சைவமாக மாறுவது ஆரோக்கியத்துக்கு நல்லது'
Saturday, March 15, 2014
சைவமாக இருந்தால், ரத்தஅழுத்தம், உடல் எடை, கொலஸ்ட்ரால் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவும் குறைக்கப்படுகிறது. இதுபோன்ற பலன்களால், ரத்தநாளங்களின் ஆரோக்கியமும் மேம்படும். இதுதவிர, உணவுப் பாதையிலும், ஜீரண சக்தி அதிகரிக்கிறது
சமீபத்தில் நடத்திய மருத்துவ ஆய்வில், அசைவம் சாப்பிடுவோரை விட, சைவம் சாப்பிடுவோரின் ஆயுட்காலம், நீண்டதாக உள்ளது என, கண்டறியப்பட்டுள்ளது. இதுமட்டும்இன்றி, சைவமாக இருந்தால், ரத்தஅழுத்தம் குறைக்கப்படுகிறது. இத்துடன் உடல் எடை, கொலஸ்ட்ரால் மற்றும் ரத்தத்தில் சர்க்கரை அளவும் குறைக்கப்படுகிறது. இதுபோன்ற பலன்களால், ரத்தநாளங்களின் ஆரோக்கியமும் மேம்படும். இதுதவிர, உணவுப் பாதையிலும், சைவமாக இருப்போருக்கு ஜீரண சக்தி அதிகரிக்கிறது. சைவமாக உள்ள பெரும்பாலோருக்கு, மனக்கட்டுப்பாடும் உள்ளதால், அவர்கள் வாழ்க்கை முறையையும் சரியாக்கி கொள்கின்றனர். குறிப்பாக, உடற்பயிற்சி செய்து, உடலுக்கு ஆரோக்கியம் ஏற்படுத்தும் மனநிலைக்கு மாறி விடுகின்றனர். எனவே, நீங்கள் தொடர்ந்து சைவமாக இருப்பது சிறந்த பழக்கம்
0 comments:
Post a Comment