பட்டா,சிட்டா,அடங்கல் என்றால் என்ன?.
சொத்து
பரிமாற்றம் என்பது, ஏதோ இரு நபர்களுக்கு இடையிலான கொடுக்கல்
வாங்கல் நிகழ்வாக மட்டுமில்லாமல், அது நாட்டின் பொருளாதார வளர்ச்சியின்
முக்கிய அளவுகோலாக பார்க்கப்படும் வகையில் முக்கியத்துவம் பெற்றுவிட்டது.
எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.
எனவேதான், இத்தகைய பரிமாற்றங்களுக்கு சட்ட பாதுகாப்பு அளிக்க, அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.மன்னராட்சி காலத்தில் இருந்தே சொத்து பரிமாற்றங்களை ஆவணபடுத்துவது தொடர்பான பணிகள் நடைபெற்றுள்ளன.
கல்வெட்டுகள், செப்பு பட்டயங்கள், ஓலைச் சுவடிகள், காகிதங்கள் என, இதற்கு பயன்படுத்தப்பட்ட பொருள்களை போலவே இதற்கான மொழி வழக்குகளும் காலந்தோறும் மாறிவந்துள்ளன. தொடர்ந்து மாறியும் வருகின்றன.இதற்கான சட்ட பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக 1864ம் ஆண்டு பதிவுத்துறை ஏற்படுத்தப்பட்டது. 1899ம் ஆண்டு இந்திய ஸ்டாம்ப் சட்டம் நிறைவேற்றப்பட்டது. இதனை தொடர்ந்து பதிவு சட்டம் 1908ம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது. இதில் உள்ள குறைபடுகளை சரி செய்யும் வகையில், அடுத்தடுத்து பல்வேறு சட்டங்கள் நிறைவேற்றப்பட்டு பத்திரப்பதிவு தொடர்பான பணிகள் முறைபடுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகம் முழுவதும் உள்ள 574 சார்பதிவாளர் அலுவலகங்களுக்கு ஆண்டுக்கு சராசரியாக 1.5 கோடி பேர் வந்து செல்கின்றனர். இதன்மூலம் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 30 லட்சம் ஆவணங்கள் பதிவு செய்யபடுகின்றன.இவ்வாறு பதிவு செய்வதற்கு, ஆவணங்களை எழுதுவது என்பதே ஒரு முக்கிய கட்டமாக உள்ளது. 30 ஆண்டுகள் முன்பு அனைத்து பிரிவு மக்களும் குறிப்பிட்ட சில பிரிவினரையே சார்ந்திருந்தனர். அரசு அங்கீகாரம் பெற்ற ஆவண எழுத்தர்கள் வரவை அடுத்து, இதில் பல மாற்றங்கள் ஏற்பட்டன. இதனால், ஆவணங்கள் எழுதும் முறையில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன.
பொதுவாக வீடு, மனை, வாங்கும் பலரும், அது தொடர்பான ஆவணங்களை பிறரிடம் அளித்தே சரி பார்க்கின்றனர். ஆனால் இந்த ஆவணங்களை வாங்குபவரும் விற்பவரும் முழுமையாக படிக்க வேண்டும் என்பதே வல்லுனர்களின் ஆலோசனையாக உள்ளது.இத்தகைய ஆவணங்களை எழுதுவோர் வழக்கமாக பயன்படுத்தி வரும் வாசகங்களில்
இடம்பெறும் குறிப்பிட்ட சில வார்த்தைகள் இன்னமும் புரியாதவையாகவே உள்ளன.
இதில், ஆவணங்கள் அடிக்கடி பயன்படுத்தப்படும் சில வார்த்தைகளும், அவற்றின்
விளக்கங்கள் விவரம்:
பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.
கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.
இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.
விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.
ஷரத்து: பிரிவு.
இலாகா: துறை.
கிரயம்: நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணபடுத்துதல்.
வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
புல எண்: நில அளவை எண்.
இறங்குரிமை: வாரிசுரிமை.
தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.
ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.
அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.
சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.
நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.
புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.
இந்த வார்த்தைகளின் பயன்பாடு சமீபகாலமாக படிப்படியாக குறைந்து வருகிறது என பதிவுதுரையினர் தெரிவித்தனர்.23 வகை மாதிரி ஆவணங்கள்ஒருவர் தன்னிடம் உள்ள சொத்தை, வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது தொடர்பான ஆவணங்களை எழுத மூன்றாவது நபர் ஒருவரை சார்ந்திருக்கும் நிலையை மாற்ற வேண்டும் என நீண்ட காலமாக வலியுறுத்தப்பட்டு வந்தது.
இதை ஏற்ற, சொத்து விற்பனை, அடமானம், ஒப்பந்தம், பொது அதிகார ஆவணம், ரத்து செய்யும் ஆவணம், உள்ளிட்ட 23 வகையான ஆவணங்களின், ஆங்கிலம் மற்றும் தமிழ் மாதிரி படிவங்களை பதிவுத்துறை வெளியிட்டுள்ளது.
பதிவுதுறையின் www.tnreginet.net என்ற இணையத்தளத்தில் இருந்து இவற்றை இலவசமாக பதிவிறக்கம் செய்து, பெயர், முகவரி, சொத்து விவரங்களை மட்டும் பூர்த்தி செய்து பயன்படுத்தி கொள்ளலாம்
source -உழவன்
Labels:
பயனுள்ள தகவல்
சில பயனுள்ள இனையத்தளங்கள்
சில பயனுள்ள இனையத்தளங்கள்
சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta
2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta
3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0
4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf
http://www.tn.gov.in/appforms/death.pdf
5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf
6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf
C. E-டிக்கெட் முன் பதிவு
1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/
2) விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/
http://www.makemytrip.com/
http://www.ezeego1.co.in/
D. E-Payments (Online)
1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx
2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
http://www.itzcash.com/
3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி
5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/
http://shopping.indiatimes.com/
http://shopping.rediff.com/shopping/index.html
6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/
http://www.hdfcsec.com/
http://www.religareonline.com/
http://www.kotaksecurities.com/
http://www.sharekhan.com/
E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)
1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118
http://www.indianbank.in/education.php
http://www.iob.in/vidya_jyothi.aspx
http://www.bankofindia.com/eduloans1.aspx
http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp
http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp
http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm
2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.Pallikalvi.in/
http://www.results.southindia.com/
http://www.chennaionline.com/results
3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge
Read more...
சான்றிதழ்கள்
1) பட்டா / சிட்டா அடங்கல்
http://taluk.tn.nic.in/edistrict_certificate/land/chitta_ta.html?lan=ta
2) அ-பதிவேடு விவரங்களை பார்வையிட
http://taluk.tn.nic.in/eservicesnew/land/areg_ta.html?lan=ta
3) வில்லங்க சான்றிதழ்
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0
4) பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/birth.pdf
http://www.tn.gov.in/appforms/death.pdf
5) சாதி சான்றிதழ் / வாரிசு சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-community.pdf
6) இருப்பிட மற்றும் வருமான சான்றிதழ்
http://www.tn.gov.in/appforms/cert-income.pdf
C. E-டிக்கெட் முன் பதிவு
1) ரயில் மற்றும் பஸ் பயண சீட்டு
http://tnstc.ticketcounters.in/TNSTCOnline/
http://www.irctc.co.in/
http://www.yatra.com/
http://www.redbus.in/
2) விமான பயண சீட்டு
http://www.cleartrip.com/
http://www.makemytrip.com/
http://www.ezeego1.co.in/
D. E-Payments (Online)
1) BSNL தொலைபேசி மற்றும் Mobile Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://portal.bsnl.in/portal/aspxfiles/login.aspx
2) Mobile ரீ- சார்ஜ் மற்றும் டாப் அப் செய்யும் வசதி
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
http://www.itzcash.com/
3) E.B. Bill கட்டணம் செலுத்தும் வசதி
http://www.itzcash.com/
https://www.oximall.com/
http://www.rechargeitnow.com/
4) NEFT / RTGS மூலம் பிறர் ACCOUNT ‘க்கு பணம் மாற்றும் வசதி
5) E-Payment செய்து வேண்டிய பொருள் வாங்கும் வசதி
http://www.ebay.co.in/
http://shopping.indiatimes.com/
http://shopping.rediff.com/shopping/index.html
6) Share Market – பங்குச் சந்தையில் On-Line வணிகம் செய்யும் வசதி
http://www.icicidirect.com/
http://www.hdfcsec.com/
http://www.religareonline.com/
http://www.kotaksecurities.com/
http://www.sharekhan.com/
E. கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்த சேவைகள் (Online)
1) மாணவர்கள் மேற்படிப்புக்கான வங்கிக் கடன் விவரங்கள் மற்றும் விண்ணப்பங்கள்
https://www.sbi.co.in/user.htm?action=viewsection&lang=0&id=0%2C1%2C20%2C118
http://www.indianbank.in/education.php
http://www.iob.in/vidya_jyothi.aspx
http://www.bankofindia.com/eduloans1.aspx
http://www.bankofbaroda.com/pfs/eduloans.asp
http://www.axisbank.com/personal/loans/studypower/Education-Loan.asp
http://www.hdfcbank.com/personal/loans/educational_loan/el_indian/el_indian.htm
2) பள்ளி மற்றும் கல்லூரி தேர்வு முடிவு / மதிப்பெண் பற்றிய தகவல் அறிந்துக் கொள்ளும் வசதி
http://www.tn.gov.in/dge/
http://www.tnresults.nic.in/
http://www.dge1.tn.nic.in/
http://www.dge2.tn.nic.in/
http://www.Pallikalvi.in/
http://www.results.southindia.com/
http://www.chennaionline.com/results
3) சமச்சீர் கல்வி பாட புத்தகங்களை பதிவிறக்கம் செய்ய
http://www.tn.gov.in/dge
Labels:
முக்கிய இணையதள முகவரிகள்
மறந்துபோன windows7 password மாற்றியமைக்க
பெரும்பாலான
கணினி பயன்பாட்டாளர்கள் தங்களுடைய கணினிக்கு கடவுச்சொல் கொண்டு பூட்டி
வைத்திருப்பர். தீடிரென கடவுச்சொல் தவறு என்று பிழைச்செய்தி வரும், நாம்
எவ்வளவு தான் முட்டி மோதினாலும் கணினியை திறக்க முடியாது. அதுபோன்ற
சூழ்நிலையில் இதற்கு வழி என்னதான் என்று பார்த்தால் கணினியை பற்றி
அறியாதவர்கள் இயங்குதளத்தை நிறுவுதல் ஒன்றே வழி என்று கூறுவார்கள். ஆனால்
கணினியில் எந்தவித மாற்றமும் செய்யமல் கடவுச்சொல்லை மாற்றியமைக்க எளிமையான
வழி இருக்கிறது.
முதலில் நம்முடைய கணினியில் என்ன இயங்குதளம் நிறுவியுள்ளோமோ அந்த இயங்குதளத்தை சீடி/டிவிடி யிலோ அல்லது பெண்ட்ரைவிலோ பூட் செய்து கொள்ளவும். பின் பூட் செய்த
சீடி/டிவிடி அல்லது பெண்ட்ரைவினை கணினியில் இட்டு, பயாஸ் சென்று First
Booting Device யை சீடி/டிவிடி அல்லது பெண்ட் இதில் ஒன்றில் ஏதாவது ஒன்றினை
தேர்வு செய்து பின் பயாஸினை சேமித்து பின் அதிலிருந்து பூட் செய்யவும்.
கணினி பூட் ஆனவுடன் இயங்குதளத்தை நிறுவுவதற்கான தொடக்க விண்டோ தோன்றும்
அதில் Repair your computer என்பதை கிளிக் செய்யவும்.
உங்கள் கணினி உள்ள இயங்குதளங்கள்
பட்டியலிடப்படும். அதில் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை
மாற்ற வேண்டுமோ அதை தேர்வு செய்து Next என்ற பொத்தானை அழுத்தவும். இதில்
நீங்கள் எந்த இயங்குதளத்தின் பயனர் கணக்கின் கடவுச்சொல்லை மாற்ற
நினைக்கிறீர்களோ அது எந்த கோலனில் நிறுவப்பட்டுள்ளது என்பதை குறித்து
வைத்துக்கொள்ளவும். இங்கு விண்டோஸ் 7 D: கோலனில் நிறுவப்பட்டுள்ளது.
அடுத்ததாக தோன்றும் விண்டோவில் Command Prompt என்பதை கிளிக் செய்யவும்.
