பார்த்த,படித்த செய்திகள்

டான் (TAN) நெம்பர் என்றால் என்ன?.

Sunday, September 08, 2013

டான் (TAN) எண் என்று அழைக்கப்படும் 1௦ இலக்க எண் வரிமூல வசூல் அல்லது வரி கழித்தல் சேவைகளை வழங்கவும் மற்றும் வருமான வரி சார்ந்த பணிகளையும் செய்யவும் இந்த எண் பயன்படுகிறது. எனவே இந்த எண்ணை வருமான வரி செலுத்தும் அனைத்து அமைப்பு களும் மற்றும் தனி நபர்கள், நிறுவனங்கள் உட் பட அனைவரும் கட்டாயம் பெறவேண்டும். இந்த 1௦ இலக்க டான் எண் வருமானவரித் துறை யினரால் வழங்கப்படுகிறது.
டான் எண்ணை ஏன் வாங்க வேண்டும்?
வருமான வரி சட்டப் பிரிவு 203 அ வின் படி “வரிமூலவசூல் அல்லது வருமான வரிப்பிடித்தம் உட்பட்ட சேவைகளை பொது மக்களுக்கு வழ ங்கும் அனைத்து அமைப்புகளும், நிறுவனங்களும் மற்று ம் தனி நபர்களும் கட்டாயம் டான் எண் ணை வருமான வரித்துறையிடம் விண் ணப்பித்து பெற வேண்டும்” என்று அறி விக்கப்பட்டது. மேலும் வருமான வரி சட்டத்தின் அப்பிரிவு (மின்னணு உட்பட) வருமான வரி மூலக் கழித்த ல்/வருமான வரி வசூல் விண்ணப்ப படிவங்கள், சான்றிதழ்கள் மற்றும் கட்டணப்படிவங்கள் போன்றவற்றில் டான் எண் குறிக்கப்பட வேண்டும். TDS/TCS படிவங் களில் டான் எண் சேர்க்கப்படாவிட்டால், அப் படிவங்கள் குறிப்பிட்ட அலுவலக அதிகாரிக ளை அல்லது அலுவலகங்களை சென்று சேராது, அதாவது டான் எண் சேர்க்கப்படாத விண்ணப்பங்கள் வருமான வரித்துறையின ரால் பரிசீலீக்கப்படாது . இதே போல், வங்கிக ளும் டான் எண் சேர்க்கப்படாத TDS/TCS படி வங்களை ஏற்காது.
யார் டான் எண் வாங்க வேண்டும்?
தனிநபர், தனிநபர் தொழில் நிறுவ ன கிளைகள், தனி நபர்களின் சங் கம் (AOPs)/ தனிநபர்களின் கூட்ட மைப்பு (BOIs)/ செயற்கை நீதி துறை நபர், நீதி நிறுவனம் அல்ல து கிளை; நிறுவனம் அல்லது கிளை, தன்னாட்சி / சட்டரீதியான அமைப்புகள் மற்றும் மாநில அல் லது மத்திய அரசு அல்லது உள் ளாட்சி அமைப்புகள் உட்பட்டோர் டான் எண்ணைப் பெறமுடி யும்.
டான் எண்ணின் விளைவுகள்
மேற்கூறிய சேவைகளை,பணிகளை வழங்கக்கூடிய தனி நபர்கள், அமைப் புகள் அல்லது நிறுவனங்கள் டான் எண்ணைப் பெறாவிட்டால் அல்லது தேவையான சான்றிதழ்களில் டான் எண்ணை குறிக்க தவறி விட்டால் 1௦,௦௦௦ ரூபாய் முதல் அல்லது அதற்கும் அதிகமான அளவிலும் அபராதம் விதிக்கப்படும்.
எவ்வாறு விண்ணப்பிப்பது?
டான் எண் பெறவிரும்பும் மேற் கூறிய தனிநபர்கள் அல்லது நிறு வனங்கள், அமைப்புகள் (49B) என்ற விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து tin nsdlயின் இணை யம் வழியாகவோ அல்லது TIN மையங்களிலோ சமர்ப்பிக்க முடி யும். உங்களுக்கு அருகாமையிலு ள்ள TIN மையங்களை கண் டறிய http://tin.nsdl.com அல்லதுwww.incometaxindia.gov.in என்ற இணைய தளத்திற்கு செல்லுங்கள்.
TIN மையங்களில் நேரடியாகச் சென்று சமர்ப்பிக்கப்படும் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் எந்தவித சான்றிதழ்களையும் இணைக்கத் தேவை இல்லை. ஆனால் இணையம் ஊடாக செலுத்தப்பட்ட விண்ண ப்பத்துடன் NDLS இணையம் வழங்கிய ஒப்புமைச் சீட்டை யும் இணை க்கவேண்டும். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, விண்ணப்பத்தில் தரப் பட்ட முகவரிக்கு டான் எண் அனுப்பப்படும்
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP