தமிழக கட்சிகளின் பலம் என்ன?
Friday, May 20, 2016
தமிழக கட்சிகளின் பலம் என்ன?
மே 20,2016
சென்னை: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் கட்சிகள் பெற்ற மொத்த ஓட்டுக்களைப் பார்க்கும் போது தான் அவற்றின் உண்மையான பலம் தெரிய வருகிறது.
227 தொகுதிகளில் போட்டியிட்ட அதிமுகவுக்கு 1,76,17,060 ஓட்டுக்கள் கிடைத்தது. இது 40.8 சதவீதம் ஆகும். இந்த தேர்தலில் அக்கட்சி 134 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
* 176 தொகுதிகளில் போட்டியிட்ட தி.மு.க., 1,36,70,511 ஓட்டுக்கள் கிடைத்தது. இது 31.6 சதவீதம் ஆகும். 89 தொகுதிகளில் தி.மு.க., வெற்றி பெற்றுள்ளது.
* 41 தொகுதிகளில் போட்டியிட்ட காங்கிரஸிற்கு, 27,74,075 ஓட்டுக்கள் கிடைத்தது. இது 6.4 சதவீதம் ஆகும். அக்கட்சி 8 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது
* 5 தொகுதிகளில் போட்டியிட்ட இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3,13,808 ஓட்டுக்கள் கிடைத்துள்ளன. இது 0.7 சதவீதம் ஆகும். அக்கட்சி ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது.
* 232 தொகுதிகளிலும் போட்டியிட்ட பா.ம.க.,விற்கு 23, 00775 ஓட்டுக்கள் கிடைத்துள்ளது. 5.3 சதவீத ஓட்டுக்கள் ஆகும்.
* 188 தொகுதியில் போட்டியிட்ட பா.ஜ.,விற்கு 12,28,692 ஓட்டுக்கள் கிடைத்தன. இது 2.8 சதவீதம் ஆகும்.
* 104 தொகுதியில் போட்டியிட்ட தே.மு.தி.க., 10,34,384 ஓட்டுக்கள் கிடைத்தன. இது 2.4 சதவீதம் ஆகும்.
* 25 தொகுதிகளில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி 3,07,303 ஓட்டுக்கள் கிடைத்தன. இது 0.7 சதவீதம் ஆகும்.
* 25 தொகுதியில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3,40,290 ஓட்டுக்கள் கிடைத்தன. 0.8 சதவீதம் ஆகும்.
* புதிய தமிழகம் கட்சிக்கு 2,19,830 ஓட்டுக்கள் கிடைத்தன.
* மனித நேய மக்கள் கட்சிக்கு 1,97,150 ஓட்டுக்கள் கிடைத்தன.
* சுயேட்சைகள் 6,17,907 ஓட்டுக்கள் பெற்றுள்ளனர்.
* நோட்டாவுக்கு 5,61,244 ஓட்டுக்கள் கிடைத்துள்ளது. இது 1.3 சதவீதம் ஆகும்.
* நாம் தமிழர் கட்சி 4,58,104 ஓட்டுக்கள் கிடைத்தது. இது 1.1 சதவீதம் ஆகும்
Source :- dinamalar
http://m.dinamalar.com/detail.php?id=1525961
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
0 comments:
Post a Comment