பார்த்த,படித்த செய்திகள்

ஓஷோ

Thursday, April 24, 2014

1956 ல் ஓஷோ தத்துவயியலில் முதல் வகுப்பு சிறப்பு நிலை தேர்ச்சி பெற்று, சாகர் பல்கலைகழகத்திடமிருந்து முதுகலை பட்டம் பெறுகிறார். அவர் தனது பட்ட படிப்பில் அகில இந்திய அளவில் தங்கப்பதக்கம் பெற்ற மாணவனாவார்.

1957 ல் ரெய்ப்பூரில் உள்ள சமஸ்கிருத கல்லூரியில் ஓஷோ பேராசிரியராக நியமனம் பெறுகிறார். 1958 ல் ஜபல்பூரில் உள்ள பல்கலைகழகத்தில் தத்துவ பேராசிரியராக நியமனம் பெற்ற ஓஷோ 1966 வரை அங்கேயே கல்வி கற்பிக்கிறார்.

1966 ல் ஒன்பது வருட பேராசிரியர் வேலையை விடுத்து, மனித குலத்தின் விழிப்புணர்வை உயர்த்துவதற்காக தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்கிறார். 1970 ஏப்ரல் மாதம் 14ந் தேதி அவர் தனது ஒப்புயர்வற்ற தியான பயிற்சியான டைனமிக் தியானத்தை அறிமுகம் செய்கிறார்

Read more...

உமா என்ற ஒலியுன் கூடிய சிவநாமங்கள்

ஓம் என்னும் பிரணவம் “அகரம், உகரம், மகரம்’ என்ற மூன்றெழுத்துக்களால் ஆனது. இந்த அ, உ, ம என்ற எழுத்துக்களின் சேர்க்கையே “ஓம்’ என்பதாகும். இதில் “அ’ என்பது சிவனையும், “உ’ என்பது சக்தியையும், “ம’ என்பது அவர்களுடைய அருளையும் குறிக்கின்றது. இவற்றின் முறையை மாற்றி உ, ம, அ என்று ஒலிப்பதால், “உமா’ என்ற சொல் உருவாகிறது.

மந்திரங்களின் ஆதாரமாகவும், அதன் பொருளாகவும், அதன் பயனாகவும் இருப்பவள் தேவியே. எனவே இதனைச் “சக்தி பிரணவம்’ என்று அழைப்பர்.

அனைத்துமாய் விளங்கும் அம்பிகையின் தலைவனாக இருப்பதால் “உமாபதி’ என்று சிவபெருமானுக்குப் பெயர். சிவநாமங்களில் உமா என்ற ஒலியுடன் கூடிய சிவநாமங்களே உயர்ந்ததென்று கூறப்பட்டுள்ளது. உமா மகேஸ்வரன், உமேசன், உமா சகிதர் என்றெல்லாம் சிவனை அழைப்பர். “உமா மகேஸ்வர ஸ்வாமி’ என்பதே பேச்சு வழக்கில் “உம்மாச்சி’ என்றாயிற்று என்பார் காஞ்சி மஹாசுவாமிகள்

Read more...

ஓஷோ - இளமை பருவம்

இளமை பருவம்'''==

ஓஷோ 1931 டிசம்பர் 11 ல் மத்திய பிரதேசத்தில் உள்ள குச்வாடா என்ற சிற்றூரில் பிறந்தார். குச்வாடா ஓஷோவுடைய தாய் வழி தாத்தா, பாட்டி வாழ்ந்து வந்த ஊர். முதல் ஏழு வருடங்கள் அங்கேதான் வளர்ந்தார். ஓஷோவுடைய பெற்றோர்கள் கடர்வாடாவில் வசித்து வந்தார்கள். தாத்தா இறந்த பிறகு பாட்டியுடன் கடர்வாடா வந்து விட்டார்.

ஓஷோவுடைய இயர்பெயர் ரஜ்னீஷ் சந்திர மோகன். சிறு வயதிலிருந்தே தியானத்தில் ஈடுபட்ட ஓஷோ தன்னுடைய இருபத்து ஒன்றாவது வயதில் அதாவது 1953 மார்ச் 21ல் ஞானம் அடைந்தார். கிழக்கில் ஞானமடைதல் என்பது முழுமையான தன்னுணர்வு அல்லது விழிப்புணர்வு நிலை என்பதை குறிப்பிடுவதாகும் கெளதமபுத்தர், கபீர், இரமணர் மற்றும் பலர் இப்படி ஞானம் அடைந்தவர்களாவர்

Read more...

முன்னேற்றம் தரும் மூன்று

* பிறருக்காகச் செய்யும் சிறு முயற்சியிலும் கூட உள்ளத்தில் அளப்பரிய சக்தி உண்டாகி விடும்.
* தற்பெருமையை வளர்த்துக் கொள்ள வேண்டாம். போட்டி, பொறாமை எண்ணம் சிறிதும் இருப்பது கூடாது.
* ஒற்றுமையுடன் சேர்ந்து வாழ்வதே வலிமை. உலகிற்கு நன்மை செய்வதே நமது நோக்கம்.
* அமைதி, ஆர்வம், ஒழுக்கம் இந்த மூன்று அம்சங்களும் பணியில் இருப்பது அவசியம்.
* நம்பிக்கை, நேர்மை, பக்தி இந்த மூன்றும் இருந்து விட்டால் முன்னேற்றம் வந்து கொண்டேயிருக்கும்.
- விவேகானந்தர்

Read more...

உணவுப் பொருட்களை எத்தனை நாட்கள் பிரிட்ஜில் வைக்கலா

இன்றைய காலகட்டத்தில் கணவன், மனைவி இருவரும் வேலைக்கு செல்பவர்களாகவே உள்ளனர். இதனால், அன்றாடம் வீட்டிற்கு தேவையான காய்கறிகள், பழங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் ஆகியவற்றை தினசரி கடைக்கு சென்று வாங்க முடியாத நிலை நிலவுகிறது.

வாரத்திற்கு ஒரு முறை, கடைக்கு சென்று உணவுப் பொருட்களை வாங்கி, அவற்றை பிரிட்ஜில் சேமித்து வைத்து விடுகின்றனர். எனினும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் உணவுப் பொருட்கள், பிரஷ்ஷாக இருக்கும் என்பது, நம்மில் பலருக்கு தெரியாது.

பிரிட்ஜில் 34 டிகிரி பாரன்ஹீட் முதல் 40 டிகிரி பாரன்ஹீட்டுக்கு இடைப்பட்ட அளவில், வெப்பநிலை இருக்குமாறு, பராமரிக்க வேண்டியது, அவசியம். இதனால், உணவுப் பொருட்கள், நீண்ட காலம் பிரஷ்ஷாக பயன்படுத்தப்படும் வகையில் இருக்கும். ஒவ்வொரு உணவுப் பொருளும், பிரிட்ஜில் எவ்வளவு நாட்கள் பிரஷ்ஷாக இருக்கும் என்பதை பார்க்கலாம்..

