வேதாத்திரிய ஆன்மீகம்
Saturday, August 20, 2016
"வேதாத்திரிய ஆன்மீகம் -கேள்விக்கு பதில் "
கேள்வி :
இறைநிலையை அடைதல் (Transformation)என்பது என்ன? அந்த நிலையை எப்படி அடைவது?
பதில் :
இறைநிலையை உணர்ந்து கொண்டவர்களுக்கு இயற்கையின் அமைப்பு, இயக்கம், விளைவுகளும், இயற்கைக்கு இசைவான அறநெறிகளும் (இறைநீதியும்) தெளிவாக விளங்கிவிடும்.இதனை "நிலைத்த, உறுதிப்பட்ட ,தெளிந்த அறிவுநிலை" என்று மகான்கள் கூறுகிறார்கள்.
வாழ்க வளமுடன்
இறைநிலைதான் அனைத்துமாக உள்ளதை உணர்ந்துகொண்ட மனம், நல்லதையே செய்யும். அல்லதை விட்டுவிடும்.
தன்னையும் இயற்கையையும் ஒன்றாக அறிந்துகொண்ட அறிவுநிலையில், தான் தனது என்னும் உணர்வு அற்றுப்போய்விடும்.ஆறு தீயகுணங்களும் நற்குணங்களாக நிலைத்துவிடும். பொருள் புகழ், புலனின்ப ஆசைகளும் அற்றுப்போய்விடும். அறவாழ்வால்,தொண்டு வாழ்வால் பாவப்பதிவுகள் யாவும் நீங்கி ஆன்மா தூய்மை அடைந்துவிடும்.
இனியும் பிறவி தொடரவேண்டியதில்லை.
இதுவே இறைநிலையை அடையும் வழி என்று மகான்கள் கூறுகிறார்கள்.
0 comments:
Post a Comment