நல்லதை உடனே செய்க!
Wednesday, March 26, 2014
கடவுளை வழிபட வாத்தியம் எதுவும் தேவையில்லை. நெகிழ்ச்சியோடு உள்ளம் உருகி அழும் கண்ணீரே மேலான வழிபாடு.
* கடவுள் ஒரு கற்பனைப் பொருள் அல்ல. ஒவ்வொருவரும் என்றாவது ஒருநாள் அடைய வேண்டிய சத்தியப்பொருள்.
* மனிதப் பிறவி நமக்கு வாய்த்திருக்கிறது. அதைக் கொண்டு நல்ல செயல்களை உரிய நேரத்தில் செய்து முடிக்க வேண்டியது நம் கடமை.
* கடவுளுக்கு செலவு செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருந்தால் அதை ஏழைகளுக்காக செலவழியுங்கள்.
* கடவுளை சரணடைந்தால் ஒழிய பொய், பொறாமை போன்ற தீய பண்புகள் நம்மை விட்டு நீங்காது.
* ஜீவகாருண்யத்துடன் எல்லா உயிர்களையும் நேசித்து வாழ்வதே பேரின்ப வீட்டின் திறவுகோல்.
* பகட்டாக உடை உடுத்துவதும், ஆடம்பரமாக நடப்பதும் ஆன்மிக வாழ்விற்குப் புறம்பான செயல்கள்.
வள்ளலார்
0 comments:
Post a Comment