samsung galaxy s5
Sunday, March 09, 2014
அண்மையில் பார்சிலோனா நகரில் நடந்தேறிய மொபைல் பன்னாட்டு கருத்தரங்கில், மொபைல் உலகில் அசுர வேகத்தில் வளர்ந்து வரும் சாம்சங் நிறுவனம், பல மாதங்களாக எதிர்பார்த்து வரும் சாம்சங் காலக்ஸி எஸ் 5 மொபைல் போனை அறிமுகப்படுத்தியது.
1920 X 1080 பிக்ஸெல் திறனுடன் 5.1 அங்குல அளவில், சூப்பர் AMOLED டிஸ்பிளே தரும் எச்.டி.திரை, 2.5 கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் குவாட் கோர் குவால்காம் ஸ்நாப்ட்ரேகன் 801 ப்ராசசர், ஆண்ட்ராய்ட் 4.4 கிட்கேட் இயக்கம் எனப் பெரும்பாலும் மக்கள் எதிர்பார்த்த அம்சங்களுடன் இது வடிவமைக்கப்பட்டுள்ளது.
இதன் கேமரா, ஏற்கனவே தரப்பட்டவையிலிருந்து மேம்படுத்தப்பட்டதாக உள்ளது. எல்.இ.டி. ப்ளாஷ் இணைந்து 16 மெகா பிக்ஸெல் திறனுடன் கூடிய கேமரா பின்புறமாகத் தரப்பட்டுள்ளது. இதன் வீடியோ 4 கே திறனுடன் இயங்குகிறது. Selective Focus, Virtual Tour Shot போன்ற கூடுதல் அம்சங்களும் இதன் சிறப்பைக் காட்டுகின்றன.
முன்புறமாக, 2.1 மெகா பிக்ஸெல் திறனுடன் ஒரு கேமரா தரப்படுகிறது. உலகிலேயே இத்தகைய கேமராக்களில், மிக அதிக ஸ்பீட் கொண்ட ஆட்டோ போகஸ் இதில் தரப்பட்டுள்ளது என சாம்சங் அறிவித்துள்ளது. 0.3 நொடிகளில் இது போகஸ் செய்கிறது. தூசு மற்றும் நீர் தடுப்பில் இது IP67 ரேட்டிங் கொண்டுள்ளது.
ஆப்பிள் போனைப் பின்பற்றி, இந்த போனில் விரல் ரேகை ஸ்கேனர் தரப்பட்டுள்ளது.இது முழுமையான பாதுகாப்பினையும், பயோமெட்ரிக் ஸ்கிரீன் லாக்கிங் சிஸ்டத்தினயும் தருகிறது. இதன் எஸ். ஹெல்த் 3.0 (S Health 3.0) டூல், பெடோ மீட்டர், டயட் மற்றும் உடல் பயிற்சி பதிவு செய்திட வசதி, புதிய இதயத் துடிப்பினை அளக்கும் டூல் என அனைத்தும் பெற்றுள்ளது. தேகப் பயிற்சி செய்திடுகையில், இதயத் துடிப்பினை அளக்கும் டூலைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
இதன் பேட்டரி 2,800 mAh திறன் கொண்டது. இதனுடன் இணைந்து கிடைக்கும், Ultra Power Saving Mode போனின் டிஸ்பிளேயினை தேவை இல்லாத போது கருப்பு வெள்ளையாக மாற்றுகிறது. தேவையற்ற, பயன்படுத்தாத அப்ளிகேஷன்களை அணைத்து வைக்கிறது. இதனால், பேட்டரி செலவு குறைகிறது. Download Booster எனப்படும் புதிய வகை வை-பி தொழில் நுட்பம், டவுண்லோட் வேகத்தினை அதிகப்படுத்துகிறது.
இந்த போனின் தடிமன் 8.1 மிமீ. எடை 145 கிராம். இதன் ராம் மெமரி 2 ஜி.பி. ஸ்டோரேஜ் மெமரி 16/32 ஜிபி. இதனை மைக்ரோ எஸ்.டி. கார்ட் மூலம் 64 ஜிபி வரை உயர்த்திக் கொள்ளலாம். நெட்வொர்க் இணைப்பிற்கு 4G LTEA, WiFi 802.11ac (2X2 MIMO), Bluetooth v4.0 LE, GPS, USB 3.0 and NFC ஆகிய தொழில் நுட்பங்கள் இயங்குகின்றன.
நல்ல கருப்பு, வெள்ளை, எலக்ட்ரிக் புளு மற்றும் காப்பர் தங்க வண்ணங்களில் எஸ் 5 கிடைக்கிறது. ஏப்ரல் மாதம், உலகின் அனைத்து நாடுகளிலும் விற்பனைக்குக் கிடைக்க இருக்கும் இந்த போனின் விலை குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் இல்லை
0 comments:
Post a Comment