யு.ஆர்.எல். என்பதன் விரிவாக்கமும், இது எப்படி இணைய தளத்தைக் குறிக்கிறது
Thursday, April 03, 2014
URL: Uniform Resource Locator என்பதுதான் அதன் விரிவாக்கம். ஒவ்வொரு இணைய தளப் பக்கமும் அல்லது பக்கங்களும், ஒரு சர்வர் கம்ப்யூட்டர் ஒன்றில் அமைக்கப்பட்டு நமக்குத் தரப்படுகிறது. இது இணையத்தில் இணைக்கப்பட்டுள்ள கம்ப்யூட்டராக எப்போதும் இயங்கும். அந்த சர்வரின் பெயர், தன்மையைக் காட்டுவதே அதன் யு.ஆர்.எல்.
இணைய தளம் என்பது ஒரு வீடு என்றால் அதன் அஞ்சல் முகவரி தான் யு.ஆர்.எல். யு.ஆர்.எல். என்பது நீங்கள் குறிப்பிட்டிருப்பது போல, எழுத்துக்களும், தேவைப்பட்டால் எண்களும் இணைந்து, குறிப்பிட்ட பார்மட்டில் அமைக்கப்பட்ட நீள் கோவையாகும்.
இதனை வெப் பிரவுசர்கள், இமெயில் கிளையண்ட் புரோகிராம்கள் மற்றும் பிற சாப்ட்வேர் புரோகிராம்கள் புரிந்து கொண்டு, அந்த முகவரிக்கான கம்ப்யூட்டரை அடைந்து, சார்ந்த இணையப் பக்கத்தினைப் பெற்று நமக்குத் தருகின்றன. யு.ஆர்.எல். ஒன்றில் மூன்று பகுதிகள் இருக்கும். அவை 1. network protocol, (எ.கா. http://, ftp://, and mailto://) 2. host name or address (எ.கா. www.dinamalar.com) மற்றும் 3. file or resource location (எ.கா. election.dinamalar.com/ detail.php ?id=1678) ஆகும்
0 comments:
Post a Comment