வேதாத்திரி மகரிஷி?
Saturday, August 20, 2016
கேள்வி :
யார் இந்த அருள்தந்தை வேதாத்திரி மகரிஷி?
பதில் :
"விஞ்ஞானத்தையும் மெய்ஞானத்தையும் இணைத்து மனிதகுலம் அமைதியாக வாழ ஆன்மீக அறிவு விளக்கேற்ற இருபதாம் நூற்றாண்டில் அவதரித்த(தன்மாற்றம் பெற்று பிறந்த) விஞ்ஞானகால மெய்ஞானி".
அணு தோன்றிய விதத்தையும், அதன் இயக்கத்தையும்,விளைவுகளையும் பேசும்
இயற்பியல் விஞ்ஞானி.
மூலகங்களின் இரசாயனத் தன்மைகள் பற்றி
பேசும்போது வேதியல் விஞ்ஞானி.
அண்டகோடிகளின் அமைப்பு, இயக்கம், விளைவுகள் பற்றி
பேசும் போது வானியல் வல்லுனர்.
பிறப்பதற்கும் இறப்பிற்கும் இடையில் துய்க்கப்படும் உணர்வுகள் பற்றி பேசும் வாழ்வியல் தத்துவஞானி.
இயற்கை நீதியையும் வாழும் நெறியையும் உணர்த்தி சாதி, மத, இன, தேச வேறுபாட்டு உணர்வைப் போக்க வழிசொல்லும் சமுகநலவாதி.
எல்லாவல்ல இறைவனை உணர்ந்து உணர்த்திய மெய்ஞானி.
சொன்னால் மட்டும் நம்பாதே சுயமாக
சிந்திப்பாய் என கூறும் சீர்திருத்த சிந்தனைவாதி.
சுத்தவெளியிலிருந்து அணுக்கள் தோன்றி
பிரபஞ்சமாகவும் ஒரறிவு முதல் ஆறறிவு
வரை உள்ள பரிணாம வளர்ச்சி யையும்
பேசுவதால் உயிரியல் விஞ்ஞானி.
உடலுக்கும் உயிருக்கும் பயிற்சியளித்து சித்தத்தை அறிந்த சித்தர்.
கர்மயோக நெறிகளை வகுத்தளித்த கர்மயோகி.
தெய்வநிலை அறியாமல் திகைக்கும் மக்கட்கெல்லாம் தெளிவாக இறையுணர பிரம்ம ஞானாம் தந்த பிரம்ம ஞானி.
ஆணவம் அழிய தன்னை அறியும் வித்தையை எளிமைப்படுத்திய தத்துவஞானி.
உலக அமைதிக்கு வாழ்க வையகம் என்னும் மந்திரச்சொல்லை உச்சரிக்கச்சொல்லி உலகஅரசு அமைய வழி சொன்ன உலக அமைதித்தொண்டர்.
தனிமனித, குடும்ப, சமூக உலக அமைதிக்கு ஆன்மீக ரீதிீயாக வழிகாட்டும் மாமனிதர்.
அருளுக்கு விளக்கம் தந்த அருள்தந்தை.
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்
வாழ்க வேதாத்திரியம்
0 comments:
Post a Comment