பார்த்த,படித்த செய்திகள்

கட்டங்கள் அமைத்து டெக்ஸ்ட், படம் அமைக்க!

Saturday, March 22, 2014

வேர்ட் தொகுப்பில் பக்கங்களை அமைக்கையில் டெக்ஸ்ட், வரை படங்கள், படங்கள், கிளிப் ஆர்ட் எனப் பலவகை அமைப்பை டாகுமெண்ட்டுக்குள் கொண்டு வர முயற்சிப்போம். அப்போது நமக்கு கோடுகள் அமைந்த கட்டங்கள் இருந்தால் இவற்றை சரியான இடத்தில் அமைத்து அழகாக டாகுமெண்ட்டை உருவாக்க வசதியாக இருக்கும். இதற்காக டெக்ஸ்ட்டின் ஒரு பகுதியாக கட்டங்கள் அமைத்தால் அவையும் அச்சில் வந்து டாகுமெண்ட்டின் அழகைக் கெடுத்துவிடும். இதற்குப் பதிலாகப் பின்னணியில் ஒரு கட்டம் அமைத்து அவை நீக்கப்படுவதற்கான வழியையும் அமைத்துத் தரலாம். இதற்கு View மெனுவில் Toolbars என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். பின் கிடைக்கும் பிரிவுகளில் Drawing என்பதில் கிளிக் செய்திடவும். இப்போது Drawing Toolbar கிடைக்கும். இதில் Draw என்பதில் கிளிக் செய்து பின் Grid என்பதைக் கிளிக் செய்திடவும். பின் உள்ள பிரிவில் 'Display gridlines on screen' என்பதைத் தேர்ந்தெடுத்து நெட்டுவாக்கிற்காகவும் படுக்கைவாகிற்காகவும் ஒரு அளவைத் தேர்ந்தெடுத்து அமைக்கவும். இதன் பின் OK கிளிக் செய்து வெளியேறவும். இந்த கிரிட் கட்டம் தோற்றத்தில் மட்டும் வைத்துப் பயன்படுத்தும் வகையில் நமக்குக் கிடைக்கும். இதனைப் பயன்படுத்தி நாம் டெக்ஸ்ட் உட்பட படங்கள், வரைபடங்கள், போட்டோக்கள் போன்றவற்றைச் சரியாக அமைக்கலாம்
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP