பார்த்த,படித்த செய்திகள்

விண்டோஸ் 8.1 தரும் புதிய வசதிகள்-1

Monday, July 15, 2013

விண்டோஸ் 8 பதிப்பு புதிய இடைமுகத்துடன், தொடுதிரை செயலாக்கத்துடன், முற்றிலும் பல புதிய வசதி களைத் தாங்கி வந்தாலும், மாற்றத்திற்குத் தயாராகாத கம்ப்யூட்டர் பயனாளர்கள், முற்றிலுமாக விண்டோஸ் 8 சிஸ்டத்தினை ஏற்கவில்லை. இதனை உணர்ந்த மைக்ரோசாப்ட், மக்களின் எதிர்பார்ப்பிற்கிணங்க, விண்டோஸ் 8.1 பதிப்பினை மக்களுக்கான @Œõதனை பதிப்பாக வெளியிட்டுள்ளது. இது ஒரு சர்வீஸ் பேக் மட்டுமல்ல. பல சிறிய, பெரிய, முக்கிய மேம்பாட்டு வசதிகளையும் பயன்பாட்டினையும் தரும் சிஸ்டமாகத் தரப்பட்டுள்ளது. சிஸ்டத்தில் இணைக்கப்பட்டுத் தரும் பல அப்ளிகேஷன்கள் மேம்படுத்தப்பட்டுள்ளது மட்டுமின்றி, கூடுதலாகவும் தரப்பட்டுள்ளன. சுருக்கமாகச் சொல்வதென்றால், இது மைக்ரோசாப்ட் நிறுவனத்தின் வெற்றி எனலாம். ஆனால், பயனாளர்களுக்கு இவை நிறைவைத் தருமா எனத் தெரியவில்லை. மேம்படுத்தப்பட்ட மற்றும் புதிய வசதிகளை இங்கு காணலாம்.

1. ஸ்டார்ட் ஸ்கிரீன்: முதல் முறை இதனைக் காண்கையில், முற்றிலும் புதியதாகத் தெரியவில்லை. ஆனால், நுணுக்கமாகப் பார்க்கையில், பல மாற்றங்கள் தென்படுகின்றன. இரண்டு புதிய அளவுகளில் அப்ளிகேஷன்களுக்கான டைல்ஸ்கள் உள்ளன. இவற்றுடன் சேர்த்து, புரோகிராம்கள் மற்றும் பிற ஆப்ஜெக்ட்களைக் காட்ட மொத்தம் நான்கு வகை ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. அத்துடன், டெஸ்க்டாப்பின் டாஸ்க்பாரில் கிளிக் செய்து, Properties தேர்ந்தெடுத்து, அதன் டேப்களில் கிளிக் செய்தால், நமக்கு பலவகை boot to desktop, default to Apps view in the Start screen, and list desktop apps first in the Apps view என ஆப்ஷன்கள் கிடைக்கின்றன. இதன் மூலம், பயனாளரின் விருப்பத்திற்கேற்ற கம்ப்யூட்டராக மாற்றப்பட்டுகிறது. விண்டோஸ் 8ல், மைக்ரோசாப்ட் வடிவமைத்த கட்டமைப்பிற்குள் நாம் வளைய வேண்டி இருந்தது.

2. அப்ளிகேஷன்கள்: அப்ளிகேஷன்கள், திரையை ஒருமுறை ஸ்வைப் செய்தால் கிடைக்கின்றன. தொடுதிரை இல்லாத சாதனங்களில், ஒரு அம்புக்குறியினைக் கிளிக் செய்தால் போதுமானது. நான்கு வகையாக அப்ளிகேஷன்களைப் பிரித்து அடுக்கி வைத்து, எளிதாகப் பயன்படுத்தலாம். அப்ளிகேஷன்களைக் கண்டறிய அதிகத் தேடல் நேரம் தேவைப்படுவதில்லை.

3. டைல்ஸ்களை குரூப்பாக அமைத்தல்: விண்டோஸ் 8ல், ஸ்டார்ட் ஸ்கிரீனை நம் தேவைகளுக்கேற்ப அமைப்பது சற்று சிரமமானதாக இருந்தது. சிறிய வேலைகளுக்குக் கூட, பல செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டியதிருந்தது. விண்டோஸ் 8.1ல், இந்த செயல்பாடு ஒழுங்கு படுத்தப்பட்டுள்ளது. எடுத்துக் காட்டாக, ஒரு கிளிக்கில், ஆறு அப்ளிகேஷன்களை ஒரு குழுவாக அமைக்கலாம். குழுவாக அமைக்கப்பட்ட டைல் ஒன்றின் தன்மையை, மாற்றி அமைக்கலாம்; டைலின் அளவை மாற்றலாம்; நகர்த்தலாம்; டாஸ்க்பாரில் ஒட்டலாம் அல்லது நீக்கலாம். ஒரே கிளிக்கில் அன் இன்ஸ்டால் செய்திடலாம். இன்னொரு நிலைக்கு மாற்றித்தான், குரூப்பின் பெயர்களை மாற்ற வேண்டும் என்பதில்லை. அப்படியே வைத்துக் கொண்டும் மாற்றலாம்.

4. கண்ட்ரோல் பேனல் மாற்றம்: விண்டோஸ் 8 கண்ட்ரோல் பேனல் முழுமையடையாத தோற்றத்தினையும் செயல்பாட்டினையும் கொண்டிருந்தது. சிறிய, எளிய வேலைகளுக்குக் கூட, டெஸ்க்டாப் செல்ல வேண்டியதிருந்தது. விண்டோஸ் 8.1 ல், கம்ப்யூட்டர் செட்டிங்ஸ் மிக எளிமைப்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக் கணக்கான செயல்பாடுகள், புதிய ஆப்ஷன்கள் அனைத்தும் ஒன்பது வகைகளிலும், இவற்றின் 42 துணைப் பிரிவுகளிலும் வகைப்படுத்தப்பட்டுள்ளன. டெஸ்க்டாப் கண்ட்ரோல் பேனலின் டிஸ்பிளே டயலாக் பாக்ஸ் தோற்றம், 1990லிருந்து மாற்றப்படாமலேயே இருந்து வந்தது. இந்த புதிய அப்டேட்டில், இது முற்றிலும் புதிய தோற்றத்தையும் உணர்வினையும் தரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது.

5. ஸ்கை ட்ரைவ் இணைந்தே உள்ளது: ஒரு புதிய யூசர் அக்கவுண்ட் செட் செய்திடுகையில், SkyDrive உடன் இணைக்க பயனாளருக்கு ஓர் ஆப்ஷன் தரப்படுகிறது. இதற்கு விருப்பம் தெரிவித்தால், புதிய கம்ப்யூட்டர் அமைப்பில், இந்த வசதி தரப்படுகிறது. வெளியே இருந்து எந்த வசதியும் தேவைப்படுவதில்லை. SkyDrive இதிலேயே ஒருங்கிணைக்கப்படுவதால், இது விண்டோஸ் ஆர்.டி. சாதனத்திலும் செயல்படும்.

6. திரும்பக் கிடைத்த ஸ்டார்ட் பட்டன்: பெரும்பாலான வாடிக்கையாளர்கள் குறையாகக் கூறிய ஸ்டார்ட் பட்டன் இல்லாமை, இதில் நிவர்த்தி செய்யப்பட்டு, ஸ்டார்ட் பட்டன் தரப்பட்டுள்ளது. புதிய ஸ்டார்ட் பட்டனை, எந்த செயல்பாடும் மறைக்க முடியாது. ஒரு சின்ன கிளிக், நம்மை ஸ்டார்ட் ஸ்கிரீனுக்கு அழைத்துச் செல்கிறது. குறிப்பிட்டுச் சொல்ல வேண்டிய மாற்றமாக, ரைட் கிளிக்கில் கிடைக்கும் பவர் யூசர் மெனுவில் தரப்படும் Shutdown ஆப்ஷன்களைக் குறிப்பிடலாம்.

7. பைல் எக்ஸ்புளோரர்: விண்டோஸ் 8 சிஸ்டத்தில், இல்லாமல் போய்விட்டதே என்று கவலைப் பட்டவர்களுக்குச் சற்று ஆறுதல் தரும் மாற்றம் கிடைத்துள்ளது. ஒரு ரைட் கிளிக் செய்தால் கிடைக்கும் ஷார்ட்கட் மெனுவில், Libraries மீண்டும் அமைக்கலாம். இந்த மாற்றம் மூலம் This PC என்பது Computer ஆக மாறுகிறது.

8. டெஸ்க்டாப் ஆப்ஷன்ஸ்: விண்டோஸ் 8.1 பெர்சனல் கம்ப்யூட்டரை, விண்டோஸ் 7 கம்ப்யூட்டராக மாற்றி அமைக்க வேண்டும் என விருப்பப்பட்டால், தொடக்கத்தில் கிடைக்கும் ஸ்கிரீனைத் தாண்டி, டெஸ்க்டாப் அப்ளிகேஷன்களை நேரடியாகக் காட்டும் படி அமைக்கலாம். தேவையற்ற, நம் கவனத்தைச் சிதற அடிக்கும் விண்டோஸ் 8 அப்ளிகேஷன்களைத் தவிர்க்கலாம்.

9. எங்கும் எதையும் தேடலாம்:
விண்டோஸ் கீ + S அழுத்தினால், தேடல் கட்டம் உடனே கிடைக்கிறது. இதில் நம் தேடலை உடனே செயல்படுத்தலாம். விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இருந்தது போல, இதனைத்தான் தேடப் போகிறேன் என, வரையறை தர வேண்டியதில்லை. நீங்கள் தரும் தேடலுக்கான சொற்கள், அப்ளிகேஷன்கள், செட்டிங்ஸ் அல்லது இணையம் சார்ந்தவை என எதுவாகவும் இருக்கலாம்
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP