பார்த்த,படித்த செய்திகள்

KL bumber

Sunday, May 22, 2022

Read more...

வேதாத்திரி மகரிஷி?

Saturday, August 20, 2016

கேள்வி : 
யார் இந்த அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி?
  பதில் :
    "விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் இணைத்து மனிதகுலம் அமைதியாக வாழ ஆன்மீக அறிவு விளக்கேற்ற இருபதாம் நூற்றாண்டில் அவதரித்த(தன்மாற்றம் பெற்று பிறந்த) விஞ்ஞானகால மெய்ஞானி".
  
   அணு தோன்றிய விதத்தையும், அதன் இயக்கத்தையும்,விளைவுகளையும் பேசும்
இயற்பியல் விஞ்ஞானி.
  மூலகங்களின் இரசாயனத் தன்மைகள் பற்றி
பேசும்போது வேதியல் விஞ்ஞானி.
  அண்டகோடிகளின் அமைப்பு, இயக்கம், விளைவுகள்  பற்றி
பேசும் போது வானியல் வல்லுனர்.
  பிறப்பதற்கும் இறப்பிற்கும்  இடையில் துய்க்கப்படும் உணர்வுகள் பற்றி பேசும் வாழ்வியல் தத்துவஞானி.
   இயற்கை நீதியையும் வாழும் நெறியையும் உணர்த்தி சாதி, மத, இன, தேச வேறுபாட்டு உணர்வைப் போக்க வழிசொல்லும்  சமுகநலவாதி.
  எல்லாவல்ல இறைவனை உணர்ந்து உணர்த்திய மெய்ஞானி.
   சொன்னால் மட்டும் நம்பாதே சுயமாக
சிந்திப்பாய் என கூறும்  சீர்திருத்த சிந்தனைவாதி.
  சுத்தவெளியிலிருந்து அணுக்கள் தோன்றி
பிரபஞ்சமாகவும் ஒரறிவு முதல் ஆறறிவு
வரை உள்ள பரிணாம  வளர்ச்சி யையும்
பேசுவதால் உயிரியல் விஞ்ஞானி.
  உடலுக்கும் உயிருக்கும் பயிற்சியளித்து சித்தத்தை அறிந்த சித்தர்.
  கர்மயோக நெறிகளை வகுத்தளித்த கர்மயோகி. 
   தெய்வநிலை அறியாமல் திகைக்கும் மக்கட்கெல்லாம் தெளிவாக இறையுணர பிரம்ம ஞானாம் தந்த பிரம்ம ஞானி.    
    ஆணவம் அழிய தன்னை அறியும் வித்தையை எளிமைப்படுத்திய தத்துவஞானி.     
     உலக அமைதிக்கு வாழ்க வையகம் என்னும் மந்திரச்சொல்லை உச்சரிக்கச்சொல்லி உலகஅரசு அமைய வழி சொன்ன உலக அமைதித்தொண்டர்.

     தனிமனித, குடும்ப, சமூக உலக அமைதிக்கு ஆன்மீக ரீதிீயாக வழிகாட்டும் மாமனிதர்.
    அருளுக்கு விளக்கம் தந்த அருள்தந்தை.
   
        வாழ்க வையகம்   வாழ்க வளமுடன்
                     வாழ்க வேதாத்திரியம்

Read more...

வேதாத்திரிய ஆன்மீகம்

19Aug-1"வேதாத்திரிய ஆன்மீகம் -கேள்விக்கு பதில் "
கேள்வி :
   மதங்களிலும் யோகாவிலும் கடவுளைத்தான் வணங்குகிறோம்.இரண்டிலும் தர்மநெறிகளும்,ஒழுக்க பழக்கங்களும்தான் போதிக்கப்படுகின்றன! யோகாவை மதம் கடந்த ஆன்மீகம் என்று எதனால் கூறுகிறோம்?
பதில்:
   மதங்களில், மதத்தலைவர்கள் சொல்லிவைத்த கடவுளை சுயமாக சிந்தித்து அறியாமல் நம்பி, புறச்சடங்குகள் மூலம் வணங்குகிறோம். மதங்கள் கூறும் அறநெறிகளை, ஓரளவு அறிந்த அளவிலும் இயன்ற அளவிலும் தான் கடவுளுக்குப் பயந்து கடைப்பிடித்து வாழ முடிகிறது. ஆகையினால்தான் பக்தர்களின் வாழ்வில் இன்பமும் இருக்கிறது, துன்பமும் இருக்கிறது,  கவலையும் இருக்கிறது.
   யோகாவில் உடலுக்கு உடற்பயிற்சியும், உயிருக்கு வித்துக்குழம்பை பதங்கப்படுத்தும் காயகல்பப்பயிற்சியும், மனதுக்கு அகத்தவப் பயிற்சியும் அளித்து, குரு உபதேசிக்கும் கடவுள் தத்துவத்தையும் அறநெறிகளையும் சுயமாக சிந்தித்து, கடவுளை தெளிவாகவும், அறநெறிகளை முழுமையாகவும் அறிந்து கொள்ள முடிகிறது.
    யோகாவில் வேதங்கள் கூறும் உள்ளதை(கடவுளை) உணர்ந்து, நல்லதை(அறத்தை)செய்து, அல்லதை(தீயசெயல்களை)விட்டு, துன்பமும் கவலையும் இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ முடிகிறது.         
       இதனால்தான் யோகாவை  அனைத்து மதங்களுக்கும் பொதுவான, மேலான ஆன்மீகம் என்கிறோம்.
  "அறத்தான் வருவதே இன்பம்" என்கிறார் திருவள்ளுவர்.
  
      மகிழ்ச்சியாகவாழ மனவளக்கலை (Sky) யோகா.
        வாழ்க வளமுடன்

Read more...

ஆன்மீகம்

Aug18-1"ஆன்மீகம் -கேள்விக்கு பதில் "

கேள்வி :
   கடவுள் நம்பிக்கை இல்லாதவர்களும் கடவுளை வணங்காதவர்களும் நலமாக இல்லையா? கடவுளை  நம்பி,  ஏன் வணங்க வேண்டும்?
பதில் :
   கடவுளை அறிவாக (அருளாக) அறிந்து நம்பி வணங்கும் மனித மனதில் அன்பு மலரும்.. அறநெறிவாழ்வும் தொண்டுவாழ்வும் இயல்பாகிவிடும்.துன்பங்களைப்போக்கி இன்பத்தில் நிலைத்து அமைதியாக  வாழலாம்.
         வாழ்க வளமுடன்

Read more...

வேதாத்திரிய ஆன்மீகம்

"வேதாத்திரிய ஆன்மீகம் -கேள்விக்கு பதில் "

கேள்வி :
   இறைநிலையை அடைதல் (Transformation)என்பது என்ன? அந்த நிலையை எப்படி அடைவது?

பதில் :
   இறைநிலையை உணர்ந்து கொண்டவர்களுக்கு இயற்கையின் அமைப்பு, இயக்கம், விளைவுகளும், இயற்கைக்கு இசைவான அறநெறிகளும் (இறைநீதியும்) தெளிவாக விளங்கிவிடும்.இதனை "நிலைத்த, உறுதிப்பட்ட ,தெளிந்த   அறிவுநிலை" என்று மகான்கள் கூறுகிறார்கள்.
         வாழ்க வளமுடன்
   இறைநிலைதான் அனைத்துமாக உள்ளதை உணர்ந்துகொண்ட மனம், நல்லதையே செய்யும். அல்லதை விட்டுவிடும்.  
    தன்னையும் இயற்கையையும் ஒன்றாக அறிந்துகொண்ட அறிவுநிலையில், தான் தனது என்னும் உணர்வு அற்றுப்போய்விடும்.ஆறு தீயகுணங்களும் நற்குணங்களாக  நிலைத்துவிடும். பொருள் புகழ், புலனின்ப ஆசைகளும் அற்றுப்போய்விடும். அறவாழ்வால்,தொண்டு வாழ்வால்  பாவப்பதிவுகள் யாவும் நீங்கி ஆன்மா தூய்மை அடைந்துவிடும்.
       இனியும் பிறவி தொடரவேண்டியதில்லை.
இதுவே இறைநிலையை அடையும் வழி என்று மகான்கள் கூறுகிறார்கள்.

Read more...

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP