பார்த்த,படித்த செய்திகள்

நோக்கியாவின் முதல் ஆண்ட்ராய்ட் போன் நோக்கியா எக்ஸ்

Monday, March 31, 2014

நோக்கியா நிறுவனம் தன் முதல் ஆண்ட்ராய்ட் மொபைல் போனை நோக்கியா எக்ஸ் என்ற பெயரில், சென்ற வாரம் இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்துள்ளது. இது குறித்து, பிப்ரவரியில் நடந்த உலக மொபைல் கருத்தரங்கில் அறிவிப்பு தரப்பட்டது. விண்டோஸ் 8 போல டைல்ஸ் அடிப்படையிலான ஹோம் ஸ்கிரீன் இதில் தரப்பட்டாலும், இது ஆண்ட்ராய்ட் 4.1 ஜெல்லி பீன் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் இயங்குகிறது. 4 அங்குல அகலத்தில் கெபாசிடிவ் டச் ஸ்கிரீன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது. ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் செயல்படும் குவால்காம் ஸ்நாப்ட்ராகன் ப்ராசசர் (S4 play MS M8225) இயங்குகிறது.
இதில் இரண்டு சிம் இயங்குவது இதன் இன்னொரு சிறப்பம்சமாகும். 3 மெகா பிக்ஸெல் திறன் கொண்ட கேமரா பின்புறமாக இயங்குகிறது. நோக்கியா ஸ்டோரிலிருந்து ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன் தொகுப்புகளை டவுண்லோட் செய்திடும் வசதி தரப்பட்டுள்ளது. Facebook, LINE Messenger, Picsart, Plants vs. Zombies 2, Real Football 2014, Skype, Spotify, Swiftkey, Twitter, Viber, Vine, WeChat, TrueCaller போன்ற பல அப்ளிகேஷன்கள் மற்றும் விளையாட்டுக்கான புரோகிராம்கள் இங்கு கிடைக்கின்றன.
இதன் பரிமாணம் 115.5 x 63 x 10.44 மிமீ. எடை 128.6 கிராம். 3.5 மிமீ ஆடியோ ஜாக், எப்.எம். ரேடியோ, 512 எம்.பி. ராம் நினைவகம், 4 ஜிபி ஸ்டோரேஜ், மைக்ரோ எஸ்.டி. கார்ட் விரிவாக்கம், நெட்வொர்க் இணைப்பிற்கு 3ஜி, வை-பி, புளுடூத், ஜி.பி.எஸ்., ஆகிய தொழில் நுட்பங்கள் எனப் பல வŒதிகள் இயங்குகின்றன. இதன் பேட்டரி 1500 mAh திறன் கொண்டதாக உள்ளது. கருப்பு, வெள்ளை, சிகப்பு, இளஞ்சிகப்பு மற்றும் பச்சை வண்ணங்களில் இது கிடைக்கிறது. இதன் அதிக பட்ச விலை ரூ.8,599.
இதன் அறிமுக விழாவிலேயே, நோக்கியா நிறுவனம், தன் நோக்கியா எக்ஸ் ப்ளஸ் மற்றும் நோக்கியா எக்ஸ்.எல். ஆகிய இரு போன்களையும் வரும் இரண்டு மாத காலத்தில் இந்தியாவிற்கு விற்பனைக்கு அனுப்ப இருப்பதாக அறிவித்தது. இவை இரண்டும் இரண்டு சிம் இயக்கத்தினைக் கொண்டுள்ள ஆண்ட்ராய்ட் ஸ்மார்ட் போன்களாகும். நோக்கியா எக்ஸ் ப்ளஸ், ஏறத்தாழ நோக்கியா எக்ஸ் மாடல் போனைப் போன்றதாகும். ஆனால், இதன் ராம் மெமரி 768 எம்.பி. உடையதாக உள்ளது. எக்ஸ் ப்ளஸ் திரை 4 அங்குல அகலத்திலும், எக்ஸ் எல் 5 அங்குல அகலத்திலும் திரைகளைக் கொண்டுள்ளது. இரண்டிலும் ஒரு கிகா ஹெர்ட்ஸ் வேகத்தில் இயங்கும் ப்ராசசர்களைக் (MSM8225) கொண்டுள்ளன. நோக்கியா எக்ஸ் ப்ளஸ் மாடல் போனில் 3 எம்.பி. திறன் கேமராவும், எக்ஸ். எல். போனில் 5 எம்.பி. திறன் கொண்ட கேமராவும் இணைக்கப்பட்டுள்ளன. எக்ஸ்.எல்.மாடலில் முன்புறமாக 2 எம்.பி. திறன் கொண்ட கேமரா ஒன்றும் தரப்பட்டுள்ளது. இவை இரண்டும் 3ஜி நெட்வொர்க் இணைப்பில் செயல் படுபவை என அறிவிக்கப்பட்டுள்ளது
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்

0 comments:

தொடர்பு கொள்ள

Name

Email *

Message *

என்னைப்பற்றி

My Photo
Arul
திருப்பூர், தமிழ்நாடு, India
இணையதளம் மற்றும் புத்தகத்தில் படித்த தொழில்நுட்ப செய்திகளின் முக்கிய தொகுப்புகள்
View my complete profile

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP