வேதாத்திரிய ஆன்மீகம்
Saturday, August 20, 2016
"வேதாத்திரிய ஆன்மீகம்-கேள்விக்கு பதில்"
கேள்வி :
இறைநிலையை உணர்தல்(Conformation)என்றால் என்ன? எப்படி உணர்வது?
பதில் :
சுத்தவெளிதான் இறைநிலை என்பதை விளக்கஅளவில் தெளிவாக விளங்கிக்கொண்டபின் அதையே அடிக்கடியும், குறிப்பிட்டு நேரம் ஒதுக்கியும் நினைந்து தவம் செய்து வரவேண்டும்.
சீவகாந்த ஆற்றலுக்குத் திணிவூட்டும் பயிற்சிகளை முறையாக செய்து, எண்ணம் ஆராய்தல், ஆசை சீரமைத்தல்,சினம் தவிர்த்தல், கவலை ஒழித்தல், நான்யார் என்று சிந்தித்தல் ஆகிய அகத்தாய்வு பயிற்சிகளையும் செய்து வரும்போது ஒரு நொடிப்பொழுதில் கும்மிருட்டும் விண்துகளும் அகக்காட்சியாக தெரிந்துவிடும். மனம் சுத்தவெளியோடு கலந்து சமநிலையை அடைந்திருப்பதை அனுபவமாக உணரலாம். அப்பொழுது நான்யார்? என்னும் கேள்விக்கு அனுபவமான விடை கிடைத்துவிடும்.
ஆசான்மூலம் பெற்ற இயற்கைத்தத்துவ அறிவும், அறநெறி அறிவும் சிந்தனைக்கு உறுதிப்பட்டுவிடும்.அப்பொழுதிலிருந்து மனதில் எழும் கேள்விகளுக்கெல்லாம் உண்மையான பதில் கிடைத்துக்கொண்டே இருக்கும்.
இதைத்தான் உள்ளுணர்வுநிலை(Intuition) அன்று ஆன்மீகத்தில் கூறப்படுகிறது.
இறையுணர்வு பெற்றவர்களிடம் இரண்டொழுக்கப் பண்பாடும் இயல்பாக மலர்ந்திருக்கும்.
வாழ்க வளமுடன்
0 comments:
Post a Comment