* திராட்சை, பேரிக்காய், பிளம்ஸ் 3-5 நாட்கள் வரையிலும், ஆப்பிள்கள் ஒரு மாதம் வரை, சிட்ரஸ் பழங்கள் 2 வாரங்கள் வரை,  அன்னாசி (முழுசாக) 1 வாரம் வரை, (வெட்டிய துண்டுகள்) 2-3 நாட்கள் வரையிலும் கெட்டு போகாமல் இருக்கும்.

* புரோக்கோலி, காய்ந்த பட்டாணி 3-5 நாட்கள் வரை, முட்டைகோஸ், கேரட், முள்ளங்கி, ஓம இலை 1-2 வாரங்கள் வரை, வெள்ளரிக்காய் ஒரு வாரம் வரை, தக்காளி 1-2 நாட்கள் வரை, காலிபிளவர், கத்தரிக்காய் 1 வாரம் வரை, காளான் 1-2 நாட்கள் வரையிலும் கெட்டு போகாமல் இருக்கும்.

* வறுத்த இறைச்சி மற்றும் கிரேவி 2-3 நாட்கள் வரை, சமைத்த மீன் 3-4 நாட்கள் வரை, பிரஷ் மீன் 1-2 நாட்கள் வரை, ஓட்டுடன் கூடிய நண்டு 2 நாட்கள் வரை, பிரஷ்ஷான இறால்(சமைக்காதது) ஒரு நாள் வரை, உலர்ந்த மீன் அல்லது மீன் ஊறுகாய் ஒரு வாரம் வரை, பிரஷ்ஷான கோழி இறைச்சி துண்டுகள் 1-2 நாட்கள் வரை, சமைத்த கோழி இறைச்சி 2-3 நாட்கள் வரையிலும் கெட்டு போகாமல் இருக்கும். ஆனாலும் இறைச்சி வகைகளை தினமும் பயன்படுத்துவது நல்லது.

* பால் அல்லது ஆடை நீக்கப்பட்ட பால் ஒரு வாரம் வரை, பதப்படுத்தப்பட்ட பால், சுவீட் கிரீம், சுவையூட்டப்பட்ட பால், அதன் அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள விற்பனை தேதியில் இருந்து, 10-14 நாட்கள் வரை, மோர் 2 வாரங்கள் வரை, தயிர் 7-10 நாட்கள் வரையிலும் பயன்படுத்தலாம்.

* காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்பட உணவுப் பொருட்களை குறிப்பிட்ட காலத்தில், சரியான முறையில் பாதுகாத்து வைப்பதன் மூலம் அவை விரைவில் கெட்டுப் போகாமல் பாதுகாக்கலாம்

Read more...

தியானம் பழகு

Monday, April 14, 2014



'தியானம்  பழகு
ருவர் ஓஷோவிடம் கேட்டார். ''என்னுடைய நேரத்தைச் செலவு செய்து தியானம் செய்வதால் எனக்கு என்ன லாபம்?'' 
''தியானம் அமைதி ஏற்படுவதற்கானச் சூழலை உருவாக்குகிறது. அமைதி ஏற்பட்டுவிட்டால், உங்கள் வாழ்வில் மகிழ்ச்சி ஏற்பட்டுவிடும். சோகமாக இருக்க மாட்டீர்கள். உலகைத் தவிர்க்க நினைக்க மாட்டீர்கள். தியானத்தின் மூலம் சூழல் என்ற நிலத்தைத் தயார் செய்கிறோம். சூழலை உருவாக்கிவிட்டால், உங்கள் கைவசம் இருக்கும் விதை துளிர்விட்டுவிடும். நீங்கள் வளர ஆரம்பிப்பீர்கள்'' என்றார் ஓஷோ.

இதுதான் தியானம். மனமும் உடலும் ஆரோக்கியமாக இருப்பதற்கான சாவியைத் தியானம் உங்கள் கையில் தருகிறது.
சரி... தியானத்தால் அறிவியல்பூர்வமாக நன்மைகள் இருக்கின்றனவா? அதற்கு என்ன ஆதாரம்? எத்தனை பேர் சாட்சி?
ஹார்வர்டு பல்கலைக்கழகத்தின் ஓர் அங்கமான 'மைண்ட் - பாடி மெடிக்கல் இன்ஸ்டிடியூட்என்ற கல்வி நிறுவனத்தைச் சேர்ந்த டாக்டர் ஹெர்பெர்ட் பென்சன் இதுபற்றி ஒரு ஆய்வு செய்திருக்கிறார். ஒருவரை தியானம் செய்யவைத்து 'உடலுக்குள் என்ன நடக்கிறது?’ என்று நடத்தப்பட்ட ஈஈஜி  (Electro Encephalography (EEG) பரிசோதனையை ஹெர்பெர்ட் பென்சன் தலைமையில் டாக்டர்கள் குழு ஒன்று கண்காணித்தது.
ஆய்வின் முடிவில், 'தியானம் செய்யும்போது பல வேதியியல் மாற்றங்கள் நடந்து உடலைத் தளர்வாக்குகின்றன. இந்த ரிலாக்ஸேஷன் மூலம் இதயத் துடிப்பு, சுவாசம், ரத்த அழுத்தம், மூளையின் வேதியியல் செயல்கள் எல்லாமே சீராகின்றனஎன்ற முடிவுக்கு வந்து அறிக்கை சமர்ப்பித்து இருக்கிறார். உலகம் முழுவதும் இதுபோல் இன்னும் பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு ஆய்வுகள் நடந்துவருகின்றன.

கொழுப்பு மற்றும் சர்க்கரை அளவுகள் குறைகின்றன, நோய் எதிர்ப்புச் சக்தி அதிகரிக்கிறது, போதைப் பழக்கங்களை மறக்க வைக்கிறது, வயதாவதைத் தாமதப்படுத்தி இளமையோடு இருக்க வைக்கிறது, சுய மரியாதையை அதிகமாக்குகிறது, இயல்பான தூக்கம் வர உதவுகிறது, விழிப்பு உணர்வு அதிகமாகிறது என்று ஒவ்வொரு மருத்துவக் குழுவும் தனித்தனியாகத் தங்களது ஆராய்ச்சி அறிக்கையை சமர்ப்பித்து இருக்கின்றன.
''நோயைக் குணப்படுத்துவதைவிடவும், நோய்பற்றிய புரிதலை ஏற்படுத்துவதுதான் நல்ல மருத்துவம். நோய் ஏன் வருகிறது, மீண்டும் வராமல் தடுப்பது எப்படி என்று சிகிச்சை அளிக்கும் மருத்துவம் தியானம்'' என்கிறார் அவசர சிகிச்சை நிபுணரான தவப்பழனி.
''டென்ஷன், மன அழுத்தம் இரண்டும்தான் எல்லா வியாதிகளையும் நமக்கு வரவழைக்கின்றன. தியானம் செய்யும்போது, மனம், உடல் இரண்டும் அமைதியாகிவிடுகின்றன. சாதாரணமாக, ஏதாவது ஒரு பிரச்னை என்றால், 10 முதல் 1 வரை பின்னோக்கி மெதுவாக எண்ணுங்கள் என்று சொல்வதைக் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இதில் உள்ள சூட்சுமம்... பின்னோக்கி எண்ணும்போது சுவாசம் சீராகி, அந்தப் பதற்றத்தைக் குறைத்துவிடும். தியானமும் இப்படித்தான் நமக்குள் வேலை செய்கிறது. இது தவிர, தேவை இல்லாத பதற்றம், கோபம் எல்லாவற்றையும் சாந்தப்படுத்திவிட்டால், ரத்த அழுத்தம், இதய நோய்கள் என்று எதுவுமே வராது. தியானத்தின் மூலம் போபியாக்கள் என்று சொல்லப்படும் தேவையற்ற பயங்களைப் போக்க முடியும், அலர்ஜியைக்கூட தெரபி மூலம் சரி பண்ணலாம். தியானத்தால் நிச்சயமாக மருத்துவப் பலன்கள் உண்டு'' என்கிறார் தவப்பழனி.

சரி.. தியானம் எப்படிச் செய்வது? யோகா ஆசிரியை மேனகா தேசிகாச்சார் இதுபற்றி விளக்குகிறார்.
''தியானம் என்பது ஒரு தொடர்ச்சியான நிகழ்வு. அதை உடனே செய்துவிட முடியாது. முதலில் ஓர் இடத்தில் அமைதியாக உட்கார்ந்து பழக வேண்டும். பத்மாசனத்தில் அமர்ந்துதான் தியானம் செய்ய வேண்டும். அதற்கு உடலும் மனதும் உடன்பட வேண்டும். தியானத்துக்கு ஒருவரைத் தயார்ப்படுத்தும் விதமாகத்தான் முதலில் யோகாசனம், இரண்டாவது கட்டமாக, பிராணாயாமம் என்கிற மூச்சுப்பயிற்சி, நிறைவுக் கட்டமாகத்தான் தியானம் செய்ய முடியும். இதனால்தான், தியானம் என்பது அஷ்டாங்க யோகத்தில் கடைசியில் வருகிறது.
அதுவும் தியானம் செய்யும்போது, உடலைப் பற்றியும் மனதைப் பற்றியும் வேறு எந்த நினைவுகளும் வரக் கூடாது. ஆனால், ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு தியானம் செய்யும்போது எதைப் பற்றியாவது சிந்தனை வந்தால்... நினைவுகளை விரட்ட வேண்டிய அவசியம் இல்லை. அந்த நினைவுகளை நாம் விலகி நின்று கவனிக்க வேண்டும். தியானம் செய்ய ஆசனங்களும் மூச்சுப் பயிற்சியும் உதவுகின்றன. ஆசனங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகின்றன. நாம் மூச்சுவிடுவதும் சீராக இல்லாமல் இருக்கிறது, அந்தக் குறைபாட்டைப் போக்கத்தான் மூச்சுப் பயிற்சி.
சந்நியாசிகள் 24 மணி நேரமும் சமாதி நிலையிலேயே இருப்பார்கள். சம்சார வாழ்க்கை வாழும் நம்மால் அப்படிச் செய்ய முடியாது. அதனால், ஒரு நாளைக்குக் குறைந்தபட்சம் 10 நிமிடங்களாவது தியானம் செய்தால், மருத்துவரீதியாக நல்ல பலன் கிடைக்கும். தியானம் செய்ய விரும்புபவர்கள், முறையாக ஆசிரியர் ஒருவரிடம் கற்றுக்கொண்டு செய்வதே சரியானது'' என்கிறார்.

நரம்பியல் சிகிச்சை நிபுணர் ஏ.வி.ஸ்ரீனிவாசன் இன்னும் கொஞ்சம் நுட்பமாக இதை விளக்குகிறார்... ''இதயத்தின் துடிப்புகளை ஈ.சி.ஜி. மூலம் அளப்பதுபோல், மூளையின் செயல்பாட்டை ஈ.ஈ.ஜி. மூலம் 'சைக்கிள்ஸ் பெர் செகண்ட்ஸ்’ (Cycles per seconds)  என்று அளப்பார்கள். தியானத்தின்போது மூளையில் இருக்கும் ஆல்ஃபா அலைகள் தீட்டா அலைகளாக (பீட்டா அலைகள் அல்ல) மாறுகின்றன. ஒரு வினாடிக்கு 9 முதல் 13 சைக்கிள்ஸ் என்ற அளவில் இருக்கும் ஆல்ஃபா அலைகள், 4 முதல் 8 என்று தீட்டா அலைகளாகக் குறையும். இன்னும் ஆழ்ந்த தியானத்துக்குச் செல்லும்போது, படிப்படியாக 1.5 என்கிற டெல்டா நிலைக்கு வரும். இதற்கு 'எப்ஸிலான் நிலைஎன்று பெயர். நம் உடலில் இருக்கும் லட்சக்கணக்கான நரம்புகளின் சங்கமம் மூளை என்பதால், இந்த 'எப்ஸிலான் நிலையில் நரம்பு மண்டலம் முழுவதும் நம் கட்டுப்பாட்டில் வந்துவிடும்.
தியானம் செய்வதால் ரத்த அழுத்தம், உடல் வலி மற்றும் சர்க்கரை நோய், இதய நோய்கள் போன்றவற்றை முதலிலேயே வராமல், தடுக்க முடியும். வந்துவிட்டாலும் நோய்களின் தீவிரத்தைக் குறைக்க முடியும் என்று மருத்துவர்களும் ஆய்வாளர்களும் கூறுகிறார்கள்'' என்கிறார்.
முக்கியமான ஒரு விஷயம், கடவுள் நம்பிக்கை இருப்பவர்கள்தான் தியானம் செய்ய வேண்டும் என்பது இல்லை. முன்னாள் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு தியானம் கற்றுக்கொடுக்கச் சென்றார் டி.கே.வி.தேசிகாச்சார். ''நாராயண நமஹ என்று தியானியுங்கள்'' என்று அவர் சொல்ல, ''ஞாயிறு போற்றுதும் - என்று தியானிக்கலாமா?'' என்று கேட்டிருக்கிறார் முன்னாள் முதல்வர். 'இரண்டும் ஒன்றுதான்என்று சம்மதம் சொல்லி இருக்கிறார் தேசிகாச்சார்.
எனவே, உங்களுக்குப் பிடித்த நல்ல விஷயத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதுதான் ஒரேயரு இனிய விதி!
ஓகே..
இப்போதே ஒரு குட்டி தியானத்தில் இருந்து ஆரம்பிக்கலாமா? மெதுவாகக் கண்களை மூடுங்கள்...
10... 9... 8... 7...

Read more...

சகலகலா டாக்டர் நெல்லிக்காய்!



சகலகலா டாக்டர் நெல்லிக்காய்!
 

தியமானால் அவ்வைக்குக் கொடுக்கப்பட்டதுஎன்ற சங்க காலக் கதைகள் முதல், 'நெல்லிக்காய் கலந்த கூந்தல் வளர்ச்சித் தைலம்என சமீபத்திய விளம்பரங்கள் வரை நெல்லிக்காயின் புகழுக்குக் குறைவே இல்லை. 
''தினம் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், டாக்டரைத் தேடிப்போக வேண்டியது இல்லை என்று சொல்வார்கள். இன்றைய விலைவாசியில் டாக்டரைத் தேடிப் போவதும் ஆப்பிளைத் தேடிப் போவதும் ஒன்றுதான். ஆப்பிளுக்கு மாற்றாக தினம் ஒரு நெல்லிக் கனி சாப்பிட்டால் போதும். ஆப்பிளுக்கு நிகரான சத்துக்களைக்கொண்டது நெல்லிக்காய்; ஒரு நெல்லிக்காய் மூன்று ஆப்பிள்களுக்குச் சமம்'' என்கிறார் சென்னை அரசு அண்ணா மருத்துவமனையின் சித்த மருத்துவரான கே.வீரபாபு.
''நெல்லிக்காயில் ஸ்பெஷல் என்று ஒரு விஷயத்தை மட்டும் சொல்ல முடியாது. நெல்லிக்காயே ஸ்பெஷல்தான்...'' என்கிறார் டயட்டீஷியன் ஹேமமாலினி. இருவரும் நம்மிடம் பகிர்ந்துகொண்ட தகவல்களில் இருந்து...
1.'காயம் என்ற நம் உடலைக் கற்பகம்போல் அழியாமல் வைத்திருக்கும் ஆற்றல்கொண்டது நெல்லிக்காய்என்று சித்தர்களே சொல்லி இருக்கிறார்கள். நெல்லிக்காயில் கால்சியம், வைட்டமின் சி, புரதம் போன்ற சத்துக்கள் அதிகமாக இருப்பதுபோலவே டேனின், ஃப்ளேவனாய்ட்ஸ், எலாஜிக் ஆசிட் போன்ற துணை சத்துப் பொருட்களும் அதிக அளவில் இருக்கின்றன.
2.சித்தா, ஆயுர்வேதம் போன்ற இயற்கை மருத்துவங்களில் நெல்லிக்காயைத் தவறாமல் பயன்படுத்துகிறார்கள். வயிறு சம்பந்தப்பட்ட நோய்களைக் கட்டுப்படுத்தும் 'திரிபலாசூரணத் தயாரிப்பில் நெல்லிக்காய்க்கு முக்கியப் பங்கு உண்டு.
3.கொதிக்கும் இந்த வெயில் காலத்துக்கு, நெல்லிக்காய் ஒரு வரப்பிரசாதம் என்று சொல்லலாம். உடலுக்கும் கண்களுக்கும் குளிர்ச்சியைத் தரும் குணமுடையது என்பதால் ஜலதோஷத்தை உண்டாக்கிவிடும் என்று சிலர் தவறாக நினைக்கிறார்கள். உண்மையில் ஜலதோஷம் வராமல் நெல்லிக்காய் தடுக்கும். இது தவிர வைரஸ் மூலம் பரவும் நோய்களையும் கட்டுப்படுத்தும்.
4.திராட்சை, ஆரஞ்சு, எலுமிச்சை போன்ற பழங்களில் வைட்டமின் சி இருக்கிறது. ஆனால், வேறு எந்தப் பழங்களிலும் இல்லாத அளவுக்கு நெல்லிக்காயில் வைட்டமின் சி மிக அதிகம். ஒரு சின்ன நெல்லிக்காயில் 600 மில்லி கிராம் வைட்டமின் சி இருக்கிறது. நம் நாட்டில் இரும்புச் சத்துக் குறைபாடு உடையவர்கள் அதிகமாக இருக்கிறார்கள். வைட்டமின் சி அதிகமாக நெல்லிக்காயில் இருப்பதால் காய்கறியில் இருக்கும் இரும்புச் சத்தை ஈர்த்து உடலுக்குக் கொடுக்கும்.
5.தயிர் சாதம், சாம்பார் சாதம் போன்ற சாதங்கள் சாப்பிடும்போது வெறும் நெல்லிக்காயைத் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம். இதன் மூலம் அதில் இருக்கும் துவர்ப்புத் தெரியாது. நெல்லிக்காயைப் பெரும்பாலும் ஊறுகாயாகப் பயன்படுத்துகிறோம். ஆனால், பச்சைக் காயாகச் சாப்பிடும்போதுதான் நெல்லிக்காயின் சத்துகள் முழுமையாகக் கிடைக்கிறது.  ஒரு நாளைக்கு இரண்டு அல்லது மூன்று நெல்லிக்காயாவது சாப்பிடலாம்.
6.நெல்லிக்காயில் கால்சியம் சத்து நிறைய இருப்பதால், எலும்புகள் உறுதியாகும். ரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவைக்கும். ரத்த சோகைக்கும் நெல்லிக்காய் நல்ல மருந்து. நெல்லிக்காய் தலைமுடியைக் கருமையாக செழிப்பாக வளரவைக்கும் என்பதால்தான் கூந்தல் வளர்ச்சிக்கு உதவும் எண்ணெய் வகைகளிலும் தலைச் சாயத் தயாரிப்பிலும் பயன்படுத்தப்படுகிறது.
7.தினமும் ஒரு நெல்லிக்காய் உண்டுவந்தால், சர்க்கரைக் குறைபாட்டைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதிக உடல் பருமனால் கஷ்டப்படுகிறவர்கள் காலையில் வெறும் வயிற்றில் நெல்லிக்காய்ச் சாறுடன் இஞ்சிச் சாறு அருந்திவந்தால் தேவையற்ற எடை குறைந்து சிக்கென்ற தோற்றத்தைப் பெறலாம்.
8.நெல்லிக்காயுடன் புதினா, இஞ்சி, எலுமிச்சை சேர்த்து பழரசமாக்கி அருந்தினால் வயிற்றுக் கோளாறுகள் நீங்கும். காயங்களைக் குணப்படுத்தவும் புற்றுநோய் எதிர்ப்பு வல்லமையும் நெல்லிக்காய்க்கு உண்டு.
9.நெல்லிக்காயைத் துவையல் செய்தும் சாப்பிடலாம். சீரகம், பூண்டு, சின்ன வெங்காயம் போன்றவற்றைச் சேர்த்து நெல்லிக்காய் உடன் துவையல் செய்து சாப்பிட்டால், ரத்தத்தில் கொழுப்பின் அளவு சீராகும். கொழுப்பைக் கட்டுப்படுத்துவதால் இதய சம்பந்தமான நோய்கள் வராமல் தடுப்பதிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. கண்களுக்கு மிகவும் நல்லது.
10கீழாநெல்லி, கரிசலாங்கண்ணியுடன் நெல்லிக்காய் சேர்த்து செய்யும் மருந்து மஞ்சள் காமாலையைக் குணப்படுத்தும் வல்லமை கொண்டது.
  என்ன ஒரு கோப்பை நெல்லிக்காய் ஜூஸ் சாப்பிடலாமா?
நன்றி-டாக்டர் விகடன்

Read more...

பிராணாயாமம்-2



பிராணாயாமங்களிலும் பல வகை  
சீத்காரி - உடல் வெப்பத்தைத் தணிக்கும்.
சீதளி - உடல் குளிர்ச்சியை உணரச் செய்யும்.
உஜ்ஜாயி - மார்புப் பகுதி நலம் அடையும்.
பிரமரீ - வண்டு போல ரீங்காரம் செய்வது.
நாடி சுத்தீ - நாடிகளைத் தூய்மையாக்குதல்.
பிளவனீ - வயிற்றில் பிராணனை நிரப்புதல்.
சுரியபேதா - பிங்கலை வழி பூரகம் செய்தல்.
  மேல் உடலைத் தூய்மையாக்கும்.
மூர்ச்சா - மூர்ச்சை வரும் வரை செய்தல்.
கபாலபாதி - கபாலத்தை ஒளிமிகச் செய்தல்.
பிராணாயாமத்துக்கான எளிய  பயிற்சிகள்
நாடி சுத்தீ
நாடிகள் அழுக்குகளால் அடைப்பட்டு இருந்தால் அவற்றுள் வாயு வடிவப் பிராணன் நுழைய முடியாது. எனவே, நாடிகளைத் தூய்மையாக்கும் முறைகளில் நிர்மானு, சமானு என்ற இரண்டு வகைகள் உண்டு. நிர்மானு என்பது, உடலைத் தூய்மை ஆக்கும் முறைகளில் நாடி சுத்தம் செய்வது. சமானு என்பது வேதமந்திர பீஜ மந்திரத்துடன் மூச்சை இழுத்துவிட்டுச் செய்வது.
பிராணாயாமத்தின் பொதுவான அளவு 1:4:2. அதாவது, உள் மூச்சு ஒன்று, கும்பகம் நான்கு, வெளி மூச்சு இரண்டு. இப்படி ஒரே ஒரு பிராணாயாமம் தினமும் பழகினாலும் போதும்.  
செய்முறைகள்:
1 முதலில் கால்களைக் குறுக்காகப் போட்டுப் பத்மாசனத்தில் அமரவும். கண்களை மூடி, புருவ மையத்தில் மனதைப் பதிக்கவேண்டும். வலது கையின் பெருவிரலையும், கடை மூன்று விரல்களையும் பிரித்துக்கொண்டு மூக்கைப் பிடியுங்கள். வலது பெருவிரலால் மூக்கின் வலதுபக்கத் துளையை அடைத்துக்கொள்ளவும்.  இடது மூக்குத் துளை வழியே முடிந்தமட்டும் மூச்சை ஒரே சீராக ஓசையின்றி உள்ளே இழுங்கள். உடனே, அதே மூக்குத் துளை மூலம் மூச்சை மெள்ள, சீராகத் தொடர்ந்து வெளியே விடுங்கள். மீண்டும் மீண்டும் 12 முறை இப்படிச் செய்யவும். இது ஒரு சுற்று.
பிறகு, வலது மூக்கைத் திறந்து மற்ற மூன்று விரல்களால் இடது மூக்கை அடையுங்கள். பெருவிரலை எடுத்து மூக்கின் வலது பக்கமாக முடிந்த அளவு மூச்சை மெள்ள உள்ளே இழுங்கள். உடனே, அதே மூக்கு மூலம் மூச்சைச் சீராக வெளியே விடுங்கள். இதையும் 12 முறை செய்தால் ஒரு சுற்று. மூச்சை இழுக்கும்போதும் விடும் போதும் 'ஓம்அல்லது ஏதாவது மந்திரத்தை ஜபிக்கலாம்

முதல் வாரம், ஒரு சுற்று இரு மூக்கிலும் சேர்த்துச் செய்யுங்கள். இரண்டாம் வாரத்தில் இரண்டு சுற்றும், மூன்றாம் வாரத்தில் மூன்று சுற்றும் செய்யுங்கள். ஒரு சுற்றுச் செய்தவுடன் சில நிமிடங்கள் ஓய்வெடுத்துக் கொள்ளலாம். இந்த ஓய்வில் சாதாரணமாகவே சுவாசிக்கலாம். இதுவே ஓய்வுதான்.
இந்தப் பயிற்சியில் உள்ளே மூச்சை நிறுத்தும் கும்பகம் இல்லை. உங்கள் திறமைக்கேற்ப அதிகச் சுற்றுகளைப் பழகலாம்.
பலன்கள்: இது மூச்சை ஒழுங்குப்படுத்தும்.  இதனால் மூச்சளவு ஒரே சீராகி, நாள்பட்ட நோய்களையும் தீர்க்கும். உடலில் பலமும் கூடும்.  
2 இரு மூக்குத் துளைகளின் மூலமும் முடிந்த அளவுக்கு மூச்சை ஓசையின்றி ஒரே சீராக மெள்ள இழுத்து, நுரையீரல்களில் நிரப்பிக்கொள்ளவும். உடனே, அதேபோல இரண்டு மூக்குத் துளைகள் மூலமும் மூச்சை வெளியே விடவும். இதை 12 முறைகள் செய்ய ஒரு சுற்றாகும். நேரம், திறமைக்கு ஏற்ப அதிகச் சுற்றுகள் செய்யலாம். இதிலும் கும்பகம் இல்லை.
3உங்களுக்குத் தெரிந்த ஆசனம் எதுவோ அதுபோல் அமருங்கள். மூக்கின் வலதுபக்கத் துளையை வலப் பெருவிரலால் மூடி, மூக்கின் இடதுபக்கத் துளையில் சுவாசத்தை இழுங்கள். இடது துளையை மூடியவாறு வலது மூக்கு வழியாக மெள்ள இழுத்த காற்றை வெளியே விடுங்கள். வலமூக்கு வழியே முடிந்த அளவு காற்றை உள்ளிழுங்கள். இடமூக்கைத் திறந்து அதன் மூலம் உள்ளே இழுத்த காற்றை வெளியே விடுங்கள். இதிலும் கும்பகம் இல்லை. 12 முறை இதைச் செய்யலாம்.  இது, ஒரு சுற்றுக் கணக்கு. இதில் மூக்கு மாற்றிச் செய்வதே சிறப்பு.
4நாற்காலி, சோபாவில் வசதியாக அமர்ந்துகொள்ளுங்கள். இரு மூக்குத் துளைகள் மூலம் எவ்வளவு முடியுமோ அவ்வளவு மூச்சை உள்ளே இழுங்கள். முடிந்தவரை உள்ளே நிறுத்திக்கொள்ளுங்கள். பிறகு வெளியே சீராக மெள்ள நியமப்படி வெளியே விடுங்கள். இது எளிய கும்பகமாகும். உள்ளிழுத்தல், நிறுத்தல், வெளியேவிடலில் குறிப்பிட்ட விகிதம் எதுவும் அளவாக இல்லை. ஆனால், நன்கு இழுப்பது, முழுவதும் வெளிவிடுவதும், சுகமாக இருக்கும் வரை மட்டுமே அடக்குதலும் உண்டு.
பலன்கள்: ரத்த ஓட்டம் சீராகும். களைப்பு அகலும். உடல் உறுப்புகளிடையே ஒழுங்கு, ஒருங்கிணைப்பு உண்டாகும்.  மனம் ஒருநிலைப்படும். கோபம், தீய சிந்தனை அகலும். மன உறுத்தல், உளைச்சல் நீங்கும். படிப்பவர்களுக்கு நல்ல ஞாபகசக்தி தங்கும். மன ஆற்றல் அதிகரிக்க இந்தப் பயிற்சியைப் பழகலாம். சோர்வு இருக்காது. 30 வருட ஆஸ்துமா பிரச்னைகூட தீரும். ஒரு முறை செய்துவிட்டாலே அடிக்கடி செய்யத் தூண்டும் பயிற்சி இது.  
சீத்காரி
இதற்கு 'குளிரானதுஎன்று பொருள். செய்வது மிகவும் எளிது. இந்தக் கோடை காலத்தில் இதைச் செய்வதன் மூலம் உடல் வெப்பத்தைத் தணித்துக்கொள்ளலாம்.
ஏதேனும் ஓர் ஆசனம் போட்டு அமருங்கள். இரு வரிசைப் பற்களையும், சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள். வாய்க்குள் நாக்கை மேலண்ணத்தில் ஒட்டியவாறு  கொஞ்சம் மடித்துக்கொள்ளுங்கள். 'இஸ்ஸ்ஸ்...என்று காற்றை வாய்வழியே உள்ள பல் இடுக்கு வழியாக உறிஞ்சவேண்டும். முடிந்தவரை கும்பகம் செய்யலாம்.
காரம் நாவில் பட்டதும், அல்லது ஜில்லென ஐஸ் பட்டால் 'ஸ்..ஸ்என்று காற்றை இழுப்பது போலத்தான். பிறகு,  மெள்ள  மூக்கின் வழியே காற்றைச் சீராக வெளியேற்றுங்கள்.
வாயால் இழுத்து மூக்கால் வெளிவிடுவதால், முடிந்தவரை பற்கள் ஒன்றாக சேர்ந்தபடி இருக்கவேண்டும். கும்பகம் செய்யும்போது நாக்கின் நுனி மேலண்ணத்தில் தொட்டு அமுத்தியிருக்கவேண்டும். காலை, மாலையில் 10 முறை செய்யப் பழகுங்கள்.


சவாசனத்தில் பிராணாயாமம்
இது உடல் முழுவதுக்குமான பிராணாயாமம்.
சூடு இல்லாத சமமான ஒரு தரையில் விரிப்பைப் போட்டு, தரையில் முதுகு படும்படி மல்லாந்து படுங்கள்.  கைகளையும் கால்களையும் நன்றாக நீட்டிக்கொள்ளுங்கள். உடல் உறுப்புகளை விறைப்பு இன்றி கிடத்துங்கள். பக்கவாட்டில் நீண்டு கிடக்கும் கைகளில் உள்ளங்கைகள் மேலே பார்த்தபடி இருக்கட்டும். மூட வேண்டாம். பாதங்கள் நேரே சற்று விலகி இருக்கட்டும். உடலின் தசைகள், நரம்புகள், உறுப்புகள் எல்லாம் தளர்ந்து இருக்கட்டும். அகலமாக இருந்தால் கட்டிலில் கிடந்து இதைப் பண்ணலாம்.
இரு மூக்குத் துளைகள் மூலமாக ஓசையின்றி மூக்கு சுருங்குதலோ, விரிதலோ இல்லாமல் மெள்ள சீராக மூச்சை உள்ளே இழுங்கள். முடியும் வரை சிரமம் இல்லாத வரையில் மூச்சை உள்ளே நிறுத்துங்கள். விடத் தோன்றும்போது இரு மூக்கின் வழியாகவும் மெள்ளச் சீராக மூச்சை, தொடர்ச்சியாக வெளியே விடுங்கள்.
இப்படி காலையில் 10 முறையும், மாலையில் 10 முறையும் செய்து பழகுங்கள். மூச்சை இழுக்கும்போதும் விடும்போதும் 'ஓம்என்று ஜபிக்கலாம். கும்பகத்தின்போதும் ஜபிக்கலாம்.  
பலன்கள்: மனமும் உடலும் பூரண ஓய்வுகொள்கிறது. கொஞ்சம் வயதானவர்கள் சுகமாக இதைப் பயிற்சிக்கலாம். மனக்கொதிப்பு, மன அழுத்தம், மறதி, படபடப்பு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை குணமாகும். இதயம் இதமாக இருக்கும்.
    
நடந்துகொண்டே பயிற்சி
தோள் பட்டைகள் பின் செல்ல, தலை நிமிர்ந்து நடக்க வேண்டும். ஓர் அடிக்கு ஒன்று என, மூன்று அடிகள் எடுத்து, மூன்று 'ஓம்அல்லது ஏதாவது ஒரு மந்திரம் சொன்னபடி மெள்ள மூச்சை இழுங்கள். பிறகு, 12 அடிகள் எடுத்து வைத்து 12 'ஓம்களை ஜபித்து மூச்சை உள்ளே நிறுத்தி வையுங்கள். பிறகு, ஆறு அடிகள் எடுத்துவைத்து ஆறு 'ஓம்களைச் சொல்லி மெள்ள மூச்சை வெளியே விடவேண்டும். இது ஒரு சுற்று.  
இதன் பிறகு, சற்று ஓய்வாக நடக்கலாம். காலடி வைக்கும்போது 'ஓம்எனச் சொல்வது சிரமமாகத் தெரிந்தால், காலடி எடுத்து வைத்தல் பற்றிக் கவலைப்பட வேண்டாம். அதிக வேலைச் சுமையுள்ளவர்கள் வாக்கிங் போகும்போது காலையிலும் மாலையிலும் இதைச் செய்யலாம். சுத்தமான காற்றில் நடந்தபடியே பிராணாயாமம் செய்வது, உடலுக்கு மிகவும் சந்தோஷத்தைத் தரும். அமர்ந்திருந்து செய்தே பழகியவர்கள், இப்படி நடந்தபடியே செய்யலாம்.  
பலன்கள்: தாகமாக இருக்கும்போது இந்தப் பயிற்சியைச் செய்தால் தாகம் தீரும். முக அழகு கூடும். உடல் வலிமை உண்டாகும். பசி, தாகம், தூக்கத்தை வெல்லலாம். விஷத்தைக்கூட முறியடிக்கும் வல்லமை பெற்ற இந்தப்பயிற்சி, உடல் வெப்பத்தையும் குறைக்கும்.
நின்றுகொண்டே பிராணப் பயிற்சி செய்வது நல்ல பலனைத் தரும்.
சீதளிப் பிராணாயாமம்
இதுவும் குளிர்ந்த பிராணாயாமம்தான். சீதளம் எனில், குளிர்ச்சி என்று பொருள். கோடையில் வெளியில் அதிகம் அடிக்கும்போது செய்தால் குளிர்ச்சியாக இருக்கும். உடலில் இருந்து வெப்பம் காதுகள் வழியே வெளியேறுவதை உணரமுடியும்.
ஆசனத்தில் வசதியாக உட்கார்ந்துகொள்ளுங்கள். இரு உதடுகளின் இடையிலும் நாக்கைத் துருத்தி குழல் போல் மடித்து வெளியே நீட்டவும். இருபுறமும் மடிந்த நாக்கு நடுவில் குழல்போலப் பள்ளமாக இருக்கும். 'ஷ்என்று சீறும் ஓசையுடன் காற்றை வாய் வழியாக உள்ளே இழுத்திடுங்கள். பிறகு காற்றை விழுங்கிடுங்கள். சுகமாகப் படும்வரை மூச்சை உள்ளே அடக்கிக் கும்பகம் செய்திடுங்கள். (வெப்பத்தை மட்டும் குறைத்துக்கொள்ள விரும்புபவர்கள் கும்பகம் செய்ய தேவையில்லை.)  
பிறகு இரு மூக்குகளின் வழியே மெள்ள சீராக வெளியே விடுங்கள். இந்தப் பயிற்சி செய்வது எளிது. 10 முதல் 20 முறை பயிலலாம். நிற்கும்போது, நடக்கும்போது, எந்த நிலையிலும் எப்போதும் செய்யலாம்.
பலன்கள்: இது உடலை குளிர்விக்கும். செரிமானத்தைச் சரி செய்யும். பித்தக் கோளாறுகள், கபத் தொல்லை, தீராத நோய்களின் வீக்கம், புண், காய்ச்சல், இருமலை போக்கும். நா வறட்சி ஏற்படாது. தாகத்தைத் தீர்க்கும்.


நோய், களைப்பை அகற்றலாம்!
மனிதனின் உயர்வைக் கட்டுப்படுத்துவது களைப்புதான். அதன் அதீதம் அல்லது நீட்டிப்பே நோயை உண்டாக்குகிறது. வலி, வீக்கம், உடல் உறுப்பு கெடுதலுடன் அதிகம் முடியாமை  போன்றவை நோயினால் வருவதே. களைப்பை நீக்கும் பிராணாயாமம் நோயையும் விலக்குகிறது. காரணம், எல்லாமே மூச்சுதான்!
ஆழ்ந்து சுவாசிப்பதே ஆரோக்கியம் நீட்டிக்க உதவிடும். இருந்தாலும், பிராணனை மையப் படுத்தும் நுணுக்கங்கள் சில.  
 பிராணனை வெளியிலிருந்து உள்ளே இழுங்கள். வயிற்றில் அப்படியே நிரப்புங்கள்.
 தொப்புளுக்கு நடுவிலும், மூக்கின் முனையிலும், இரு கால் பெருவிரல்களிலும் இந்தப் பிராணன் இருப்பதாக மனதில் ஆழ்ந்து எண்ணவேண்டும். இது, அந்தந்த இடங்களில் பிராணனை மையப்படுத்தும்.
 இதை, சூரிய உதயத்துக்கு முன்பும், சூரியன் மறையும் மாலை வேளையிலும் செய்யலாம்.
 இப்படிச் செய்யும்போது அனைத்து நோய்களில் இருந்தும் விடுபடமுடியும். உடனடி பலனாகக் களைப்பு நீங்கும்.
தொப்புள் பகுதியில் பிராணன் நிறுத்தப்படுவதால் எல்லா நோய்களும் விலகுகின்றன. காரணம், அங்கே எல்லாப் பாகங்களுடனும் தொடர்புள்ள நாடிகள் வந்து சேரும் பகுதி உள்ளது. 'தம் கட்டுதல்தான் இந்த மூச்சுப் பயிற்சி.  எனவே, அது நீட்டிக்கும்போது களைப்பும் காணாமல் போய்விடும்.
மூக்கின் முனையில் மையப்படுத்துவதால் காற்றினுடைய தனித்தனிப் பொருள்கள் அத்தனையையும் ஆளும் திறன் உண்டாகும். அசுத்தம் நீங்கி, தூய பிராணன் நிலைபடும்.
கால் பெருவிரல்களில் நிறுத்தப்படுவதால் உடல் லேசாகும். உடல் கனம் நீங்குவது என்பது அழுக்கு நீங்குவதுதான்.
கும்பகம்:
குறிப்பிட்ட கால அளவில் மூச்சை நிறுத்துவதே கும்பகம் எனப்படும். அதாவது, மூச்சைச் சலனமின்றி, சஞ்சாரம் இன்றி ஓரிடத்தில் அடக்கிவிடுவது அல்லது நிறுத்திவிடுவது. இதையே பிராணன் ஆயமம் = பிராணாயாமம் என்கிறார்கள். இதைச் சார்ந்த மற்ற மூச்சு முறைகளும் அந்தப் பெயரிலேயே கூறப்படுகின்றன.
தம் கட்டுதல் என்கிறோமே அதுதான் இது. இதுவே பலம் ஆகிறது. பளு தூக்கும்போதோ, பேசும்போதோ பிராணாயாமம் நடக்கிறது. 'மூச்சைப் பிடித்துக்கொண்டு வேலை செய்கிறான்என்பார்கள்.  இது 'தம்’, 'ஸ்டாமினாஎனப்படும் மூச்சை அடக்கும் திறனையே குறிப்பதாகும்.  
அந்தர்முக கும்பகம் - மூச்சை உள்ளே நிறுத்துவது.
பஹிர்முக கும்பகம் - வெளியே மூச்சை நிறுத்துவது.
கேவல(தனி) கும்பகம் - உடனடியாக சுவாசம் தடைப்படுவது. அதாவது, மூச்சை உள்ளே இழுத்தல், வெளியே விடுதல் இல்லாமல் ஒருவருக்குள் மூச்சு திடீரென நிற்பது. இதுவே கேவல கும்பகம்.
மந்திரங்கள்:
பிராணாயாமப் பயிற்சியில் மூச்சை அளக்கவே மந்திரம் கூறப்படுகிறது.  'ஓம்எனும் பிரணவ மந்திரம், நாபிக் கமலத்தில் இருந்து உச்சரிக்கப்படுவதால், சுவாசத்தை சீராக இயக்கும். மந்திரத்தை ஜபித்தபடி செய்யும் பயிற்சியால் மனமும் ஒருநிலைப்படும். கும்பகத்தோடு மந்திரம் நல்ல பலனைத் தரும். காயத்ரி, ஓம், விருப்பமான தெய்வ மந்திரம், பஞ்சபூத பீஜாட்சரங்கள் சொல்லலாம். இவை, மூச்சின் அளவை அறியவும் உதவி செய்யும். மூச்சை முடிந்தவரை உள்ளிழுத்து, விடுவதும் கும்பகம் செய்வதும் இயற்கையாக அமைந்துவிடும். மந்திர நீளத்தில் சுவாசிப்பதும் கும்பகிப்பதும் அப்படியே.


கால அளவு:
மூச்சை வெளியிலோ, உள்ளேயோ நிறுத்தும் இடத்தையும் காலத்தையும் மாத்திரைகளின் மூலமாக அளக்கப்படும். கண்ணிமைத்துக் கண் திறப்பது ஒரு மாத்திரை. கையை மூடிவிட்டு திறக்கும் அளவே ஒரு மாத்திரையின் கால அளவை நிர்ணயித்துள்ளனர். மூச்சு விட்டு மூச்சு இழுப்பது ஓர் அளவே. சிறுசிறு நிகழ்ச்சிகளால் இப்படிக் கால அளவு கணிக்கப்படும். 'ஓம்என்பது அ, , ம அடங்கிய ஓர் எழுத்து.  இதைக் கொண்டும் மூச்சின் காலம் அளக்கப்படும். இதுவே ஆன்மிகமானது; நற்பயன் தருவது.  எனவே, பலரும் இந்தக் கால அளவை 'ஓம்என்றே அளந்துகொள்வார்கள்.
தரை விரிப்பு:
தரைவிரிப்போ, பருத்தித் துணி, பலகை அல்லது கம்பளி இன்றி வெறும் தரையில் உட்கார்ந்து பிராணாயாமம் செய்யக் கூடாது. இதனால் உடலின் பிராணனை தரை இழுத்துக் கொண்டுவிடும். பூச்சிகளால் இடையூறு ஏற்படலாம். தரையின் சூடோ, குளிரோ உடலைத் தாக்கலாம்.  
ஆசன அவசியம்
18 ஆசனங்களைப் பழகினால், பிராணாயாமப் பயிற்சியில் இடையூறு இருக்காது. அஜீரணமோ, மலச்சிக்கலோ, வாயுத் தொல்லையோ இருக்காது. இது, நாடிகளைத் தூய்மை செய்ய மிகவும் உதவும். சூட்டையும் குளிரையும் தாங்கும் சக்தி நமக்குள் பெருகும். மேலும், உடலை நிமிர்த்தி உட்காரும் முறையும் ஒழுங்குப்படும்.
காலத்துக்கேற்ப பயிற்சி!
வெயிலின்போது காலையில் மட்டும் பயிற்சி செய்தால் போதும். உடலில் உஷ்ணம் மிகுந்தால், உடலில் வெண்ணெய் தடவியும், தலையில் நெல்லிக்காய் எண்ணெய், தேங்காய் எண்ணெயைத் தடவி சிறிது நேரம் கழித்து குளிக்கலாம்.  சர்க்கரை அல்லது கற்கண்டை தண்ணீரில் கரைத்துக் குடிக்கலாம்.  நீர் மோராக கரைத்துக் குடிக்கலாம்.  துண்டை தண்ணீரில் நனைத்து உடலில் போட்டுக்கொள்ளலாம்.  அடிக்கடி உடலில் தண்ணீர் படும்படி செய்யலாம்.  இவை அனைத்தும் உடல் உஷ்ணமாகாமல் தடுக்கும்.
குளிர்ச்சியைத் தரவல்ல கேப்பைக் கூழில் மோர் கலந்து, வெண்டைக்காய், வெந்தயம் சேர்த்து உண்ணலாம்.  இரவிலும் பகலிலும் வாழைப்பழம், ஆரஞ்சுப்பழம் சாப்பிடலாம்.  
தக்காளி, முலாம், தர்ப்பூசணி போன்ற பழங்கள் உடலுக்குக் குளிர்ச்சியைத் தரும்.
குளியல்
குளித்துவிட்டுதான் பிராணாயாமம் செய்ய வேண்டும் என்பது இல்லை.  குளித்தால் தலையில் ஈரம் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். மெல்லிய துணியால் தலையை மூடிக்கொண்டு செய்யலாம்.  சிலருக்கு ஆசனம் போட குளித்தால்தான் உடல் வளையும்.  குளியல் குளிர்ந்த நீரிலா, வெந்நீரிலா என்று இடம், காலம் பார்த்து தேர்வு செய்துகொள்ளலாம்.  
செயலில் ஆரோக்கியம்!
இடது கைக்கு ஏதாவது தலையணையை அண்டக் கொடுத்து படிப்பது, டி.வி. பார்ப்பது போன்ற செயல்களில் ஈடுபடலாம்.  தூங்கும்போது எப்போதும் இடதுபுறம் ஒருக்களித்துப் படுங்கள். எப்போதும் பகலில் வலதுபுறம் சாய்ந்து வலதுபுற கைக்கு அடியில் ஏதாவது திண்டை வைத்துக்கொண்டு படிக்கலாம். அலுவலகம் எனில், வலதுபுறம் சாய்ந்த நிலையில் வேலையைப் பாருங்கள்.  இடதுகாலின் மேல் வலதுகாலைப் போட்டுக்கொள்ளுங்கள். இயற்கையாகவே இப்படி நடக்கலாம்.  ஆனால், பிறருக்கு விநோதமாகப் படக்கூடாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும். சுவாசம் சுகமானது!
நன்றி-டாக்டர் விகடன் 

Read more...

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP