கம்ப்யூட்டர்பயன்பாட்டிற்கு தனியே யு.பி.எஸ். வாங்கிப் பயன்படுத்த வேண்டுமா
Friday, April 04, 2014
மின்சாரம் போனால், அதே பவரைத் தர இன்வர்டர் பல ஆயிரக்கணக்கில் செலவு செய்து அமைத்திருக்கையில், மீண்டும் ஏன் கம்ப்யூட்டருக்கு எனத் தனியே ஒன்று வாங்க வேண்டும்?
. யு.பி.எஸ். ஒன்றில் இன்வர்டர், பேட்டரி மற்றும் பேட்டரி சார்ஜரும் உண்டு. ஒரு சில யு.பி.எஸ். சாதனங்கள், பேட்டரிகளை வெளியே வைத்தும் பயன்படுத்துகின்றன. ஆனால், யு.பி.எஸ். சாதனங்களைக் கம்ப்யூட்டருடன் இணைக்கையில், அவை மின்சக்தியை இழப்பதற்கு முன், கம்ப்யூட்டருக்குச் செய்தி கொடுத்து காட்டப்படும். இன்வர்டரில் அந்த வசதி இருக்காது. இன்வர்டரை, யு.பி.எஸ். ஆகப் பயன்படுத்துவதாக இருந்தால், சில இன்வர்டர்களில், அதன் கண்ட்ரோல் பெட்டியில், யு.பி.எஸ். ஆகப் பயன்படுத்த ஒரு ஸ்விட்ச் தரப்பட்டிருக்கும். அதனை இயக்க வேண்டும். இல்லை எனில், மின்சாரம் நின்று, இன்வர்டர் தன் வேலையைத் தொடங்குகையில், கம்ப்யூட்டர் ரீஸ்டார்ட் ஆகும் வாய்ப்பு ஏற்படும்
0 comments:
Post a Comment