nokia x
Wednesday, April 02, 2014
சென்ற மாதம் பார்சிலோனாவில் நடைபெற்ற அகில உலக மொபைல் போன் கருத்தரங்கு மற்றும் கண்காட்சியில், நோக்கியாவின் புதிய ஆண்ட்ராய்ட் மொபைல் போன் பலத்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியது. மலேசியா, இந்தியா மற்றும் பிலிப்பைன்ஸ் நாடுகளில் விற்பனைக்கு அறிமுகமானது. பின்னர் இது குறித்த அறிவிப்பு சீனாவில் வெளியானது. இதற்கு அங்கு பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது. விற்பனைக்கு அறிமுகமாகும் முன்பாகவே, பத்து லட்சம் போன் கேட்டு மக்கள் முன்பதிவு செய்துள்ளனர்.
தன் மொபைல் போன் விற்பனையில், 2011 ஆண்டு முதல் பலத்த சரிவை நோக்கியா சந்தித்து வந்தது. தற்போதுதான், அதன் பின்னர் முதல் முதலாக, தன் போன்களுக்கு அமோக வரவேற்பினையும் விற்பனையையும் பெற்றுள்ளது. கூகுள் சேவை கிடைக்காத சீனாவில், நோக்கியா தற்போது பிரபலமாகி வருகிறது. நோக்கியா எக்ஸ் மொபைல் போனில் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன்கள் அனைத்தையும் இயக்கலாம். ஆனால், கூகுள் சேவையுடன் இணைந்த அப்ளிகேஷன்கள் எதனையும் சீனாவில் இயக்க முடியாது. அவற்றிற்கு இணையான அப்ளி கேஷன்களை நோக்கியா ஸ்டோரில் இருந்து தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம். சீனாவில் இது தொடக்க விலை போனாக இருப்பது குறிப்பிடத்தக்கது
0 comments:
Post a Comment