந்தது உட்பட, திருடப்பட்டு, வைரஸை அனுப்பிய ஹேக்கர்களுக்குச் செல்லும்.
பயர்பாக்ஸ், தண்டர்பேர்ட் மற்றும் ஸீ மங்க்கி பயன்படுத்துபவர்கள் உடனடியாக அப்கிரேட் செய்திடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பயர்பாக்ஸ் பதிப்பு 27.0 க்கு முந்தைய பதிப்புகள் வைத்து இயக்குபவர்களும், தண்டர்பேர்ட் பதிப்பு 24.3 க்கு முன் வைத்திருப்பவர்களும், ஸீ மங்க்கி பதிப்பு 2.24 க்கு முன் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருபவர்களும், கூகுள் குரோம் பதிப்பு 32.0.1700.102க்கு முந்தையதை வைத்திருப்பவர்களும், கட்டாயம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி-தினமலர்
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP