பார்த்த,படித்த செய்திகள்

குடும்ப அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது?

Thursday, February 27, 2014

குடும்ப அட்டை என்பது ஒவ்வொரு குடும்பத்திற்கும் அத்தியாவசியமான ஒன்று. இது ஒரு முக்கிய இருப்பிடச் சான்றாகவும், அடையாளச் சான்றாகவும் இருக்கிறது. பொது விநியோகத்திட்டத்தில் பொருள்கள் வாங்கவும் பயன்படக் கூடியது. எனவே எப்போதும் பயன்படக்கூடிய குடும்ப அட்டைக்கு எங்கே விண்ணப்பிப்பது? ஆன்லைனில் விண்ணப்பிக்கலாமா? குடும்ப அட்டைக்கு விண்ணப்பித்து மாதங்கள் பலவாகியும் தராமல் இழுத்தடித்தால் எங்கே புகாரளிப்பது?  போன்றவற்றை இங்கே தெரிந்துகொள்ளலாம்.
குடும்ப அட்டை என்பது என்ன?
குடும்பத்தில் இருக்கும் அனைத்து உறுப்பினர்களின் பெயர்களும் அடங்கிய குடும்பத்தலைவரின் புகைப்பட நகல் தாங்கிய ஒரு அடையாள அட்டை.
குடும்ப அட்டையின் அவசியம்:
பொதுவிநியோகத்திட்டத்தில் பொருட்கள் பெற மட்டுமல்லாது சமையல் எரிவாயு சிலிண்டருக்கு விண்ணப்பிக்கும் போது சமர்ப்பிக்கக்கூடிய ஆவணமாகவும், இருப்பிடச் சான்றுக்கான மிக முக்கிய ஆவணமாகவும் பயன்படுகிறது.
குடும்ப அட்டைப் பெறுவதற்கான தகுதிகள்:
  1. தனிக்குடும்பமாக வசிக்கும்  தமிழக மக்கள் எவருமே குடும்ப அட்டைக்கு விண்ணப்பிக்கலாம்.
  2. விண்ணப்பதாரர் தனது குடும்பத்துடன் தனி சமையலறையைப் பயன்படுத்துபவராக, தமிழகத்தில் வசிப்பவராக இருக்க வேண்டும்.
  3. விண்ணப்பதாரர் மற்றும் அவரது குடும்பத்தினரின் பெயர் தமிழகத்தில் வேறு எந்தக் குடும்ப அட்டையிலும் இருக்கக்கூடாது.
விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?
அனைத்து தாலுக்கா அலுவலங்களிலும் மற்றும் ஜெராக்ஸ் எடுக்கும் கடைகளிலும் விண்ணப்பப் படிவங்கள் ஆங்கிலம் மற்றும் தமிழில் கிடைக்கிறது. தமிழக அரசின் இணையதளத்தில் http://www.consumer.tn.gov.in/pdf/ration.pdf ஆங்கிலத்திலும் http://www.consumer.tn.gov.in/pdf/ration_t.pdf தமிழிலும் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.
எங்கே / யரிடம் விண்ணப்பிப்பது?
சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் அவர்கள் வசிக்கும் பகுதிக்குட்பட்ட உணவுப் பொருள் வழங்கும் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை உதவி ஆணையாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
மற்ற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்தினைப் பதிவு தபாலிலும் அனுப்பலாம். நேரில் கொடுப்பவர்கள் கண்டிப்பாகக் கொடுத்ததற்கான அத்தாட்சி சீட்டை பெற்றுக் கொள்ள வேண்டும்.
கட்டணம்:
புதிய குடும்ப அட்டைப் பெறும் போது ரூ 10 கட்டணமாகப் பெறப்படும்.
தேவையான ஆவணங்கள்:
விண்ணப்பத்தினைப் பூர்த்தி செய்து கீழ்கண்ட ஆவணங்களின் நகல் ஒன்றை இணைக்க வேண்டும்.
  1. தமிழ்நாட்டில் வசிப்பதற்கான இருப்பிடச் சான்றாக  தேர்தல் வாக்காளர் அடையாள அட்டை, மூன்று மாதத்திற்குள்ளான வீட்டு வரி / மின்சாரக் கட்டணம் / தொலைபேசிக் கட்டணம் செலுத்திய ரசீதுகளில் ஏதாவது ஒன்று  அல்லது வங்கி கணக்கு புத்தகத்தின் முதல் பக்க நகல் / பாஸ்போர்ட் நகல்/ வாடகை ஒப்பந்தம் இவற்றில் ஏதாவது ஒன்று மட்டும் போதுமானவை. ஒரு வேளை இந்த சான்றுகள் ஏதும் இல்லையென்றால், நோட்டரி பப்ளிக்கிடம் அஃபிடவிட் பெற்றுக் கொடுக்கலாம்.
  2. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கப்பட்டிருப்பின் குடும்ப அட்டை வழங்கும் அலுவலரிடமிருந்து பெறப்பட்ட ஒப்பளிப்புச் சான்று
  3. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை வழங்கும் அதிகாரியிடம் ( TSO ) பெறப்பட்ட பெற்றோர் அல்லது பாதுகாவலர் குடும்ப அட்டையிலிருந்து பெயர் நீக்கல் சான்று அல்லது பெயர் சேர்க்கப்படவில்லை என்பதற்கான சான்று.
  4. முந்தைய முகவரியில் குடும்ப அட்டை இல்லை எனில் அதற்கான “குடும்ப அட்டை இல்லை“ என்ற சான்று.
  5. எரிவாயு இணைப்பு ஏதேனும் இருப்பின், இணைப்பு யாருடைய பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்றும் எரிவாயு இணைப்பு முகவர் மற்றும் எண்ணெய் நிறுவனத்தின் பெயர் போன்றவை அடங்கிய விவரங்கள் கொடுக்க வேண்டும்.
  6. விண்ணப்பத்தினை அளித்த உடன் விண்ணப்பத்தின் வரிசை எண், தேதி, அலுவலக முத்திரையுடன் மற்றும் இறுதி முடிவு தெரிந்து கொள்ளும் தேதி ஆகியவற்றுடன் கூடிய ஒப்புகைச் சீட்டினை மனுதாரர் பெற்றுக்கொள்ள வேண்டும். பதிவுத் தபாலில் அனுப்புவர்கள் சுயமுகவரியிட்ட தபால் தலையுடன் கூடிய தபால் உறை அல்லது அஞ்சல் அட்டை இணைக்கலாம்.
குடும்ப அட்டை தொலைந்து போனால்:
தொலைந்து போன குடும்ப அட்டையின் நகலுடன் ஏதாவது ஒரு அடையாள அட்டையின் நகலையும் சேர்த்து கிராமப்புறங்களில் வட்டார உணவுப்பொருள் வழங்கு அலுவலரையும், நகர்ப்பகுதிகளில் உணவுப் பொருள் வழங்குதுறை மண்டல உதவி ஆணையரையும் அணுக வேண்டும். சம்பந்தப்பட்ட அலுவலரிடம் காணாமல் போன விவரத்தைக் குறிப்பிட்டு கடிதம் தந்து, அவர்கள் வழங்கும் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தர வேண்டும். அவர்களின் விசாரணைக்குப் பிறகு புது குடும்ப அட்டை அனுப்பி வைக்கப்படும். விண்ணப்பம் அளித்த 45 நாட்களுக்குள் புதிய குடும்ப அட்டை கிடைத்துவிடும். இதற்கு ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும்.
குடும்ப அட்டை குறித்து எங்கே புகாரளிப்பது? 
வட்ட வழங்கல் அலுவலகத்திலிருந்து மனு பெறப்பட்ட நாளிலிருந்து அடுத்த 30 நாட்களுக்குள் தணிக்கை அதிகாரிகளால் விண்ணப்பத்தின் உண்மை நிலவரத்தை அறிந்துகொள்ள அதாவது அதிகாரிகள் மனுதாரரின் வீட்டுக்கு நேரில் சென்று தனியாக சமையல் செய்யப்படுகின்றதா விண்ணப்பதாரர் சொன்னது உண்மையா என மனுதாரரின் வீட்டிற்கே வந்து ஆய்வு செய்வார்கள்.
விண்ணப்பித்த முப்பது நாட்களில் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து 60 நாட்களுக்குள் குடும்ப அட்டை கொடுக்கப்படவேண்டும் அல்லது குடும்ப அட்டை கொடுக்கபடாததற்கு காரணம் சொல்லவேண்டும். அதையும் மனுதாரருக்கு 60 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்.
வேண்டுமென்றே கொடுக்க மறுத்தாலோ, காலதாமதம் செய்தாலோ சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆணையாளருக்கும் மற்ற மாவட்டங்களில் மாவட்ட  வழங்கல் அலுவலர் அல்லது மாவட்ட ஆட்சியரிடம் புகார் செய்ய வேண்டும். அல்லது தகவல் பெறும் உரிமை சட்டத்தை பயன்படுத்தி எளிதில் வாங்க முடியும். அல்லது மாநில நுகர்வோர் மையத்தைத் தொடர்பு கொள்ளவும்.
மாநில நுகர்வோர் மையத்தை 044 – 2859 2858 என்ற எண்ணில் தொலைபேசியிலோ, consumer@tn.gov.in, schtamilnadu@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியிலோ, மாநில நுகர்வோர் உதவி மையம், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை, 4வது தளம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை – 5 என்ற முகவரியில் தபால் மூலமும் தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம்.
மேலதிக விவரங்களுக்கு:
தங்கள் பகுதிக்குட்பட்ட தாலுகா அலுவலகத்தில் உள்ள வட்ட  வழங்கல் அதிகாரியை அணுகி கூடுதல் விவரங்கள் அறிந்து கொள்ளலாம்.
உங்கள் பகுதியின் பொது விநியோகக் கடைக்கான பொருட்களின் ஒதுக்க்கீடு குறித்து அறிய http://cscp.tn.nic.in/allotment_ver2/rep_allotment_shopwise.jsp இத்தளத்திற்கு செல்லவும்.
http://egov-civilmis.pon.nic.in/SearchCard_Pondy_AppNo.aspx  புதுச்சேரியைச் சேர்ந்தவர்கள் இத்தளத்திற்கு சென்று விண்ணப்பத்தின் நிலையறியலாம்.
மேலும் விவரங்களை அறிந்துகொள்ள:  http://www.consumer.tn.gov.in/fairprice.htm இத்தளத்திற்க்குச் செல்லவும்.
 சான்றுகள் பெற கால அவகாசம்?
  • பெயர் நீக்கம் அல்லது சேர்த்தல் சான்றுப் பெற 3 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்.
  • முகவரி மாற்றம் அதே ரேசன் கடையின் எல்லைக்குள் 3 நாட்களுக்குள் கொடுக்க வேண்டும்
  • முகவரி மாற்றம் கடை மாற்றத்துடன் 7 நாட்களில் கொடுக்க வேண்டும்
  • குடும்ப அட்டை ஒப்படைப்பு சான்று வேறு மாநிலம், இதர நகரங்களுக்கு 2 நாட்களில் கொடுக்க வேண்டும்
  • மாநிலத்திற்குள் வேறு மாவட்டம் அல்லது வேறு தாலுக்கா முகவரி மாற்றம் 7 நாட்களில் கொடுக்க வேண்டும்
  • புதிய குடும்ப அட்டை 60 நாட்களில்
    நகல் குடும்ப அட்டை பெற 45 நாட்களில்
    குடும்ப அட்டை இல்லா சான்று 7 நாட்களில் கொடுக்கப்பட வேண்டும்.
மேற்கண்ட சான்றுகள் பெற உதவி ஆணையாளரிடம் அல்லது வட்ட வழங்கல் அலுவலரிடம் விண்ணப்பிக்க வேண்டும்.
 நன்றி – புதிய தலைமுறை 
              இவள் பாரதி