வரும் கட்டளை பலகையில் கீழ்காணும் கட்டளைகளை உள்ளிடவும்.
copy d:\windows\system32\sethc.exe d:\
மேலே குறிப்பிட்ட கட்டளையை உள்ளிட்டு
என்டர் கீயை அழுத்தியவும். 1 file(s) copied. என்ற செய்தி வரும். அடுத்து
மீண்டும் மற்றொரு கட்டளையை உள்ளிடவும்.
copy d:\windows\system32\cmd.exe d:\windows\system32\sethc.exe
கட்டளையை உள்ளிட்டு என்டர் கீயை
அழுத்தியவுடன் மீண்டும் அதன் மேலே பதியட்டுமா என்ற உங்களிடம் கணினி
கேட்கும். நீங்கள் Yes என்று தட்டச்சு செய்து என்டர் கீயை அழுத்தவும். 1
file(s) copied. என்ற செய்தி அடுத்த வரியில் தோன்றும்.
பின் கட்டளை பலகையினை மூடிவிட்டு
கணினியை மறுதொடக்கம் செய்யவும். பயனர்கணக்கு முகப்புபக்கம் தோன்றும்.
அப்போது Shift+Tab கீகளை ஒரு சேர ஐந்து முறை தொடர்ந்து அழுத்தவும். அப்போது
ஒரு கட்டளை பலகை தோன்றும். அதில் கீழ்காணும் கட்டளையை உள்ளிடவும்.
net user TCINFO passwd
இதில் net user என்பது இருப்பியல்பு
கட்டளை ஆகும். TCINFO என்பது நீங்கள் மாற்ற இருக்கும் விண்டோஸ் பயனர்
கணக்கின் பெயர் ஆகும். Passwd என்பது நீங்கள் புதியதாக மாற்ற நினைக்கும்
கடவுச்சொல் ஆகும். அதை உங்கள் விருப்பபடி உள்ளிட்டுக்கொள்ளவும்.
அவ்வளவுதான் இனி நீங்கள் புதிதாக மாற்றிய கடவுச்சொல்லே செயல்படும்.
source - tamilcomputer
Labels:
windows
விண்டோஸ் XP ரெக்கவரி
Sunday, September 08, 2013
உங்கள் கணினியில் விண்டோஸ் எக்ஸ்பி திடீர் என்று ‘ப்ளூ ஸ்கிரீன் ஆப் டெத்’ என்ற பிரச்சனையும் , மற்றும் ஸ்டார்ட்டப் பிரச்சனைகள் , லாகின் தொந்திரவுகள் உங்கள் கணினியில் வந்தால் நீங்கள் செய்யவேண்டியது விண்டோஸ் ரெக்கவரி கன்சோல்.
தகராறு செய்யும் எக்ஸ்பியை சரிசெய்ய பார்மட் செய்வதற்க்கு முன் ஒரு கடைசி முயற்சி கொடுத்து சரி செய்வதற்கு இந்த ரெக்கவரி கண்ஸோல் உதவும் . இதற்க்கு விண்டோஸ் எக்ஸ்பி சிடி தேவை
சிடியை டிரைவ்வில் போட்டு ஸ்டார்ட் சென்று ரன் தேர்ந்தெடுங்கள், ரன் டயலாக் பாக்ஸில் [ CD-ROM drive letter:\i386\winnt32.exe /cmdcons ]என்று டைப்புங்கள் கவனிக்க : இங்கே CD-ROM drive letterஎன்றிருக்கும் இடத்தில் உங்களுடைய சிடி அல்லது டிவிடி டிரைவின் எழுத்தை கொடுக்க வேண்டும், இப்பொழுது வரும் டயலாக் பாக்ஸின் தகவல்களை பின்பற்றி “பினிஷ்” கொடுங்கள்,இது உங்கள் கணினியில் ரெக்கவரி கன்சோலை நிறுவி விடும்.
,உங்கள் கணினியை ரீஸ்டார்ட் செய்தீர்களென்றால் டீபால்டாக முப்பது நொடிகளுக்கு உங்களிடம் விண்டோஸ் எக்ஸ்பியை பூட் செய்யவா அல்லது ரெக்கவரி கன்சோலை பூட் செய்யவா என்ற மெனு வந்திருக்கும் .ரெக்கவரி கன்சோலை உபயோகிக்க உங்களுக்கு அட்மினிஸ்ட்ரேட்டர் பாஸ்வேர்டு தெரிந்திருக்க வேண்டும்
Labels:
windows
பூட் ஆகாத XP இயங்குதளத்தை இயக்க
விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை பயன்படுத்துபவர்கள் சிலருக்கு, ஒரு சில சமயங்களில் கணினியை திறக்கையில் கீழே உள்ளதுபோன்றபிழைச்செய்தி கருப்புத் திரையில் வந்திருக்கலாம்.
Windows could not start because the following file missing
or corrupt:
\WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE
You can attempt to repair this file by starting Windows Setup using the original Setup CD-ROM.
Select ‘r’ at the First screen to start repair.
அல்லது என்றோ பிழைச் செய்தி வந்திருக்கலாம். எத்தனை முறை Restart செய்தாலும் கணினி பூட் ஆகாமல் இதே செய்தி தொடர்ந்து வரும். safemode சென்றாலும் இதே நிலைதான்.
இந்த நிலையில் விண்டோஸ் எக்ஸ்பி இயங்குதளத்தை மறுபடி நிறுவாமல் இதனை சரிசெய்ய என்ன செய்யலாம் எனப் பார்க்கலாம்.
முதலில் வருகின்ற பிழைச் செய்தியை சரியாக புரிந்து கொள்ளுங்கள். அதாவது, \WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE என வருகிறதா? அல்லது \WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM என வருகிறதா? என்பதை தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள். (SOFTWARE / SYSTEM).
இந்த பணியை நாம் Windows Recovery Console லில் செய்ய வேண்டும். மிகச் சில கணினிகளில் மட்டுமே இது நிறுவப்பட்டிருக்கும். இது போன்ற கணினிகளில் பூட் ஆப்ஷனில் Windows Recovery Console என்பது பட்டியலிடப்பட்டிருக்கும்.
ஒரு வேளை உங்கள் கணினியில் இந்த வசதி நிருவப்படவில்லை எனில், உங்களுடைய விண்டோஸ் XP பூட் CD யை உபயோகித்து பூட் செய்து கொள்ளுங்கள். இனி கீழே தரப்பட்டுள்ள படத்தில் குறிப்பிட்டுள்ள Repair திரை வரும் வரை தொடருங்கள்.
இந்த திரையில் ‘R’ கீயை அழுத்தினால் Recovery Console வந்துவிடும்.
மேலே உள்ள படத்தில் குறிப்பிட்டிருப்பது போல்,
1: C:\WINDOWS
(C: என்பது ரிப்பேர் செய்யப்போகும் இயங்குதளம் அமைந்துள்ள ட்ரைவ்)
இது சரியெனில் 1 டைப் செய்து என்டர் கொடுத்து, Administrator கடவு சொல்லை டைப் செய்யவும். (விண்டோஸ் பதியும் பொழுது பெரும்பாலானோர் Administrator க்கு கடவு சொல்லை கொடுப்பதில்லை, அப்படியிருந்தால் வெறுமனே என்டர் கொடுத்தால் போதுமானது).
இப்பொழுது திரையில்,
C:\WINDOWS> என்ற ப்ராம்ப்ட் வரும், இங்கு கீழ்கண்ட கட்டளைகளை ஒன்றன்பின் ஒன்றாக டைப் செய்து என்டர் கொடுக்கவும்.
DEL C:\WINDOWS\SYSTEM32\CONFIG\SYSTEM
COPY C:\WINDOWS\REPAIR\SYSTEM C:\WINDOWS\SYSTEM32\CONFIG
(Corrupt ஆன கோப்பு SYSTEM ஆக இருந்தால் மேலே உள்ளதைப் போலவும் SOFTWARE ஆக இருந்தால் கீழே உள்ளதைப் போலவும் கொடுக்கவும். இதில் ‘C:’ என்பது உங்கள் கணினியில் எந்த ட்ரைவில் இயங்குதளம் நிருவப்பட்டிருக்கிறதோ அதனை குறிக்கிறது. உங்கள் கணினிக்கு தக்கவாறு மாற்றிக்கொள்ளவும்)
DEL C:\WINDOWS\SYSTEM32\CONFIG\SOFTWARE
COPY C:\WINDOWS\REPAIR\SOFTWARE C:\WINDOWS\SYSTEM32\CONFIG
பிறகு, EXIT கொடுத்து பின்னர் கணினியை ரீ ஸ்டார்ட் செய்யுங்கள். இனி உங்கள் கணினி பூட் ஆகும்
Labels:
windows
டான் (TAN) நெம்பர் என்றால் என்ன?.
டான் (TAN) எண் என்று அழைக்கப்படும் 1௦ இலக்க எண் வரிமூல வசூல் அல்லது வரி கழித்தல் சேவைகளை வழங்கவும் மற்றும் வருமான வரி சார்ந்த பணிகளையும் செய்யவும் இந்த எண் பயன்படுகிறது. எனவே இந்த எண்ணை வருமான வரி செலுத்தும் அனைத்து அமைப்பு களும் மற்றும் தனி நபர்கள், நிறுவனங்கள் உட் பட அனைவரும் கட்டாயம் பெறவேண்டும். இந்த 1௦ இலக்க டான் எண் வருமானவரித் துறை யினரால் வழங்கப்படுகிறது.
டான் எண்ணை ஏன் வாங்க வேண்டும்?
யார் டான் எண் வாங்க வேண்டும்?

டான் எண்ணின் விளைவுகள்
மேற்கூறிய சேவைகளை,பணிகளை வழங்கக்கூடிய தனி நபர்கள், அமைப் புகள் அல்லது நிறுவனங்கள் டான் எண்ணைப் பெறாவிட்டால் அல்லது தேவையான சான்றிதழ்களில் டான் எண்ணை குறிக்க தவறி விட்டால் 1௦,௦௦௦ ரூபாய் முதல் அல்லது அதற்கும் அதிகமான அளவிலும் அபராதம் விதிக்கப்படும்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
டான் எண் பெறவிரும்பும் மேற் கூறிய தனிநபர்கள் அல்லது நிறு வனங்கள், அமைப்புகள் (49B) என்ற விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து tin nsdlயின் இணை யம் வழியாகவோ அல்லது TIN மையங்களிலோ சமர்ப்பிக்க முடி யும். உங்களுக்கு அருகாமையிலு ள்ள TIN மையங்களை கண் டறிய http://tin.nsdl.com அல்லதுwww.incometaxindia.gov.in என்ற இணைய தளத்திற்கு செல்லுங்கள்.
TIN மையங்களில் நேரடியாகச் சென்று சமர்ப்பிக்கப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் எந்தவித சான்றிதழ்களையும் இணைக்கத் தேவை இல்லை. ஆனால் இணையம் ஊடாக செலுத்தப்பட்ட விண்ண ப்பத்துடன் NDLS இணையம் வழங்கிய ஒப்புமைச் சீட்டை யும் இணை க்கவேண்டும். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பத்தில் தரப் பட்ட முகவரிக்கு டான் எண் அனுப்பப்படும்
Labels:
டான் (TAN) எண்
இணையத்தின் தீமைகளிலிருந்து சிறுவர்களை காப்பாற்ற..
Sunday, September 01, 2013
இணையப் பயன்பாட்டில், இன்றைக்கு நாம் அதிகம் கவலைப்படுவது, அதில் இயங்கும் ஆபாசமான, கீழ்த்தரமான உணர்வுகளைத் தூண்டும் பாலியல் தளங்களே. சிறுவர்களுக்கு இவை தடுக்கப்பட வேண்டும் என்பதில் வேறு கருத்து எவருக்கும் இருக்கப் போவதில்லை. இளம் வயதினரும் இந்த தளங்களை அருவருப்பாகவே கருதுகின்றனர். இவற்றை நம் இணையத் தொடர்பில் தடுத்திட சில வழிகள் உள்ளன. அவற்றை இங்கு காணலாம்.
1. தேடல் இஞ்சினை செட் செய்திடுங்கள்: நாம் தகவல்களைத் தேடும் போதுதான், இது போன்ற ஆபாச தளங்கள், தகவல் பட்டியலில் தலை நீட்டுகின்றன. இதனைத் தடுக்கலாம். எடுத்துக் காட்டாக, கூகுள் தேடல் தளத்தினைப் பயன்படுத்துபவர்கள், http://www.google.com/ familysafety/; என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். பிங் (Bing) தேடல் தளம் பயன்படுத்துபவர்கள்http://www.bing.com/preferences.aspx; என்ற முகவரியில் உள்ள தளம் செல்லவும். மற்ற தேடல் சாதனங்களைப் பயன்படுத்துபவர்கள், அந்த தளங்கள் தரும் safety settings சென்று இந்த வசதியைக் காணலாம். உங்கள் வீட்டுச் சிறுவன் யு-ட்யூப் போன்ற தளங்களை அதிகம் பயன்படுத்துபவனாக இருந்தால், அவற்றையும் “safe” modeல் அமைக்கவும்.
2. கம்ப்யூட்டர் மற்றும் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தரும் குடும்ப பாதுகாப்பு வசதிகளைப் (family safety tools) பயன்படுத்தவும்.விண்டோஸ் மற்றும் மேக் ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் இந்த பாதுகாப்பு வசதிகளைத் தருகின்றன.
2. குடும்ப பாதுகாப்பிற்கான டூல்ஸ்: Parental Control என அழைக்கபட்ட இந்த டூல்ஸ் மூலம், நாம் தேவையற்றவை அல்லது ஆபத்தானவை என்று கருதும் விஷயங்கள் கொண்ட இணையப் பக்கங்கள் கொண்ட தளங்களைத் தடுத்து நிறுத்தும் வடிகட்டிகளை (filters) அமைக்கலாம். பாலியல் தளங்களை மட்டுமின்றி, வன்முறை சார்ந்த தகவல்கள் மற்றும் நாம் வெறுக்கும் பொருள் கொண்ட தளங்கள் ஆகியவற்றையும் கட்டுப்படுத்தலாம். நம் சிறுவர்கள் இளைஞர்களாய் வளர்ந்த பின்னர், சில தளங்கள் பார்க்கும் வகையில் இருக்கலாம். ஆனால், சில தளங்களை நாம் எப்போதும் வெறுக்கும் வகையிலேயே அமைக்கப்பட்டிருக்கும். அவற்றை எப்போதும் நம் கம்ப்யூட்டரில் தோன்றாதபடி அமைக்கலாம். இதற்கான வடிகட்டிகளைத் தேடிப் பார்த்து, நமக்குத் தேவையானதைப் பயன்படுத்த வேண்டும். இந்த டூல்ஸ்களை நாம் மற்றும் நம் குடும்பத்தினர் பயன்படுத்தும், இணைய இணைப்பினைத் தரும் அனைத்து சாதனங்களிலும் இன்ஸ்டால் செய்திட வேண்டும். கம்ப்யூட்டர், கேம் கன்ஸோல், மொபைல் போன், டேப்ளட் பிசிக்கள், பெர்சனல் லேப்டாப் மற்றும் கம்ப்யூட்டர்கள் என அனைத்திலும் இவை இன்ஸ்டால் செய்யப்பட வேண்டும். சில டூல்ஸ்கள், இந்த அனைத்து வகை சாதனங்களிலும் இயங்கும்படி வடிவமைக்கப்பட்டிருக்கும். சில லேப்டாப் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்களில் மட்டும் இயங்கும்படி இருக்கும்.
3. சிறுவர்களின் பிரவுசர்களை கண்காணிக்கவும்: சிறுவர்கள் பயன்படுத்தும் பிரவுசரின் ஹிஸ்டரியை, குறிப்பிட்ட கால இடைவெளியில் கண்காணிக்க வேண்டும். இப்போதெல்லாம் பாலியல் தளங்களில், பாலியல் சார்ந்த செயல்பாடுகளை, மூடி மறைக்கும் வகையில் சாதாரண சொற்கள் கொண்டு குறிக்கின்றனர். இவற்றை எல்லாம் கண்காணித்து, வடிகட்டிகளில் இவற்றைக் கொடுத்து அவற்றையும் தடை செய்திடும் வகையில் அமைக்க வேண்டும்.
4. சமூக வளைதளங்கள்: உங்கள் பிள்ளைகள் பயன்படுத்தும் சமூக வளைத்தளங்களில், அவர்கள் தொடர்பு கொள்ளும் நண்பர்கள் வட்டத்தினைக் கண்காணிக்கவும். மிகவும் நெருக்கமான, நம்பிக்கையுள்ள நண்பர்களை மட்டும் இந்த வட்டத்தில் வைக்கவும். ஏனென்றால், நண்பர்கள் என்ற போர்வையில், முதலில் சாதாரணமாக அஞ்சல் தகவல்களைப் பரிமாறிக் கொண்ட பின்னர், பாலியல் தளங்களுக்கு உங்கள் பிள்ளைகளை இழுத்துச் சென்று, அவர்களிடம் பணம் பறிக்கும் வேலையில் நிறைய பேர் இப்போது சமூகத் தளங்களில் இயங்கி வருகின்றனர்.
5. பிள்ளைகளின் மொபைல் போட்டோக்கள்: உங்கள் பிள்ளைகள் பயன்படுத்தும் மொபைல் போன்களில் உள்ள போட்டோக்களை அவ்வப்போது கண்காணிக்கவும். இந்த சோதனையை, சோதனை ரீதியில் இல்லாமல், நட்பு ரீதியில் மேற்கொள்ளவும். “நம் பெற்றோர்கள், நம் மொபைல் போன்களை அவ்வப்போது பார்ப்பார்கள்” என்ற எண்ணம் அவர்கள் மனதில் பதிய வேண்டும். “அப்படி பார்ப்பது நல்லதுதான்” என்று அவர்கள் கொள்ள வேண்டும்.
தொழில் நுட்ப ரீதியாக நீங்கள் அமைக்கும் வடிகட்டிகள், கண்காணிப்புகள் மட்டுமே, உங்கள் குழந்தைகளை பாலியல், வன்முறை, வெறுப்பு ஆகியவற்றை வளர்க்கும் தளங்கள் பக்கம் செல்லாமல் தடுக்கும் என்று எண்ண வேண்டாம். உங்கள் பிள்ளைகளிடம் இதனால் ஏற்படுத்தும் ஆபத்து, இது போல பிறருக்கு நேர்ந்தது போன்றவற்றை எடுத்துக் கூறவும். உங்கள் மனைவியுடன் அவர்களையும் அமர வைத்து, இதனால் ஏற்படும் தீங்குகளை, வாழ்க்கை பாதிப்புகளை, மற்றவர்களுக்கு நேர்ந்தவற்றை அவ்வப்போது எடுத்துக் கூற வேண்டும். இந்த அன்பு கலந்த எச்சரிக்கை தான் அவர்களுக்கு நல்ல வழியைக் காட்ட முடியும்
Labels:
தொழில்நுட்பம்
காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையும் அதன்பின் அதன் செயல்பாடுகளும்.
ஒரு குற்ற நிகழ்வு குறித்து காவல்நிலையத்தில் பதிவு செய்யப்ப டும் புகார்தான் அந்த குற்ற நிகழ்வு குறித்த விசாரணை யின் துவக் கப்புள்ளியாகும்.
சட்டரீதியாக ஒரு குற்ற நிகழ் வு குறித்த எவ்வகையிலாவது தகவல் அறியும் காவல்துறை அதிகாரி ஒருவர், அந்த நிகழ்வு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று சட்டம் கூறுகி றது. ஆனால் நடைமுறையில் தமது பதவிக்கு ஆபத்து வராது என்ற நிலையில் கொலை போன்ற கொடுங்குற்றங்களைத் தவிர மற்ற குற்ற நிகழ்வுகளில் தாமாக வே முன்வந்து நடவடிக்கை மேற்கொள்ள காவல் துறை அதிகாரி கள் ஆர்வம் காட்டுவது இல்லை.
எனவே குறிப்பிட்ட ஒரு குற்ற நிகழ்வால் பாதிக்கப்படும் ஒருவர்அல்லது அவர் சார்பில் வேறொருவர் அந்த குற்ற நிகழ்வு குறித்த புகாரை காவல்நிலையத்தில் பதிவு செய்யலா ம்.
புகார் பதிவு செய்யும் நபர் வசிக்குமிட ம், புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள எதிரி வசிக்குமிடம், குற்ற சம்பவம் நடந்த இடம் ஆகிய ஏதா வது ஒரு இடத்தில் இருக்கும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க லாம்.
புகார் மனுவில், மனுதாரரின் பெயர், வயது, தந்தையார் அல்லது கணவர் பெயர், முழு முகவரி, தொடர்புக்கான தொலைபேசி எண் ஆகியவை முழுமையாக தரப்பட வேண்டும். பின்னர் புகார் மனு வை எந்த காவல்நிலையத்தி்ல் பதிவு செய்கிறோமோ அந்த காவல் நிலைய அதிகாரியை பெறுநராக குறிப்பிட வே ண்டும். காவல் நிலையத்தில் பல படி நிலைகளில் அதிகாரிகள் இருந்தாலு ம், குற்ற நிகழ்வுகளில் காவல் நிலையத்தி ல் பணியாற்றும் காவல் துறை ஆய்வா ளர் அல்லது துணை ஆய்வாளர் மட்டு மே அந்த புகாரை பரிசீலித்து முதல் தக வல் அறிக்கை தயாரிக்க முடியும். (ஒரு வேளை காவல்துறை ஆய்வாளர் அந் தப் புகாரை பதிவு செய்ய மறுத்தால் உயர் அதிகாரிகளை அணுக லாம். அதை பிறகு பார்ப்போம்)
குற்ற நிகழ்வு நடந்த இடம், நேரம் ஆகியவற்றுடன் குற்ற நிகழ்வுகுறித்த முழுமையான விவர ங்கள் புகாரில் இடம் பெற வே ண்டும். எதிரி மிகவும் மோச மான வார்த்தைகளில் திட்டி யிருந்தால் அதை குறிப்பிடு வது நல்லது. அதேபோல கொ லை மிரட்டலோ வேறு வகை மிரட்டலோ விடுத்திருந்தாலு ம் அதையும் புகாரில் தெரிவி ப்பது நல்லது. தாக்குதல் நடந் திருந்தால் அந்த தாக்குதல் எவ்வாறு நடந்தது, எந்தப் பொருளால் தாக்குதல் நடந்தது, அதனால் ஏற்பட்ட விளைவுகள் என்ன என்ப தையும் புகாரில் கூற வேண்டும். திரு ட்டு, கொள்ளை போன்றவை நடந்திருந் தால் இழப்புகள் குறித்த முழு விவரங்க ளும் அளிக்கப் பட வேண்டும்.
இவ்வகையான புகார்களில் எதிரிகளை அடையாளம் காட்டுவது, காவல்துறை க்கு மிகவும் உதவியாக இருக்கும். நம க்கு முன்பே தெரிந்த நபர்களை அவர்க ளுடைய பெயர், முகவரியோடு குறிப்பி ட வேண்டும். பெயர் தெரியாத, ஆனால் அடையாளம் காட்டக்கூடி ய நபர்களை “பெயர் தெரியாத, நேரில் அடையாளம் காட்டக்கூடிய நபர்” என்று தெளிவாக குறிப்பிட வே ண்டும். முற்றிலும் அடையாளம் தெரியாத நபர் என்றால் அடை யாளம் தெரியாத நபர் என்று சொல்லலாம்.
தாக்குதல் போன்ற சம்பவ ங்களில் காவல் நிலையத் தில் புகார் அளிப்பது எந்த அளவு முக்கியமோ, அதே அளவுக்கு காயம்பட்டவர் களுக்கு மருத்துவ சிகிச் சை அளிப்பதும் முக்கியம் . எனவே அவர்களை தாம திக்காமல் மருத்துவரிடம் அழைத்துச் செல்ல வேண் டும். காயம் பட்டவர் சார்பாக வேறு எவராவது காவல் நிலை யம் சென்று புகார் அளிக்கலாம்.
காவல்நிலையத்தில் அளிக்க ப்படும் புகாரில் கூறப்பட்டு ள்ள விவர ங்களின் அடிப்ப டையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்ப தால் புகாரில் இயன்றவரை முழுமையான, உண்மையா ன தகவல்களை தருவது நல் லது.
புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சம்பவங்களின் இயல்புக்கு ஏற்ப உரிய நடவடிக்கைகளை காவல்துறையினர் சட்டப்படியாக மேற் கொள்ள வேண்டும். கொடுங்குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவர் களை கைது செய்வதில் நடவடிக்கை தொடங்கும். சாதாரண குற்றங்களில் குற்றம் சாட்டப்பட்டவரை விசாரணைக்கு வருமாறு அழைப்பதில் நடவடிக்கை தொடங்கும்.
இவ்வாறு காவல்நிலையத்தி ல் பதிவு செய்யப்படும் புகார் களை விசாரித்து தகுதியுடை ய அனைத்து புகார்கள் மீதும் முதல் தகவல் அறிக்கை (First Information Report) தயாரிக்க வேண்டும் என்று குற்றவியல் நடைமுறைச் சட்டம் சொல்கி றது. ஆனால் நிர்வாக வசதி கருதி, தமிழ்நாடு காவல்துறையில் புகார்கள்மீது முதல் தகவல் அறிக்கை தருவதற்கு முன்பாக சமூக சேவைப் பதிவேட்டில் (Community Service Register) பதிவு செய்து அதற்கான ரசீது வழங்
கும் பழக்கம் நடைமுறையில் உள்ளது. இதனை சட்டமோ, அரசாணையோ அங்கீகரிக்கவி ல்லை என்றாலும் பல நேர்வுக ளில் நீதி மன்றம் இந்த முறை யை ஏற்றுக் கொள்கிறது.
***
புகார் என்பது குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்டவரோ, அவருடை ய பிரதிநிதியோ அளிக்கும் தகவல் மட்டுமே. அந்த தகவல்களைத் தாண்டியும் உண்மைகள் இருக்கலாம். அந்த உண்மைகளை விசா ரித்து வெளிக்கொணரவேண்டிய கடமை காவல்துறைக்கு இருக்கி றது.
ஆனால் நடைமுறையில் காவல்துறையில், காவல்துறை அதிகா ரிகளுக்கு நேரடியாகவோ, மறைமுகமாகவோ நன்மை செய்யும் புகார்களைத் தவிர வேறு புகார்களை ஏற்க மறுக்கும் நிலையே
நடைமுறையில் உள்ளது. குறிப்பாக தங்கள் காவல் நிலைய எல் லைக்குள் குறிப்பிட்ட குற்ற நிகழ்வு நடக்கவில் லை என்பது போன்ற புறக்கணிக்கத்தக்க காரணங்களைக் கூறி புகார்களை ஏற்க மறுக்கும் நிலை உள்ளது.
****
காவல்நிலையத்தில் புகார் அளிக்கும் முறையை இதுவரை பார்த் தோம். புகா ரைத் தொடர்ந்து நடக்கும் செயல்பாடு களை தற்போது பார்ப்போம்.
காவல்நிலையத்தில் அளிக்கப்படும் புகா ரை படித்துப் பார்க்கும் காவல்நிலைய அதிகாரி, அந்தப் புகாரில் கொடுக்கப்பட்டுள்ள நிகழ் வுகளில் இந்திய சட்டங்கள் வரையறை செய்துள்ள குற்றங்கள் ஏதும் நடந்துள்ளதா என்று பார்ப்பார். அவ் வாறான குற்றங்கள் நடைபெற்றுள்ளதாக தெரியவந்தால், அந்த
குற்றத்தின் தன்மை குறித்து அவர் ஆராய்வார்.
ஏனெனில் அனைத்து வகை குற்றங்க ளிலும் அவர் உடனடியாகவும், நேரடி யாகவும் தலையிட முடியாது. எனவே காவல்துறை அதி காரி, அந்த புகாரில் உள்ள குற்றங்கள் குறித்து ஒரு முடி வை எடுக்க வேண்டிய நிலை ஏற்படும்.
பிணையில் விடத்தகுந்த குற்றமும், பிணையில் விடத்தகாத குற்றமும்
இந்திய குற்றவியல் நடைமுறை சட்டத்தின் அடிப்படையில் குற்ற ங்கள் அனைத்தும் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அவை முறையே (1) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் மற்றும் (2) பிணையில் விடமுடியாத குற்றங்கள் ஆகும்.
பிணை என்பது கைது செய்ய ப்பட்ட நபரை வெளியில் விடு வதற்கான பெறப்படும் உத்தர வாதம் அல்லது உறுதியை குறிக்கும் சொல்லாகும். ஒரு குற்ற நிகழ்வு நடந்தால் அதில் பங்கேற்று, அந்த நிகழ்வில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழ ப்பையும் வலியையும் ஏற்படு த்திய நபரை–நபர்களை கைது செய்வது வழக்கம். அந்த நபர் மேலும் குற்றம் செய்யாமல் தடுக்க வும், குற்றம் தொடர்பான சாட்சிகளையும், சான்றுகளையும் கலை த்துவிடாமல் இருப்பதற் காகவும், குற்றவிசாரணையை குலைத்து விடாமல் இருப்பதற்காகவும் இந்த கைது நடவடிக்கை மேற் கொள் ளப்படுகிறது. இவ்வாறு கைது செய்யப்படும் நபரை தற்காலிகமாக தடுத்து வைப்பதே சட் டத்தின் குறிக்கோள். எனவே விசாரணைக் கைதியாக இருப்பவரு க்கு பிணையில் விடுவிப்பது வழக்கமானநடைமுறையே. இவ்வாறு பி ணையில் விடுவிக்கும் செய லை செய்வதில் சில நடை முறைகள் உள்ளன.
மிகச்சிறிய குற்றங்களை செய் தவர்களை காவல்துறை அதி காரியே பிணையில் விடுவிக் கும் அதிகாரம் உள்ளது. அவ் வாறான குற்றங்களைத் தவிர மற்ற குற்றங்களில் ஈடுபட்ட வர்களை உரிய அதிகாரம் கொண்ட குற்றவியல் நீதிபதி மட்டுமே பிணையில் விடு விக்க முடியும்.
காவல்துறை அதிகாரியே பிணையில் விடக்கூடிய குற்றங்களை (உடனே) பிணையில் விடக்கூடிய குற்றங்கள் என்றும், மற்ற குற்றங்களை பிணையில் விடமுடியாத குற் றங்கள் என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு ள்ளது. பிணையில் விடக்கூடிய குற்றங் கள் மற்றும் பிணையில் விட முடியாத குற்றங்களின் பட்டியில் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பின் இணைப் பாக வழங்கப் பட்டுள்ளது. சுமார் 3 ஆண்டு கள் வரை தண்டனை அளிக்க்க்கூடிய குற் றங்கள் அனைத்தும் பிணையில் விடும் குற்றங்களாகவும், 3 ஆண்டுகளுக்கு மேல் தண்டனை அளிக்கக்கூடிய குற்றங்களை பிணையில் விடமுடியாத குற்றங்களாக வும் நீதித்துறை வட்டாரத்தில் கூறப்படு வது உண்டு. இது ஏறக்குறைய சரியாக இருந்தாலும், சட்ட ரீதியாக இதை அங்கீ கரிக்க முடியாது. எனவே பிணையில் விடும் குற்றங்களையும், பிணையில் விடமுடியாத குற்றங்களையும் அடையாளம் காண குற்றவியல் நடைமுறைச் சட்டத்தை நாடுவ தே நல்லது.
குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் படி பிணையில் விட முடி யாத குற்றங்களை செய்வோ ரை காவல்துறை அதிகாரியே நேரடியாக கைது செய்ய முடியு ம். இவ்வாறு கைது செய்வதற் கு குற்றவியல் நீதிமன்ற நீதிப திகளின் கைது ஆணை (வார ண்ட்) தேவை யில்லை. எளிய குற்றங்களை செய்தவர்களை, அதாவது காவல் துறை அதிகா ரியே பிணையில் விடத் தகுந்த குற்றங்களை செய்தவர்களை காவல்துறை அதிகாரி நேரடியாக கைது செய்ய முடியாது. அத்த கையவர்களை கைது செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், உரிய குற்றவியல் நீதிமன்ற நீதிபதிகளின் உத்தரவை பெற்றே கைது செய்ய வேண்டும்.
இந்த அம்சங்களை பரிசீலனை செ ய்து ஒரு முடிவுக்கு வருவது, காவ ல்துறை அதிகாரியின் முக்கியமா ன கடமையாகும்.
ஏனெனில், ஒரு குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபரிடம் இருந்து பெறும் புகார் மீது உடனடியாக நட வடிக்கை மேற்கொள்ள வேண்டு ம் என்று சட்டம் வலியுறுத்துகிற து. அந்த நடவடிக்கை எம்மாதிரி யானதாக இருக்கவேண்டும் என்று தீர்மானிப்பதில் காவல்துறை அதிகாரி மேற்கொள்ளும் முடிவு முக்கிய இடம் வகிக்கிறது.
புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங் கள், இந்திய தண்டனை சட்டத் தின்கீழ் பிணையில் விடமுடியா த குற்றமாக இருந்தால் மட்டுமே, அந்த காவல்துறை அதிகாரி முத ல் தகவல் அறிக்கையை பதிவு செய்து நடவடிக்கையை சட்ட ரீதியாக விசாரணை, கைது உள் ளிட்ட நடவடிக்கைகளை மேற் கொள்ள முடியும்.
அந்தப்புகாரில் கூறப்பட்டுள்ள குற்றங்கள் மிக எளிய தன்மை வாய் ந்ததாக இருந்தால், உடனடியாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய முடியாது. அந்தப் புகாரை காவல் நிலையத்தில் இருக்கும் பொது நாட்குறிப்பில் பதிவு செய்து, அப்பகுதிக்கான குற்றவியல்
நீதிபதிக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். பின்னர், குற்றவியல் நீதிபதி உத்தரவிட்டால் மட்டு மே, அப்புகார் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து விசார ணை செய்ய முடியும்.
எனவே, புகாரை பெற்றுக் கொ ண்ட ஒரு காவல்துறை அதிகாரி, அந் தப் புகாரில் கூறப்பட்டுள்ள சம்பவங்களில் எத்தகைய குற்ற ங்கள் நடந்துள்ளன என்பதை முதலில் தீர்மானிக்க வேண்டும். இதற்கு உதவி செய்யும் விதத்தில் புகார் எழுதப்பட வேண்டும்.
முதல் தகவல் அறிக்கை
இந்திய குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் பிரிவு 154, முதல்
தகவல் அறிக்கை என்பதை நிர்ணயம் செய்கிறது. இந்த சட்டப் பிரிவின் படி, “பிணையில் விடமுடியாத குற்றம் குறித்து கிடைக் கும் முதல் தகவலை பதிவு செய்வதே, முதல் தகவல் அறிக் கை” ஆகும். இந்த தகவல் எழுத்திலோ, வாய்மொழியாகவோ இருக்கலாம். வாய் மொழித் தகவலாக இருந்தால் அதை எழு த்தில் வடித்து, தகவல் தருபவருக்கு அதைப் படித்துக் காண்பித்து அதில் தகவல் கொடுப்பவரின் கையொப்பம் பெறப்பட வேண்டும்.
குற்ற நிகழ்வில் பாதிக்கப்பட்ட நபர்தான் இந்த தகவலை அளிக்கவேண்டும் என்ற கட்டாயம் எதுவு ம் கிடையாது. குற்ற நிகழ்வு குறி த்த செய்தியை அறிந்த யாரும் இந்த தகவலை காவல்துறைக்கு அளிக்கலாம்.
ஒரு குற்ற வழக்கின் அடிப்படை யே இந்த முதல் தகவல் அறிக்கை என்பதால், இதற்கான தகவலை தருவதில் புகார்தாரர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு புகாரில் என்னென்ன அம்சங்கள் இருக்க வேண்டும் என்பதை முன்னரே பார்த்தோம்.
பின்னர் குறிப்பிட்ட புகாரி ன் உள்ளடக்கத்தை அப்ப டியே பதிவு செய்து, குறி ப்பிட்ட குற்றத்திற்கான குற்ற எண் குறிக்கப்பட்டு, அதன் நகல் தொடர்புடைய குற்றவியல் நடுவருக்கு அனுப்பப் பட் டது என் பதையும் பதிவு செய்து விசாரணை அதிகாரி அந்த படிவத்தில் கையொப்பம் இடுவார்.
குற்றச்செயல் குறித்த தகவல் அளிப்பவருக்கு, முதல் தகவல் அறிக்கையின் நகல் ஒன்று இலவசமாக வழங்கப்படவேண்டும்.
=> மக்கள் சட்டம்-இது
மக்களுக்கான சட்டம்
மக்களுக்கான சட்டம்
நன்றி - விதை2விருட்சம்
Labels:
FIR
Subscribe to:
Posts (Atom)