கடவுள் மட்டுமே சத்தியம்
Wednesday, March 26, 2014
* கடவுளுக்குச் செலவு செய்ய வேண்டும் என்று எண்ணம் இருந்தால் அந்தப் பணத்தை ஏழைகளின் வயிற்றுப் பெட்டியில் நிரப்புங்கள்.
* இறைவன் வெறும் கற்பனைப் பொருள் அல்ல. அருள் தாகத்துடன் ஒவ்வொருவரும் அவரவருக்குள் அடைய வேண்டிய சத்தியப்பொருள்.
* பிறர் குற்றங்களைப் பொருட்படுத்தாதீர்கள். உங்கள் வாழ்வில் எவ்விதக் குற்றமும் நேராமல் பார்த்துக் கொள்ளுங்கள்.
* ஏழைகளின் பசியைப் போக்கி இறையருளைப் பெற்று இன்புறுங்கள். அதுவே பிறவிப்பயன்
* கடவுளைச் சரணடைந்து வழிபடாவிட்டால், பொய், பொறாமை போன்ற தீய பண்புகளை நம்மால் அகற்ற முடியாது.
* கொடுமையான நோன்பு நோற்பதைக் காட்டிலும் உயிர்களை அன்புடன் நேசித்து கொல்லாவிரதம் மேற்கொள்வது சிறந்தது.
* வெள்ளம் வருமுன்னே அணை போட்டுத் தடுப்பது போல, தீய சிந்தை மனதில் எழுவதற்கு முன்பே தடுத்து நிறுத்துவது மேலானது.
வள்ளலார்
0 comments:
Post a Comment