Read more...

வில்லங்க சான்றிதழ் பெறுவது எப்படி?

நிலம், வீடு போன்ற அசையா சொத்துக்களை வாங்கும் முன்பு அந்த சொத்து பற்றிய அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்.  சம்பந்தபட்ட சொத்து உரிய முறையில் பதிவு செய்யப்பட்டுள்ளதா? அதில் ஏதும் பிரச்சினைகள் உள்ளதா? என்பதைக் கண்டறிய வில்லங்க சான்றிதழ் அவசியம். வில்லங்க சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி? எளிய முறையில் அதை ஆன்லைனில் பெறுவது எப்படி? என்பதை தெரிந்து கொள்ளலாம்.
வில்லங்க சான்றிதழ் என்பது என்ன?
ஒருவர் தான் வாங்குகிற சொத்துக்களை உரிய முறையில் பதிவு செய்வது மிக அவசியம். ஆனால் பலருக்கு இது குறித்த விழிப்புணர்வு குறைவாகவே இருக்கிறது. இதன் காரணமாக பல சொத்துப்  பிரச்சினைகள் ஏற்படுகிறது. எனவே வில்லங்க சான்றிதழ் எனப்படும் EC (Encumbrance Certificate) மூலம் ஒரு குறிப்பிட்ட சொத்தின் பதிவு விவரங்கள் அனைத்தையும் தெரிந்து கொள்ள முடியும்.
வில்லங்க சான்றிதழின் அவசியம் என்ன?
வீடு, நிலம் போ‎‎ன்ற அசையா சொத்துக்கள் வாங்குகிற போது அதற்கு சட்ட ரீதியான வழிமுறை என்ன என்பதை அறியாமல் கேள்விப்படும் விபரங்களைக் கொண்டும், தெரிந்தவர்கள் சொல்கிறார்கள் என்றும் சொத்துக்களை வாங்கி விடுகின்றனர். ஒருவேளை அந்த சொத்தானது சரியான முறையில் பதிவு செய்யப்படாத நிலையில் சொத்தினை வாங்குபவர்கள்  பல பிரச்சினைகளுக்கு உள்ளாகக் கூடும். சில சமயங்களில் சொத்துக்களை இழக்கும்நிலை கூட வரலாம். எனவே வாங்குகிற சொத்தில் வில்லங்கம் ஏதும் இருக்கிறதா? என்று பார்த்து வாங்கினால் எந்த வில்லங்கமும் வராது. அப்படியே வில்லங்கம் இருந்தால் அதை வாங்காமல் வில்லங்கத்திலிருந்து தப்பித்துக் கொள்ளலாம்.
வில்லங்க சான்றிதழில் என்னென்ன விவரங்கள் இருக்கும்?
1.சர்வே எண்
2. விற்பவரும் வாங்குபவரும் செய்து கொண்ட ஒப்பந்தம், செய்து கொண்ட தேதி, பதிவு செய்யப்பட்ட தேதி
3. பதிவுத் தன்மை அதாவது Sale Deed, Mortgage Deed, Agreement போன்ற விவரம்
4. சொத்தின் மதிப்பு
5. சொத்தை எழுதிக் கொடுப்பவர் மற்றும் எழுதி வாங்குபவர் பெயர்
6. தொகுதி மற்றும் பக்க எண்
7. பதிவு செய்யப்பட்ட ஆண்டு மற்றும் பதிவு எண்
இவற்றின் மூலம் ஒரு சொத்து எந்தெந்த வருடம் யாரால் வாங்கப்பட்டிருக்கிறது போன்ற முழு விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். வில்லங்க சான்றிதழை வைத்தேத் தாய்பத்திரத்தில் இருந்து யாரிடம் நிலம் வாங்கப்படுகிறதோ அதுவரைக்கும்  உள்ள  எல்லா பத்திரங்களையும்  சரி பார்த்துக் கொள்ளலாம். அதுமட்டுமின்றி அந்த சொத்து ஏதேனும் ஒரு வங்கியில் பதிவு செய்யப்பட்ட அடமானத்தில் இருக்கிறதா? என்பதையும் தெரிந்து கொள்ள முடியும்.
 வில்லங்க சான்றிதழுக்கு எங்கே விண்ணப்பிப்பது?
எந்த சார்பதிவாளர் அலுவலகத்தில் சொத்து பதிவு செய்யப்பட்டிருக்கிறதோ அங்கே வில்லங்கச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது சென்னை பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் விண்ணப்பம் செய்து தமிழ்நாட்டில் உள்ள எந்த சொத்திற்கும் வில்லங்க சான்றிதழ் பெறலாம்.
 விண்ணப்பம் எங்கே கிடைக்கும்?
பத்திரப்பதிவு அலுவலகத்திலேயே இதற்கான விண்ணப்பம் கிடைக்கும். விண்ணப்பத்தில் விண்ணப்பம் செய்பவரின் பெயர், முகவரி, சொத்து விவரம் மற்றும் கிரையப்பத்திர விவரம் ஆகியன கேட்கப்பட்டிருக்கும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து தேவையான கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பம்செய்ய வேண்டும்.
எப்படி விண்ணப்பிப்பது?
விண்ணப்பத்தில் விண்ணப்பதாரரின் பெயர், முகவரி, சொத்து விவரம் மற்றும் கிரையப்பத்திர விவரம் முதலியவைகள் கேட்கப்பட்டிருக்கும். விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து அதற்குரிய கட்டணத்தைச் செலுத்தி விண்ணப்பிக்க வேண்டும்.
எத்தனை ஆண்டுகளுக்கு வில்லங்க சான்றிதழ் பெற முடியும்?
பொதுவாக முப்பது ஆண்டுகள் அல்லது அதற்கு மேல் தான் வில்லங்க சான்றிதழ் கேட்கப்படுகின்றது. அவரவர் தேவையைப் பொறுத்து வருடங்கள் மாறுபடலாம்.
கட்டணம் எவ்வளவு?
பத்து வருடங்களுக்கு எனில் முதல் வருடத்திற்கு 15 ரூபாயும், அடுத்த ஒவ்வொரு வருடத்திற்கு ஐந்து ரூபாயும்  வசூலிக்கப்படும். இதனுடன் விண்ணப்பத்திற்கு 11 ரூபாய் கட்டணமாக வசூலிக்கப்படும்.
ஆன்லைனில் வில்லங்க சான்றிதழுக்கு விண்ணப்பிப்பது எப்படி?
தற்போது பத்திரபதிவு அலுவலகங்கள் கணிணிமயமாக்கப்பட்டு வருகிறது. இதுவரைக்கும் 26 ஆண்டுகளுக்கு அதாவது 1987 ஆம் ஆண்டு முதல் சொத்துவிவரங்கள் பதிவுசெய்யப்பட்டிருக்கிறது. எனவே 1987க்குப் பிறகான வில்லங்க சான்றிதழை பெறுவது எளிது. அதற்கு மேல் வேண்டுமெனில் தேடி கைப்பட எழுதித்தான் தருவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பவர்களுக்கு தபால் மூலமோ அல்லது நேரிலோ EC கொடுக்கப்படும். அவ்வாறு கொடுக்கப்படும் போது அதற்குரிய கட்டணங்கள் வசூலிக்கப்படும். கட்டண விவரங்களை http://www.tnreginet.net/igregn/webAppln/indexFee.asp இதில் தெரிந்துகொள்ளலாம்.
பின்வரும் இணைப்பில் சென்று அனைத்து விவரங்களையும் பதிவிட்டு EC பெற்றுக் கொள்ளலாம்.   ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் ஒருரூபாய் மட்டுமே.
தமிழில் விண்ணப்பிக்க http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=1  ஆங்கிலத்தில் விண்ணப்பிக்க http://www.tnreginet.net/igregn/webAppln/EC.asp?tams=0
http://www.tnreginet.net/igr/webAppln/EC.asp?tams=0 இந்த இணைப்பில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து நேரடியாகச் சென்றும் பெற்றுக் கொள்ளலாம். அல்லது உங்கள் முகவரிக்கும் அனுப்பச் சொல்லலாம். அதற்குரிய தபால் செலவை தபால் கிடைக்கும்போது செலுத்திப் பெற்றுக் கொள்ளவேண்டும்.
விண்ணப்பத்தின் நிலையறிய http://www.tnreginet.net/webec_status_public.asp இந்த இணைப்பில் செல்லவும்.
ஒவ்வொரு மாவட்டத்தின் தொடர்பு முகவரியையும், தொலைபேசி எண்ணையும் http://www.tnreginet.net/english/dro_list.asp  இந்த இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.
வீட்டுக்கு முகவரிக்கு நேரடியாக மேலும் விவரங்களை http://www.tnreginet.net/ இத்தளத்தில் தெரிந்து கொள்ளலாம்.
 வில்லங்க சான்றிதழில் தெரிந்து கொள்ளமுடியாத சில தகவல்கள்:
  • சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்கு யாரிடமாவது பதிவு செய்யப்படாத ஒப்பந்தம் போட்டிருந்தாலோ, அடமானம் வைத்திருந்தாலோ இது குறித்த தகவல்கள் வில்லங்க சான்றிதழில் வராது.
  • 1.11.2009க்குப் பின்னர் சொத்தின் உரிமையாளர் சொத்தை விற்பதற்கு Power of attorney யாக யாரையாவது நியமித்திருந்தால் அதைத் தெரிந்துகொள்ள முடியும். ஏனெனில் அதற்கு முன் அதனை பதிவு செய்யும் முறையை அரசு அமல்படுத்தவில்லை. எனவே 1.11.2009க்கு முன் உள்ள Power of attorney குறித்த தகவல்கள் வில்லங்க சான்றிதழில் வராது.
நன்றி – புதிய தலைமுறை 
              இவள் பாரதி

Read more...

பள்ளி / கல்லூரிச் சான்றிதழ் தொலைந்தால் புதிய சான்றிதழ் பெறுவது எப்படி?

வீட்டில் பத்திரமாக இருக்கும் பள்ளிச் சான்றிதழ்கள், மதிப்பெண் பட்டியல்கள் இவற்றை சில சமயங்களில் சரிபார்த்தல் (Verification) அல்லது நேர்காணல் போன்ற காரணங்களுக்காக வெளியில் எடுத்துச் செல்ல நேரலாம். அப்படி செல்லும்போது பயணத்தில் தொலைந்துவிட்டாலோ அல்லது சுனாமி, வெள்ளம் போன்ற இயற்கைச் சீற்றங்களினால் அழிந்துவிட்டாலோ அல்லது எதிர்பாராதவிதமாக தீ விபத்துகளில் சேதமாகியிருந்தாலோ, கரையான்களால் பழுதுபட்டிருந்தாலோ மீண்டும் புதிய சான்றிதழை விண்ணப்பித்துப் பெற்றுக் கொள்ளவேண்டும்.

ஏனெனில் இந்தச் சான்றிதழ்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் பயன்படக்கூடிய முக்கிய ஆவணங்களாகும். மேற்படிப்பு பயில, அரசின் கடன் உதவி பெற, வேலைகளில் சேர போன்றவற்றிற்கு மட்டுமல்லாது வயதுச் சான்றாகவும் பயன்படுகிற ஆவணங்கள் இவை. பள்ளி / கல்லூரிச் சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள் தொலைந்துபோனால் எப்படி புதிய சான்றிதழ்கள் பெறுவது  எப்படி?  


பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்து போனால்:

பள்ளி மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.  


விண்ணப்பத்துடன் வட்டாட்சியரிடம் பள்ளி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துவிட்டது என்ற சான்றிதழை வாங்கி இணைத்துக் கொடுக்க வேண்டும். இத்துடன் பள்ளிச் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தையும் செலுத்தி ரசீதை இணைக்க வேண்டும்.


எந்தப் பள்ளியில் படித்தீர்களோ அந்தப் பள்ளித் தலைமை ஆசிரியரிடமே விண்ணப்பிக்கலாம். இணைக்க வேண்டிய ஆவணங்கள்: மதிப்பெண் பட்டியல் நகல், பள்ளி மாற்றுச் சான்றிதழ் நகல், கட்டணம் செலுத்திய ரசீது.


கல்லூரிச் சான்றிதழ் தொலைந்து போனால்:

கல்லூரி மாற்றுச் சான்றிதழ் தொலைந்துபோனால் உடனடியாக காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும். அவர்கள் கண்டுபிடிக்க முடியவில்லை என்கிற சான்றை வழங்குவர்.


அத்துடன் சான்றிதழ் தொலைந்தது குறித்து வட்டாட்சியரிடம் மனு செய்ய வேண்டும். அவர் அந்தப் பகுதி வருவாய் ஆய்வாளரால் விசாரணை நடத்திய பின்னர் சான்றிதழ் தொலைந்தது உண்மை எனச் சான்று வழங்குவார்.


பின்னர் காவல்துறை அளித்த சான்று, வட்டாட்சியர் அளித்த சான்று இவற்றுடன் கல்லூரி நிர்ணயம் செய்த தேடுதல் கட்டணத்தைச் செலுத்தி கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


பள்ளி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால்:

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால் முதலில் அந்தப் பகுதியிலுள்ள காவல் நிலையத்தில் புகாரளிக்க வேண்டும்.


அத்துடன் மதிப்பெண் பட்டியலின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம், மாதம் ஆகிவற்றைக் குறிப்பிட்டு அந்தப் பகுதியில் உள்ள ஒரு முன்னணி நாளிதழில் அறிவிப்பு விளம்பரம் வெளியிட வேண்டும்.


பின்னர் காவல் நிலையத்தில் புகாரளித்ததற்கான ரசீது, பிரசுரமான விளம்பரம் ஆகியவற்றை இணைத்து பள்ளித் தலைமை ஆசிரியர் வழியாக மாவட்டக் கல்வி அதிகாரிக்கு விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.


இதனுடன் தேடுதல் கட்டணம் வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும்.


மனுவைப் பரிசீலித்து மாவட்டக் கல்வி அதிகாரி மாநில பள்ளிக் கல்வித்துறைக்கு விண்ணப்பம் செய்வார்.   


கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்து போனால்:

கல்லூரி மதிப்பெண் சான்றிதழ் தொலைந்துவிட்டால் கடைசியாகப் படித்த கல்லூரி முதல்வருக்கு விண்ணப்பம் செய்ய வேண்டும்.


விண்ணப்பத்தைப் பெற்றுக் கொண்ட கல்லூரி முதல்வர் மதிப்பெண் சான்றிதழின் எண், பதிவு எண், தேர்வு நடந்த வருடம் ஆகியவற்றைச் சரிபார்த்து பல்கலைக்கழக  தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரிக்குப் பரிந்துரைத்து எழுதுவார்.


இத்துடன் மதிப்பெண் சான்றிதழ் பெறுவதற்கான கட்டணத்தை வங்கி வரைவோலையாக எடுத்து அனுப்ப வேண்டும். மனுவைப் பெற்றுக் கொண்ட தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி மதிப்பெண் சான்றிதழ் வழங்குவார்.


விண்ணப்பம் செய்ததிலிருந்து 60 நாட்களுக்குள் இச்சான்றிதழ்கள் கிடைக்கப்பெறும்.


தனித்தேர்வர்களுக்கு:

தனித்தேர்வர்கள் நேரடியாக  தேர்வுத்துறை இயக்குநர்  அலுவலகத்திற்கு  விண்ணப்பம் அனுப்ப வேண்டும்.  பட்டம் மற்றும் அதற்கு மேற்பட்ட உயர் கல்விக்கு  சம்பந்தப்பட்ட பல்கலைக்கழகங்களை அணுக வேண்டும்.


பின்குறிப்பு:

பள்ளி / கல்லூரி மாற்றுச் சான்றிதழ்கள், பள்ளி / கல்லூரி மதிப்பெண் சான்றிதழ்கள் புதிதாகப் பெற அந்தந்த பள்ளித் தலைமையாசிரியரையோ அல்லது கல்லூரி முதல்வரையோ அணுகி மேலதிக விவரங்களையும், கட்டண விவரங்களையும் தெரிந்துகொள்ளவும்
நன்றி : புதிய தலைமுறை
             இவள் பாரதி

Read more...

ஜாதிச் சான்றிதழ் பெறுவது எப்படி

எங்கே விண்ணப்பிப்பது? என்னென்ன தேவை?
பொருளாதார மற்றும் சமூக  நிலைகளில் பின்தங்கி  இருப்பவர்களை முன்னேற்றும் விதமாக கல்வி மற்றும் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை தருவது உள்ளிட்ட சில சலுகைகளை அரசு அளித்துள்ளது. இவற்றைப் பெறுவதற்கு ஜாதிச் சான்றிதழ் மற்றும் வருமானச் சான்றிதழ் அவசியமாகிறது. பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு ஜாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆகியவை பெரும்பாலும் தேவைப்படும். எனவே இந்தச் சான்றிதழ்களை எவ்வாறு பெறுவது, இந்தச் சான்றிதழ்களின் பயன்பாடு என்ன என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.

ஜாதிச் சான்றிதழ் 
ஒருவர் தமிழக அரசின் ஜாதிகள் பட்டியலிலுள்ள குறிப்பிட்ட ஜாதியைச் சேர்ந்தவர் எனத் தெரிவித்து வருவாய்த் துறை அளிக்கும் சான்றிதழே ஜாதிச் சான்றிதழ்.
ஜாதிச் சான்றிதழ் பெரும்பாலும் மாணவர்களுக்கும், அரசுப் பணியில் சேருபவர்களுக்கும் மட்டுமே நடைமுறையில் தேவைப்படுகிறது. இச்சான்றிதழ் ஒரு தற்காலிகச் சான்றிதழே. ஏனெனில் எவரும் ஜாதியை மாற்ற முடியாது.

ஆனால் வகுப்பு மாறலாம். அதாவது ஒருவர் பிற்பட்ட வகுப்பில் இருக்கிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர், தனது மதத்தை மாற்றிக்கொள்ளும்போது, வேறு வகுப்பிற்கு சென்றுவிடுவார். அதாவது, ஆங்கிலத்தில் community certificate என்று அழைக்கப்படும் இச்சான்றிதழ் தமிழில் வகுப்புச் சான்றிதழ் என்றே அழைக்கப்பட வேண்டும். ஆனால், ஜாதிச் சான்றிதழ் என்றுதான் அழைக்கப்படுகிறது. எனவே, ஜாதியை மாற்ற முடியாவிட்டாலும், வகுப்பு என்பது நிலையானதல்ல. எனவே, ஜாதிச் சான்றிதழும் ஒரு நிலையான சான்றிதழ் அல்ல. இருப்பினும் மாணவர்கள் தங்கள் கல்வித் தேவைகளுக்காக ஒருமுறை இச்சான்றிதழைப் பெற்றால், அதைப் பல வருடங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம்.

மதம் மாறினால்:
மாணவர்களின் பெற்றோர் தங்களது மதத்தை மாற்றிக்கொண்டால், அதை முறைப்படி தெரிவித்து, தங்களது ஜாதிச் சான்றிதழையும் மாற்றிக்கொள்ள வேண்டும்.

பிற காரணங்கள்:
கல்விக் காரணங்களைத் தவிர்த்து மற்ற காரணங்களுக்காக இச்சான்றிதழ் தேவைப்படலாம். உதாரணமாக இரண்டு பெண் குழந்தைகள் நலத்திட்டத்திற்கு இச்சான்றிதழ் வேண்டுமென்றால், அதற்கு வழங்கப்படும் சான்றிதழ் ஒரு முறை, குறிப்பிட்ட காரணத்திற்காக மட்டும் பயன்படுத்தும்படியே வழங்கப்படும்.

எங்கே விண்ணப்பிப்பது?
வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் பெற்று, தேவையான ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்துப் பெற்றுக்கொள்ள வேண்டும்.

தேவையான ஆவணங்கள்:
குடும்ப அட்டை, மாற்றுச் சான்றிதழ், பெற்றோரின் இனச் சான்று ஆகியவற்றின் நகல்களை இணைக்க வேண்டும்.

வேறு ஆவணங்கள் ஏதாவது இருப்பின் கூடுதலாக அளிக்கலாம்; ஆனால் கட்டாயமில்லை. பொதுவாக மனுவுடன் கூடுதல் ஆவணங்களை/ சான்றுகளை இணைப்பது வட்டாட்சியரின் பணிகளில் ஓர் எளிமையைக் கொண்டுவந்து, சான்றிதழை விரைவாகப் பெறுவதற்காகவே.

ஒருவருக்கு குடும்ப அட்டையே இல்லை; எனவே அவருக்குச் ஜாதிச் சான்றிதழே வழங்க முடியாது என்று கூற முடியாது. வேறு ஆவணங்கள் ஏதும் இல்லையென்றால், மனுவை மட்டும் உரிய முறையில் பூர்த்தி செய்து அளித்தால் போதுமானது. இப்படி மனு அளிக்கும்போது, சான்றிதழ் பெற இரண்டு அல்லது மூன்று நாள்கள் கூடுதலாக எடுத்துக்கொள்ளப்படும். எனினும் சான்றிதழ் வழங்குவதற்குத் தேவையற்ற காலதாமதத்தை வட்டாட்சியர் அலுவலகம் ஏற்படுத்த முடியாது.

ஏனென்றால், வட்டாட்சியர் அலுவலகம்தான் அடிப்படைச் சான்றுகளை அளிக்கும் ஒரு அலுவலகம். அவர்களே பொதுமக்களிடம் ஏதாவது சான்று கொடுத்தால்தான் பொதுமக்கள் கேட்கும் சான்றிதழை வழங்க முடியும் என்று கூறுவது முறையல்ல.

எந்த ஆவணமும் இணைக்கப்பட முடியாதபோது, பொதுமக்கள் தங்களுக்குத் தேவையான சான்று பெற, வட்டாட்சியருக்கு முழு ஒத்துழைப்பு நல்க வேண்டும் என்பது ஒரு கூடுதல் தேவை.

அதாவது தங்களது கோரிக்கைக்கு வலுவூட்டும் காரணிகளை அளித்தல் உள்ளிட்ட சில கூடுதல் பணிகளைச் செய்யலாம். இதுவும் கட்டாயமல்ல.

ஒரு வட்டாட்சியருக்கு, எவ்வகையிலும் விசாரித்து எந்த உண்மையையும் கொண்டுவரத் தேவையான அனைத்து அதிகாரமும் வழங்கப்பட்டுள்ளது. எனவே, ஆவணங்கள் இருந்தால் அளிக்கலாம்; இல்லாவிட்டால் வட்டாட்சியரே சரியான சான்று வழங்குவார்.


வருமானச் சான்றிதழ்

ஆண்டு வருமானம் இவ்வளவு என்று வருவாய்த் துறையால் அளிக்கப்படும் சான்றிதழே வருமானச் சான்றிதழாகும்.

வருமானச் சான்றிதழானது பள்ளி, கல்லூரியில் சேருவதற்கும், கல்விக் கடன்கள் பெறுவதற்கும் மாணவர்களுக்கும் அவர்களின் பெற்றோர்களுக்கும் அதிக அளவில் பயன்படுகின்றன. மேலும், வங்கியில் கடன் பெற, மூவலூர் இராமாமிர்தம் திருமண உதவித்திட்டம், இரண்டு பெண் குழந்தைகள் நலத்திட்டம் உள்ளிட்ட அரசின் நல உதவிகள் பெறுவதற்கும் அரசுப் பணிகளில் பணியமர்த்தப்படுவதற்கும் இன்றியமையாத ஒன்றாகிறது. இந்தச் சான்றிதழ்களைக் கொண்டு குறிப்பிட்ட ஒதுக்கீட்டின் கீழாக அரசு அளிக்கும் பல்வேறு சலுகைகளைப் பெற முடியும்.

ஆண்டு வருமானம் பன்னிரண்டாயிரத்திற்குக் குறைவாக உள்ளவர்கள் ரூபாய் இரண்டுக்கும், அதற்கு மேல் வருமானம் உள்ளவர்கள் ரூபாய் பன்னிரண்டுக்கும் நீதிமன்ற வில்லை ஒட்ட வேண்டும்.

தமிழக அரசுப் பணியாளர்கள் இந்த முத்திரை வில்லைகளை ஒட்ட வேண்டியது இல்லை. வட்டாட்சியர் இம்மனுவைத் தகுந்த விசாரணைக்கு உட்படுத்தி, மனுதாரரின் தகவல்கள் சரியானவை என்று உறுதிப்படுத்திக் கொண்ட பிறகு சான்று வழங்குவார்.

ஆண்டு வருமானம் ரூபாய் இரண்டு லட்சத்திற்குக் குறைவாக இருந்தால் மண்டல துணை வட்டாட்சியர்களும், அதற்கு மேல் ரூபாய் மூன்று லட்சம் வரை வட்டாட்சியரும் சான்று வழங்குவர்
 நன்றி : புதிய தலைமுறை
               இவள் பாரதி

Read more...

புயல் எவ்வாறு உருவாகிறது.

Wednesday, February 26, 2014

பொதுவாகவே கடலின் நீர்மட்டம் 26.5 டிகிரி என்ற அளவில் தான் இருக்கும் இந்த அளவிற்கு மேல் வெப்பம் அதிகமாகும் போது கடல் நீர் ஆவியாகி மேல் நோக்கி பரவுகிறது அது வானத்தின் குறிப்பிட்ட  உயரத்திற்கு  சென்றதும். குளிர்ச்சி அடைந்து மேகமாய் உருவாகிறது.கடல் நீர் ஆவியாகி மேலே செல்லும்போது காற்றின் வேகம் அதிகமாகி ஒரு சுழற்சி உருவாகிறது குறைந்த காற்றழுத்த  மண்டலாக மாறி  சுற்றிலும் பரவியிருக்கும் காற்றை உள்ளிழுக்கும் போது அந்த  சுழற்சி வலுவடைந்து ஒரு புயலாக மாறுகிறது 
காற்றின் வேகம் ம்ணிக்கு 75 கி.மீ என்ற அளவில் இருந்தால் மட்டுமே அது புயல் என அழைக்கப்படுகிறது.
புயல் மெள்ள மெள்ள வலுவடையும் போது அது ஒரு வண்டிச்சக்கடம் போல் உருமாற்றம் பெற்று சுழ்ல் ஆரம்பிக்கிறது. அந்த சக்கரத்தின் மைய பகுதியை புயலின் கண் என்று அழைக்கிறார்கள்.
காற்றின் வேகம் அதிகமாக இருப்பதன் காரணமாக கடலி மேற்பரப்பில் உருண்டு கொண்டே போகும் .மேகங்களை சுருட்டிக் கொண்டு வேகமாக கரையை நோக்கி பயணிக்கும்.
வானிலை நிபுணர்கள் புயலின் கண் அசைவின் வேகத்தை வைத்து அது ந்கரும் திசை ஆந்திராவா ,ஒரிசாவா? என்பதை  நிர்ணயம் செய்வார்கள்.

Read more...

குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பயனாளர்களுக்கு எச்சரிக்கை

Monday, February 24, 2014

தங்களுடைய கம்ப்யூட்டர்களில், கூகுள் குரோம் மற்றும் பயர்பாக்ஸ் பிரவுசர்களைப் பயன்படுத்துவோர், உடனே அவற்றினை தற்போதைய பதிப்புடன் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என, இந்தியாவில், இணையத் தாக்குதல்களுக்கு எதிரான அமைப்பாக இயங்கி வரும்-Computer Emergency Response Team of India (CERTIn) மையம் கேட்டுக் கொண்டுள்ளது.
 இந்திய இணைய வெளியில், ஹேக்கிங் என அழைக்கப்படும் கம்ப்யூட்டரை வைரஸ் அல்லது மால்வேர் மூலம் கைப்பற்றும் தொழில் நுட்பத்திற்கு எதிரான எச்சரிக்கைகளை இந்த அமைப்பு வழங்கி வருகிறது.
இந்த இரண்டு பிரவுசர்களையும் மையமாகக் கொண்டு பல வைரஸ்கள் முடுக்கி விட்டிருப்பதாக இந்த மையம் அறிவித்துள்ளது. இவற்றிலிருந்து தப்பிக்க, இந்த பிரவுசர்களின் இன்றைய பதிப்பிற்கு அனைவரும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது.
குறிப்பிடப்படும் வைரஸ்கள், இந்த பிரவுசர்கள் வழியாகக் கம்ப்யூட்டரை அடைந்து தங்கள் வேலையைக் காட்டும் போது, தேவையற்ற பைல்கள், இணையத்திலிருந்து டவுண்லோட் செய்யப்படும். கம்ப்யூட்டரின் மெமரி கரப்ட் ஆகும். தனிநபர் தகவல்கள், நிதி சார்ந்தது உட்பட, திருடப்பட்டு, வைரஸை அனுப்பிய ஹேக்கர்களுக்குச் செல்லும்.
பயர்பாக்ஸ், தண்டர்பேர்ட் மற்றும் ஸீ மங்க்கி பயன்படுத்துபவர்கள் உடனடியாக அப்கிரேட் செய்திடும்படி கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். பயர்பாக்ஸ் பதிப்பு 27.0 க்கு முந்தைய பதிப்புகள் வைத்து இயக்குபவர்களும், தண்டர்பேர்ட் பதிப்பு 24.3 க்கு முன் வைத்திருப்பவர்களும், ஸீ மங்க்கி பதிப்பு 2.24 க்கு முன் இன்ஸ்டால் செய்து பயன்படுத்தி வருபவர்களும், கூகுள் குரோம் பதிப்பு 32.0.1700.102க்கு முந்தையதை வைத்திருப்பவர்களும், கட்டாயம் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நன்றி-தினமலர்

Read more...

"வாட்ஸ் அப்' செயலியை பேஸ்புக் தன வசப்படுத்தியது

பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ் அப் செயலியை வாங்கிக் கொள்ள ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது. பேஸ்புக், கூகுள், மைக்ரோசாப்ட் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் பயனுள்ள வகையில் இயங்கும் பிற நிறுவனங்களை வாங்கி தங்களுடையதாக்கிக் கொள்வது ஒரு நடைமுறையாகவே இருந்து வருகிறது. 
அதிக பட்ச விலை கொடுத்து வாங்கிய வரிசையில், மைக்ரோசாப்ட் ஸ்கைப் நிறுவனத்தை 850 கோடி டாலர் கொடுத்து வாங்கியது.
 கூகுள் மோட்டாரோலா நிறுவனத்திற்கு 1,250 கோடி கொடுத்தது.
ஆப்பிள் நூறு கோடி டாலருக்கு மேல் எந்த நிறுவனத்தையும் வாங்கியதில்லை.
ஆனால், முதல் முறையாக மிக அதிக விலையில் வர்த்தக நிறுவனங்கள் மேற்கொண்ட ஒப்பந்தங்களில், வாட்ஸ் அப் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் இடையே ஏற்பட்ட ஒப்பந்தம் அமைந்துள்ளது. ரொக்கம் மற்றும் பங்குகள் மாற்றம் என்ற வகையில்,1,900 கோடி டாலர் மதிப்பில், வாட்ஸ் அப் அப்ளிகேஷனை, பேஸ்புக் வாங்கியுள்ளது.
 இந்த வர்த்தகம் குறித்து பிரபல கார்ட்னர் நிறுவனம் கூறுகையில், வாட்ஸ் அப் நிறுவனத்தை பேஸ்புக் எப்படியும் வாங்கிவிடும் என்று எதிர்பார்த்தோம். ஆனால், கொடுக்கப்படும் விலை அதிர்ச்சியைத் தந்துள்ளது என்று கூறியுள்ளது.
பேஸ்புக் தளத்தில், அனைத்து வயதினரும் ஒருவருக்கொருவர் தகவல்களைப் பரிமாறிக் கொள்வதைப் பார்க்கலாம். எனவே தான், இளைஞர்கள் தங்களுக்குள் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள வாட்ஸ் அப் அப்ளிகேஷனைப் பயன்படுத்துகின்றனர். இதனை தொடர்ந்து கண்காணித்து வந்த பேஸ்புக், அந்த வயதினரையும் தன் குடைக்குள் கொண்டு வர இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. ஆனால், வாட்ஸ் அப் வழக்கம் போல தனியாகவே இயங்கும். மூன்று ஆண்டுகளுக்கு முன், பேஸ்புக் இன்ஸ்டாகிராம் செயலியை வாங்கி, தொடர்ந்து தனியாகவே இயக்குவது போல, வாட்ஸ் அப் பிரிவும் இயங்கும். இதில் பணியாற்றும் 55 பேர், பேஸ்புக் நிறுவனத்துடன் இணைந்து கொள்வார்கள்.
சென்ற ஆண்டின் இறுதியில் வாட்ஸ் அப் செயலியைத் தொடர்ந்து ஒரு மாதத்தில் பயன்படுத்துவோர் எண்ணிக்கை 45 கோடியாக இருந்தது. ட்விட்டர் தளத்தில், 24.1 கோடிப் பேர் இந்த வகையில் இருந்தனர். வாட்ஸ் அப் தன் நூறு கோடி வாடிக்கையாளர் என்ற இலக்கினை நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருக்கிறது என பேஸ்புக் நிறுவனர் ஸக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார். அந்த அளவிற்கு அதன் சேவைகள் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
ஸ்மார்ட்போன்களில் செய்திகளைப் பரிமாறிக் கொள்ள உதவும் மிகச் சிறந்த, எளிமையான அப்ளிகேஷனாக வாட்ஸ் அப் இயங்கி வருகிறது. ஒருவருக்கொருவர் அல்லது ஒரு குழுவினராக, செய்திகள், போட்டோக்கள், வீடியோக்கள், குரல் பதிவுகள் என அனைத்தையும், இணையத் தொடர்பில் வாட்ஸ் அப் மூலம் பகிர்ந்து கொள்ளலாம். இந்த தளத்தில் விளம்பரங்கள் எதுவும் இருக்காது என்பது இதன் சிறப்பு.
பல நூறு கோடிக் கணக்கான மக்கள் தங்களுக்குள் உறவு கொண்டு, தகவல்களையும், தங்களுக்குள் படங்களையும், வீடியோக்களையும் பகிர்ந்து கொண்டு நல்லுறவை வளர்த்துக் கொள்ளுவதற்கு உதவுதல் என்பதைத் தன் வாழ்நாள் லட்சியமாகக் கொண்டுள்ள ஸக்கர்பெர்க் அவர்களுக்கு, வாட்ஸ் அப் நிச்சயம் ஒரு கவர்ச்சியைத் தந்திருக்க வேண்டும். அதுவே இப்போது அதனை வாங்கிக் கொள்ள வைத்துள்ளது.
இது குறித்து வாட்ஸ் அப் நிறுவனர்களில் ஒருவரான, ஜேன் கௌம் கூறுகையில், ஐந்தாண்டுகளுக்கு முன்பு, உலகெங்கும் உள்ள அனைவரும், தங்களுக்குள் தகவல் பகிர்ந்து கொள்ள ஒரு செயலியைத் தரவேண்டும் என்ற ஒரே நோக்குடன் தான் வாட்ஸ் அப் தொடங்கினோம். இன்று, அது இன்னும் வேகமாக வளரும் வகையில், பேஸ்புக்குடன் இணைந்துள்ளது என்று தன் வலைமனைப் பக்கத்தில் எழுதி உள்ளார்.
""இவ்வளவு பணம் கொடுத்து இதனை வாங்க என்ன நோக்கம்?'' என்று கேட்டதற்கு, ""நம்முடைய நோக்கம் எல்லாம், இந்த உலகம் எப்போதும் ஒரு திறந்த வெளியாகவும், அதில் வாழும் மக்கள், தாங்கள் விரும்பியவர்களுடன் எந்த நிலையிலும் தொடர்பு கொள்ள இயலும் நிலையிலும் இருக்க வேண்டும் என்பதே. அந்த வகையில், மிகச் சிறப்பாகச் செயல்பட்டு, தொடர்ந்து வளர்ந்து வரும், வாட்ஸ் அப் இன்று பேஸ்புக்கில் இணைந்துள்ளது'' என்று குறிப்பிட்டுள்ளார்.
 நன்றி- தினமலர்

Read more...

WI-FI அடாப்டர் மூலம் மொபைல்போன், கம்ப்யூட்டருக்கு இடையே டேட்டாக்களை Transfer செய்வது எப்படி?.

Thursday, February 20, 2014



WI-FI அடாப்டர் மூலம் மொபைல்போன், கம்ப்யூட்டருக்கு இடையே டேட்டாக்களை Transfer  செய்ய.
முதலில் WI-FI  USB ADAPTER-ஐ   கம்ப்யூட்டர் USB port-ல் Connect செய்யவேண்டும்
தேவையான Software-கள்
கம்ப்யூட்டரில் WI-FI அடாப்டருடன் வரும் Software மற்றும்
 Filezilla Softwares- டவுன்லோட் செய்து  install செய்து கொள்ளுங்கள்
மொபைல்போனில் Software Data Cable  apps- Playstoreலிருந்து டவுன்லோட்  install  செய்து கொள்ளுங்கள்

Step-1.பின்பு மொபைலில் Software Data Cable  apps இன்ஸ்டால் செய்யப்பட்ட விண்டோ Open  செய்து அதில் Sync Pc-ஐ தேர்வு செய்யவும்.அடுத்து Start service-க்கு வலதுபுறம் settings icon க்ளிக் செய்து வரும் setup wifi hotspot தேர்வு செய்து வரும் NetworkSSID-ல் மொபைல் மாடல் பெயரும்,password -ல் ஏதேனும் கொடுத்து Save செய்யவேண்டும்

Start service-press செய்தால் WiFi not connected சிறிய விண்டோ வரும் அதில் Create network தேர்வு செய்து பின்பு Dismiss” option- கொடுத்தால்  கீழ் படத்தில் ftp://192.168.43.1:8888/ என்றவாறு  Connect  செய்யப்பட்டு இருக்கும்.
 
Step-2.உதாரணமாக- நான்  கம்ப்யூட்டரில் DIGISOL  WI-FI அடாப்டர் உபயோகிப்பதால்
கம்ப்யூட்டரில் DIGISOL  WI-FI அடாப்டருடன் வரும் Software இன்ஸ்டால் செய்யப்பட்ட  DIGISOL விண்டோவை Open  செய்து பின்வரும் படத்தில் உள்ளவாறு மொபலையும், கம்ப்யூட்டரையும்  Wi-Fi-ல் Connect செய்யப்படவேண்டும்

Step-3 கம்ப்யூட்டரில் Filezilla இன்ஸ்டால் செய்யப்பட்ட விண்டோவை Open செய்தால்  கீழ் வரும் படத்தில் உள்ளவாறு இருக்கும்.


Host-ftp://192.168.43.1:8888/ என்றும்
Username-ல் நாம்  மொபைல் போனில் நாம் கொடுத்த மொபைல் மாடல் பெயரையும் Usernameஆக கொடுத்து,
Password-ல் நாம் மொபைல் போனில் wifi hotspot setup Password கொடுத்த பாஸ்வேடும் கொடுக்கவேண்டும்.
Port -8888 என கொடுத்து Quick Connect  க்ளிக் செய்தால்
நமது ஆண்ட்ராய்டு மொபைலும் ,கம்ப்யூட்டரும் Connected செய்யப்பட்டு இருக்கும். இப்போது நாம் எளிமையாக mobile to pc ,Laptop
Pc to mobile ,laptop இடையே Datas,மற்றும் Files  Transfer செய்யலாம்.
Datas Transfer செய்ய Filezilla விண்டோவில் Local site ,Remote site என இரண்டு பகுதிகள் இருக்கும்.
Remote site-ல் நமது மொபைல் Storage-ல் உள்ள நமக்கு Transfer செய்ய வேண்டிய Datas,மற்றும் Files உள்ள Folder-Right click செய்து Download  click செய்தால் கம்ப்யூட்டரில் Local site-ல் குறிப்பிட்ட Drive-ல் Save  செய்யப்படும்.
Remote site-க்கு கீழேயுள்ள File name பகுதியில் ஒவ்வொறு file ஆகவும் Right click செய்து  மொபைல் போனிலிருந்து கம்ப்யூட்டருக்கு Download  செய்யலாம்.
இதே முறையில்  Local site-ல் உள்ள Datas,மற்றும் Files-களை
Right click செய்து Upload click  செய்தால் கம்ப்யூட்டரிலிருந்து  மொபைல் போனுக்கு Transfer செய்யலாம்.

இம்முறையில் WI-FI அடாப்டர் மூலம் மொபைல்போன், கம்ப்யூட்டருக்கு இடையே டேட்டாக்களை mbps வேகத்தில் பரிமாரிக்கொள்ளலாம்.
                                                                                                                                                                                                                           




Read more...

மொபைல் போனிலிருந்து இன்னொரு மொபைலுக்கு அல்லது டேப்ளட் பிசிக்கு WIFI வழியே, இண்டெர்நெட் கனெக்ட் செய்வது எப்படி?.

Monday, February 17, 2014

மொபைல் போனிலிருந்து இன்னொரு மொபைலுக்கு அல்லது டேப்ளட் பிசிக்கு  WIFI வழியே,  இண்டெர்நெட் கனெக்ட் செய்ய
முதலில் மொபைல் to மொபைல் (OR)  மொபைல் to டேப்ளட்

இரண்டிலும் WIFI, WIFI HOTSPOT  இருக்கவேண்டும்
1.இண்டெர்நெட்  share   செய்யவேண்டிய மொபைல் or  டேப்ளட்-ல்

 settings சென்று wireless & networks - Tethering & portable hotspot WI-FI hotspot-  ON செய்யவேண்டும்
பின்பு WI-FI hotspot ன் மேல் வைத்து  press  செய்து Basic settings -ல்  Setup WI-FI hotspot  தேர்வு செய்யவேண்டும்
அதில் Network SSID , security ,password     என்றவாறு options  இருக்கும்
Network SSID-ல் மொபைல் மாடலை டைப் செய்யவேண்டும்
அடுத்து “Security options ல்  None ,WPA PSK, WPA2 PSK என்று இருக்கும்.
None தேர்வு செய்தால்இண்டெர்நெட் connect  செய்யவேண்டிய மொபைல் or டேப்ளட்-ல் password கொடுக்கவேண்டியது இல்லை.
WPA PSK, WPA2 PSK தேர்வு செய்தால் ஏதெனும் password கொடுத்து.பின்பு Save  செய்யவேண்டும்.
நாம் இண்டெர்நெட் connect  செய்யவேண்டிய மொபைல் or  டேப்ளட்-ல் password கேட்கும் போது இப் பாஸ்வேடு மிகச்சரியாக கொடுக்கவேண்டும்  அப்போதுதான் WI-FI-connect செய்யப்படும்.
பின்பு மறக்காமல் Data connection -ஐ ON  செய்யவேண்டும்.
2.அடுத்து இண்டெர்நெட்   கனெக்ட் செய்யவேண்டிய mobile OR tablet-ல் WI-FI- ON செய்யவேண்டும்.
பின்பு scan  செய்யப்பட்டு இண்டெர்நெட்  share   செய்யவேண்டிய மொபைல் or  டேப்ளட்-ன் மாடல் பெயர் அதாவது நாம் ஏற்கனவே Network SSID-ல் கொடுத்த மாடல்  பெயர் காட்டப்பட்டு wifi-hotspot கொடுத்த மொபைலில் security-ல் -none கொடுத்து இருந்தால் Automatic-ஆகWI-FI connectஆகும்.
wifi-hotspot கொடுத்த மொபைலில் security -ல் WPA PSK ,WPA2PSK கொடுத்து இருந்தால்  password கேட்கும். பாஸ்வேடு மிகச்சரியாக கொடுத்தால் மட்டுமே WI-FI connectஆகும்.
 Connected  ஆன பின்பு   இனி மொபைல் பிரவுசர் open   செய்து இண்டெர்நெட் Browse செய்யலாம் .

Read more...

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP