விண்டோஸ் எக்ஸ்பியில் தொடர ஆண்டுக்கு ரூ. 1,190 கோடி!
Saturday, March 15, 2014
இந்தியாவில் நிறுவனங்கள், குறிப்பாக வங்கிகளும், நிதி நிறுவனங்களும் தங்கள் பெர்சனல் கம்ப்யூட்டர்களில், விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்தி வருகின்றனர். மைக்ரோசாப்ட், எக்ஸ்பிக்கு தந்து கொண்டிருக்கும் ஆதரவினை வரும் ஏப்ரல் 8 அன்று முடிவிற்குக் கொண்டு வருகிறது. இதன் பின்னரும், இந்நிறுவனங்கள், தொடர்ந்து எக்ஸ்பி சிஸ்டம் பயன்படுத்த முடிவு செய்தால், அதற்காக ஆண்டுக்கு ரூ.1,190 கோடி செலவு செய்திட வேண்டியதிருக்கும் என எச்சரிக்கை தரப்பட்டுள்ளது.
இந்தியாவில், பெரிய நிறுவனங்களில், ஏறத்தாழ 40 லட்சம் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் எக்ஸ்பி சிஸ்டத்துடன் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் 84 சதவீத கம்ப்யூட்டர்கள், எக்ஸ்பியிலிருந்து வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு மாறிவிட்டன. மற்றவர்களில் பெரும்பாலானவை பொதுத் துறை நிறுவனங்களாக உள்ளன. மேலும் 6 சதவீத நிறுவனங்கள் எக்ஸ்பியிலிருந்து வரும் நாட்களில் மாறிக் கொள்ளும் என்று எதிர்பார்ப்பதாக, மைக்ரோசாப்ட் இந்தியா நிறுவன உயர் அதிகாரி கோயல் தெரிவித்துள்ளார்
0 comments:
Post a Comment