நல்லதற்கே மனதில் இடம்
Sunday, March 16, 2014
நல்லதற்கே மனதில் இடம்
PDF கோப்பாக Download செய்ய இங்கு க்ளிக் செய்யவும்
மனதை அடக்க நினைத்தால் அலையும். அறிய நினைத்தால் அடங்கிவிடும். தாழ்த்திக் கொள்வதும் உயர்த்திக் கொள்வதும் மனிதனிடமே இருக்கிறது.
எல்லாருக்கும் நன்மை தரும் நல்ல விஷயங்களுக்கு மனதில் இடம் அளியுங்கள்.
எண்ணத்தில் உறுதியும் ஒழுங்கும் இருந்தால் விரும்பியதை அடைய முடியும்.
தேவையான இடத்தில் நீங்கள் கோபம் கொள்வது போல நடிக்கலாம். அதுவும் ஒருவரைத் திருத்தும் நோக்கில் மட்டுமே வெளிப்பட வேண்டும்.
எந்தச் சூழ்நிலையிலும் கோபம் வரவில்லை என்றால் ஞானம் வந்து விட்டது என்று பொருள்.
இறைவனை முழுமையாகச் சரணடைந்து விட்டால் மனதில் ஆணவம் உண்டாகாது.
ஒரு செடியைப் பார்த்துக் கூட "வாழ்க வளமுடன்' என்று வாழ்த்தலாம். அதனால், அச்செடியின் பலவீனம் நீங்கி நன்கு வளரத் தொடங்கிவிடும்.
வீட்டில் அன்பு, அருள் நிறைந்த நல்லவர்களின் உருவப்படங்களை மாட்டி வையுங்கள். இதன்மூலம் அமைதியும், மகிழ்ச்சியும் பெருகும்.
வேதாத்ரி மகரிஷி ஆன்மிக சிந்தனைகள்
0 comments:
Post a Comment